மேலும் அறிய

காலை முக்கியச் செய்திகள்: பிரியாது தமிழ்நாடு... இந்தியா டெஸ்ட் ஆரம்பம்...ஓபிஎஸ்-இபிஎஸ் ஆஜர்... இன்னும் பல!

கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

* பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்பட 15 கட்சி தலைவர்கள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஏற்பாடு செய்த கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.

* தமிழ்நாட்டில் நேற்று 1908 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இதுநாள்வரையிலான கொரோனா பாதிப்பு 25,65,452 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் அரசு மருத்துவமனையில் 23 பேரும் தனியார் மருத்துவமனையில் 6 பேரும் என மொத்தம் 29 பேர் உயிரிழந்துள்ளனர். 

* அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.

* சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு தேர்வு மதிப்பெண் பட்டியல்  வெளியானது. 

* ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் ரத்து. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு  ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது என தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், புதிய சட்டம் கொண்டு வர தமிழ்நாடு அரசுக்கு எந்த தடையும் இல்லை என்றது.

* அதிமுகவில் இருந்து புகழேந்தி நீக்கப்பட்டது தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் அவர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

* தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கபாலீஸ்வரர் திருக்கோயிலில் அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்யவிருக்கும் விவரம் குறித்த பதாகையினை  இன்று வெளியிட்டார். அந்தப் பதாகையில், குருக்களின் பெயர்களும் அலைபேசி எண்களும் இடம்பெற்றுள்ளது. 

* டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டி அரை இறுதி போட்டியில் இந்தியா – பெல்ஜியம் அணிகள் நேற்று மோதின. இதில்,  5-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. இதனால் ஃபைனல்ஸ் செல்லும் வாய்ப்பை இழந்த இந்திய அணி, வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் ஆட உள்ளது. 

* டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் வெண்கலம் வென்ற வீராங்கனை பி.வி.சிந்து நேற்று நாடு திரும்பினார். அவருக்கு மத்திய அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், கிஷண் ரெட்டி, அனுராக் தாகூர் ஆகியோர் பங்கேற்றனர்.

* இங்கிலாந்து-இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று மதியம் 3.30 மணிக்கு ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் தொடங்க உள்ளது.

* உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தனித்து போட்டியா? - சென்னை அதிமுக அலுவலகத்தில் நிர்வாகிகள் இன்று அவசர ஆலோசனை

* தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் விளக்கம் அளித்தார்.

மேலும் இது போன்ற செய்திகளை உடனுக்குடனும், சுருக்கமாகவும், விளக்கமாகவும் அறிய:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka GandhiTVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"மூளையில் ரத்தக்கசிவு" ஐசியூவில் வினோத் காம்ப்ளி.. உயிருக்கு போராடும் சச்சினின் நண்பர்!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Minister MRK Pannerselvam:  கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
All Pass Cancelled: 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக்! ஃபெயில் ஆனால் அதே வகுப்புதான்! மத்திய அரசின் புது உத்தரவு!
All Pass Cancelled: 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக்! ஃபெயில் ஆனால் அதே வகுப்புதான்! மத்திய அரசின் புது உத்தரவு!
Embed widget