Today Headlines 22 dec: எய்ம்ஸ் மாணவர் சேர்க்கை... அரையிறுதியில் தமிழ்நாடு... அதிகரித்த ஒமிக்ரான்... இன்னும் பல!
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளைத் தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
* ‛மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 50 மாணவர்கள் சேர்க்கை’ - அமைச்சர் மா.சு., பேட்டி!
* முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் கண்ணீருடன் அஞ்சலி
* மருத்துவம் சார்ந்த பட்டபடிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு
* தமிழக மீனவர்களை மீட்க இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் : மத்திய அரசுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை
* கருத்து சுதந்திரம் என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசலாமா..? சாட்டை துரைமுருகனுக்கு மதுரைக்கிளை எச்சரிக்கை
* சாமியார் சிவசங்கர் பாபா மீது மேலும் 3 போக்சோ வழக்குகள்
* திருவாரூர் ஆழித் தேரோட்டம்: மார்ச் 15ல் நடைபெறுவதாக அமைச்சர் சேகர்பாபு தகவல்!
இந்தியா:
* இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் யூடியூப் சேனல்கள் முடக்கம்
* தேர்தல் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்: திமுக, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
* கொல்கத்தா மாநகராட்சியில் திரிணாமுல் கட்சி ஹாட்ரிக் வெற்றி : ஒரு இடத்தை மட்டுமே பிடித்து பாஜக படுதோல்வி
* இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 215 ஆக அதிகரிப்பு : பரவலை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை
* புதுச்சேரியில் பொதுமக்கள் மாஸ்க் அணிவது கட்டாயம் : மீறினால் 100 ரூபாய் அபராதம்.
உலகம்:
* `உலகின் முதல் டெஸ்லா பேபி’ - அமெரிக்காவில் டெஸ்லா காரில் பிறந்த குழந்தை!
* அமெரிக்காவில் முதல் ஓமைக்ரான் மரணம்: தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர் டெக்சாஸில் இறப்பு!
* ஆஸ்திரேலிய நாட்டில் ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் உலகம் முழுவதும் 1500 மொழிகள் அழிய வாய்ப்பு
* இலங்கையில் மேலே இழுத்து சென்ற காத்தாடி.. காயமடைந்த இளைஞர்..வெளியான அதிர்ச்சி வீடியோ!
விளையாட்டு:
* விஜய் ஹசாரே கோப்பை தொடரில் கர்நாடகாவை வீழ்த்தி தமிழக அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்.
* கபில்தேவ் வாழ்க்கை வரலாறு திரைப்படத்திற்கு வரி விலக்கு- டெல்லி அரசு
* 14 வயது சிறுமி பாலியல் புகார்: பாக்., கிரிக்கெட் வீரர் யாசிர் ஷா மீது வழக்குப்பதிவு..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்