Tamil Nadu LIVE Updates: ஹெலிகாப்டர் சகோதரர்கள் மலேசியாவில் ரூ.550 கோடி முதலீடு
Latest News in Tamil Today LIVE: தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய சமூகம் மற்றும் அரசியல் நிகழ்வுகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.
LIVE
Background
Latest News in Tamil Today LIVE
தொலை தொடர்பு துறையில் அமைப்பு மற்றும் செயல்முறை சீர்த்திருத்தங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
அதன்படி, தொலைதொடர்பு அல்லாத வருவாய் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாயின் வரையறையிலிருந்து விலக்கப்படும். உரிமம் கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள் மீதான வங்கி உத்திரவாத தேவைகள் 80 சதவீதம் குறைப்பு. வட்டி விகிதங்கள் சீரமைப்பு / அபராதங்கள் நீக்கம். இனிமேல் நடைபெறும் ஏலங்களுக்கு வங்கி உத்திரவாதம் தேவையில்லை. அலைக்கற்றை (ஸ்பெக்டரம்) ஏலம் எடுக்கும் காலம் 20 ஆண்டிலிருந்து 30 ஆண்டுகளாக அதிகரிப்பு. இந்திய தொலைதொடர்பு துறையில் 100 சதவீதம் வரை முன்அனுமதிப் பெறாமல் முதலீடு செய்ய அனுமதிக்கும் வகையில், தற்போதுள்ள வெளிநாட்டு முதலீடு அனுமதிக் கொள்கையில் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு சீர்த்திருத்தங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
Breaking News LIVE: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டி
9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டி - கமல்ஹாசன் https://t.co/wupaoCQKa2 | #MNM | #LocalbodyElections | #KamalHaasan | #TNPolitics pic.twitter.com/9ZwRkWxTSp
— ABP Nadu (@abpnadu) September 16, 2021
Covid 19 Positive: சென்னை கல்லூரி மாணவர்கள் 13 பேருக்கு கொரோனா
சென்னையில் வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 13 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்
3 வேளை அன்னதானம் திட்டம் தொடக்கம்
#BREAKING | திருத்தணி, திருச்செந்தூர், சமயபுரம் கோயிலில் 3 வேளை அன்னதானம் திட்டம் தொடக்கம் https://t.co/wupaoCQKa2 | #samayapuram | #Thiruchendur | #Thiruttani | #MKStalin | #DMK | #TNGovt pic.twitter.com/TI6YlUsbML
— ABP Nadu (@abpnadu) September 16, 2021
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு
முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு
பல இடங்களில் தொடரும் சோதனை
வீரமணிக்கு சொந்தமான ஓட்டல்கள், கல்லூரிகள், மண்டபம் உள்ளிட்ட பல இடங்களில் தொடரும் சோதனை