மேலும் அறிய
Advertisement
இன்றைய முக்கிய செய்திகள்: சட்டமன்ற போட்டோ திறப்பு... சீன வெள்ளம்... இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் இன்னும் பல!
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
- சட்டசபையில் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைத்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
- அறியாமைக்கும் ஏழ்மைக்கும் எதிராக குரல் கொடுத்தவர் கருணாநிதி – சட்டப்பேரவையில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் புகழாரம்
- சட்டசபையில் கருணாநிதியின் உருவப்பட திறப்பு – பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள் – முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
- ஒலிம்பிக்கில் வட்டு எறிதலில் இறுதிப்போட்டியில் 6வது இடத்தை பிடித்தார் இந்திய வீராங்கனை கமல்பிரித்கவுர்
- ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா
- ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி அரையிறுதியில் பெல்ஜியத்தை இன்று எதிர்கொள்கிறது இந்திய ஹாக்கி அணி
- நிதிநிலை அறிக்கை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்
- நாகை மாவட்ட மீனவர் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு – தலையில் குண்டு பாய்ந்து மீனவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
- தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதியதாக 1957 பேருக்கு கொரோனா பாதிப்பு
- தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 28 பேர் கொரோனாவால் உயிரிழப்பு
- இ- ரூபி எனப்படும் மின்னனு பணப்பரிவர்த்தனை முறையை காணொலி காட்சி மூலம் தொடங்கினார் பிரதமர் மோடி
- லடாக் எல்லையில் படைகளை திரும்ப பெறுவது தொடர்பாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் – இந்தியா – சீனா கூட்டறிக்கை
- எம்.பி. பதவியில் நீடிப்பேன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ பேட்டி
- நாடு முழுவதும் 24 போலி பல்கலைகழகங்கள் கண்டுபிடிப்பு – மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அதிர்ச்சி தகவல்
- எல்லைப்பிரச்சினை விவகாரம் : அசாம் முதல்வர் மற்றும் அதிகாரிகள் மீதான வழக்கை வாபஸ் பெற மிசோரம் முதல்வர் உத்தரவு
- மத்திய பிரதேசத்தில் கனமழையால் வீடுகளை சூழ்ந்த வெள்ளம் : ஹெலிகாப்டர் மூலம் மக்கள் மீட்பு
- உத்தரபிரதேசத்தில் டாக்சி ஓட்டுநரை கன்னத்தில் அறைந்த பெண் : வழக்குப்பதிவு செய்த போலீசார்
- கொலை வழக்கு : மல்யுத்த வீரர் சுஷில்குமார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
- கொரோனா தடுப்பூசி ஸ்புட்னிக் வி செப்டம்பர் மாதம் இந்தியாவில் உற்பத்தி
- ஆகஸ்ட் 16-ந் தேதி முதல் சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்புகளுக்கான துணைத்தேர்வு
- ஈரான் நாட்டின் புதிய அதிபராக இப்ராஹிம் நாளை மறுநாள் பதவியேற்பு – இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்பு
- அமெரிக்காவில் பாதாள சாக்கடையில் இருந்து திடீரென வெளியேறிய நீரால் சாலைகளில் வெள்ளம்
- சீனாவில் ஏற்பட்ட வெள்ளத்தினால் 302 பேர் உயிரிழப்பு
- இந்தியா- இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை ட்ரென்ட் பிரிட்ஜில் தொடங்குகிறது
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
இந்தியா
உடல்நலம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion