மேலும் அறிய
Advertisement
தமிழ்நாடு வரும் பிரதமர் நரேந்திர மோடி; முழு பயண விபரம் இதோ
பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டு நாள் சுற்றுப்பயணம் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி வரும் எட்டாம் தேதி சனிக்கிழமை (நாளை) பகல் ஒன்று முப்பத்தைந்து மணிக்கு, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பேகம்பேட் விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப்படை தனி விமானத்தில் புறப்பட்டு, பிற்பகல் 2:45 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். பிற்பகல் 2:50 மணிக்கு சென்னை பழைய விமான நிலையத்திலிருந்து காரில் புறப்பட்டு, 2:55 மணிக்கு சென்னை விமான நிலைய புதிய முனையத்திற்கு வருகிறார்.
புதிய விமான முனையம் திறப்பு
மாலை 3 மணியிலிருந்து 3:15 மணி வரை, புதிய முனையத்தின் திறப்பு விழாவை நடத்துகிறார். அதன் பின்பு மாலை 3:20 மணிக்கு காரில் புறப்பட்டு, மாலை 3:25 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார்.
ஹெலிகாப்டரில் பயணம்
சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து மாலை 3:30 மணிக்கு இந்திய விமானப்படை ஹெலிகாப்டரில் புறப்பட்டு, மாலை 3 50 மணிக்கு, சென்னை ஐஎன்எஸ் அடையார் சென்றடைகிறார். மாலை 3:55 மணிக்கு அங்கிருந்து காரில் புறப்பட்டு, மாலை 4 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் செல்கிறார்.
வந்தே பாரத் ரயில் துவக்கம்
அங்க மாலை 4 மணியிலிருந்து 4:20 மணி வரை, சென்னை கோவை இடையே அதிவிரைவு ரயில் ஆன வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். அதன் பின்பு மாலை 4:25 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து காரில் புறப்பட்டு, மாலை 4:40 மணிக்கு, விவேகானந்தர் இல்லத்திற்கு வருகிறார். அங்கு மாலை 4:45 மணியிலிருந்து 5:45 மணி வரை நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அதன்பின்பு விவேகானந்தர் இல்லத்தில் இருந்து காரில் புறப்படும் பிரதமர் மாலை 5:55 மணிக்கு ஐ.என். எஸ் அடையாறு வருகிறார். அங்கிருந்து மாலை 6 மணிக்கு இந்திய விமானப்படை ஹெலிகாப்டரில் புறப்படும் பிரதமர் மாலை 6:20 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார்
பல்லாவரத்தில் பிரதமர்
அங்கிருந்து காரில் புறப்படும் பிரதமர் மாலை 6:30 மணிக்கு, பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் கிரவுண்டுக்கு வருகிறார். அங்கு மாலை 6:30 மணியில் இருந்து இரவு 7:30 மணி வரை, நடக்கும் விழாவில், பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், நிறைவடைந்த திட்டம் தொடங்கி வைத்தல் போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
சென்னையில் இருந்து மைசூர் பயணம்
அதன்பின்பு இரவு 7:35 மணிக்கு அங்கிருந்து காரில் புறப்பட்டு இரவு 7:40 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். இரவு 7:45 மணிக்கு சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து, இந்திய விமானப்படை தனி விமானத்தில் பிரதமர் மோடி கர்நாடக மாநிலம் மைசூர் புறப்பட்டு செல்கிறார். இரவு 8:40 மணிக்கு மைசூர் விமான நிலையம் சென்றடைகிறார்
யானை முகாமிற்கு விசிட்
மறுநாள் ஒன்பதாம் தேதி ஞாயிறு காலை தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு பிரதமர் மோடி வருகிறார். அதன் பின்பு காலை 9:45 மணிக்கு தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் தெப்பக்காட்டில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்படும் பிரதமர் மோடி, காலை 10:20 மணிக்கு, கர்நாடக மாநிலம் மைசூர் யுனிவர்சிட்டி ஹெலிபேட் தளத்தில் சென்று இறங்குகிறார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
சேலம்
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion