Breaking Live: திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு
இன்றைய தினத்தின் முக்கியச் செய்திகள் உடனுக்குடன்...
LIVE
Background
வங்கக்கடலில் தெற்கு அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி டிச.2ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். மேலும் வங்கக்கடலில் உருவாகும் புதிய புயலால் தமிழ்நாட்டிற்கு எந்த எச்சரிக்கையும் இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
தமிழ்நாட்டில் ஊரடங்கு டிச.15ம் தேதி வரை நீட்டிப்பு
ஓமைக்ரான் வைரஸ்: 12 நாடுகளில் இருந்து தமிழ்நாடு வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்
ஓமைக்ரான் வைரஸ் பரவலால் 12 நாடுகளில் இருந்து தமிழ்நாடு வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்
தென்னாப்பரிக்கா, பிரேசில், சிங்கப்பூர், ஹாங்காங். சீனா, நியூசிலாந்து, இஸ்ரேல், மொரிஷியஸ், போட்ஸ்வானா, இங்கிலாந்து, வங்க தேசம், ஜிம்பாப்வே உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருவோருக்கு ஆர்.டி.பி.ஆர். சோதனை கட்டாயம்
தமிழ்நதாட்டில் காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்
சென்னை தெற்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி. ஆக விஜயகுமார் நியமனம்
சென்னை காவலர் பயிற்சி கல்லூரி முதல்வராக மணிவண்ணன் நியமனம்
சென்னை புளியந்தோப்பு காவல் துணை ஆணையராக ஈஸ்வரன் நியமனம்
மதுரை நகர போக்குவரத்து காவல் துணை ஆணையராக ஆறுமுகசாமி நியமனம்