10 நாட்களாக கல்லூரிக்குள் சுற்றித்திரிந்த புலி பத்திரமாக மீட்பு!
பத்து நாட்களாக கல்லூரிக்குள் சுற்றித்திரிந்த புலி மீட்கப்பட்டுள்ளது.
போபால் மாநிலத்தில் உள்ள மெளலானா அச்சாத் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் ( Maulana Azad National Institute of Technology's (MANIT)) கடந்த வாரம் நுழைந்த புலி பிடிக்கப்பட்டு பாதுகாப்பான வனப்பகுதிக்குள் விடப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதே கல்வி நிறுவனத்திற்குள் நுழைந்த இரண்டாவது புலி இதுவாகும். கடந்த முறை இப்பகுதிக்குள் நுழைந்த புலி T-123-4 என்று பெயரிடப்பட்டது. இது இரண்டு மாடுகளை கொன்றது. ஆனால், இந்த புலி இரண்டு நாட்களுக்கு முன் கல்வி நிறுவனத்தை விட்டு வெளியேறியாத தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் புலியின் நடமாட்டம் பதிவாகியுள்ளது. இதைவைத்து வனத்துறையினர் புலியை பிடித்தனர். தற்போது, நர்மதாபுரம் பகுதியில் உள்ள சட்புரா புலிகள் காப்பகத்தில் விடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கல்வி நிறுவனத்தில் 16 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், 50 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டு வருவதாக வனதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிறுவனத்தில் 600க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வகுப்பு நடைபெறுகிறது. இந்த நிறுவன வளாகத்தில் 5000 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கும் இடத்தில் அடிக்கடி புலி வருவதை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க..
அறுவை சிகிச்சை செய்து கொண்ட குடியரசு தலைவர் திரௌபதி முர்மு... உடல்நிலை எப்படி இருக்கிறது?