Watch Video: சம்பவம் செய்த சிறுவர்கள்...சாக்கடையில் வந்த தீ - வைரல் வீடியோ..!
தீபாவளி பண்டிகை வருகிறது என்றாலே, சிறுவர்கள் குஷியாகி விடுவார்கள். அவர்களுக்கு பிடித்த பட்டாசுகளை வாங்கி கொடுத்தாலும், பட்டாசுகளை வேறுவிதங்களில் வெடிக்கும் முயற்சியில் இறங்குவார்கள்.
சூரத்தில் 5 சிறுவர்கள் சாக்கடை மூடி மேல் பட்டாசு கொளுத்தியபோது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தனர்.
குஜராத் மாநிலம் யோகி சௌக் பகுதியில் உள்ள தர்ஷன் சொசைட்டியில் 5 சிறுவர்கள் சாக்கடை மூடி மேலே பட்டாசு மருந்து கொளுத்தியுள்ளனர். அப்போது திடீரென சாக்கடையில் இருந்து தீ வெளியேறியது. இதில் சிறுவர்களுக்கு தீக்காயம் ஏற்பட்டது. உடனே, சம்பவ இடத்துக்கு ஓடி வந்த சிறுவர்களின் பெற்றோர்கள் அவர்களுக்கு நடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான இந்தச் சம்பவத்தின் வீடியோ பின்னர் வைரலாக பரவியது.
தீயணைப்பு படையினர் நடத்திய விசாரணையில், நிலத்தடி சமையல் எரிவாயு குழாயில் இருந்து எரிவாயு கசிந்து, வடிகால் பாதையில் நுழைந்தது தெரியவந்தது. தீப்பிடித்த சாக்கடையில் இருந்து வாயு வெளியேறிக்கொண்டிருந்தது.
அப்போது, வீட்டின் நுழைவு வாயிலில் இருந்து வெளியே வந்து மேன்ஹோலில் காகிதத் துண்டை வைத்து தீப்பெட்டியை ஏற்றி பட்டாசு பொடியை எரிக்க முயன்றனர். அப்போது, சாக்கடையில் இருந்து வெளியே வந்த எரிவாயுவால் தீப்பிடித்தது. இதனால் சிறுவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். எனினும், அவர்கள் உடனடியாக எழுந்து சென்றுவிட்டனர் என்று தெரியவந்துது.
"குழந்தைகளுக்கு பலத்த காயம் ஏற்படவில்லை. சாக்கடையில் இருந்து வெளியே வரும் சேதமடைந்த நிலத்தடி சமையல் எரிவாயு குழாயில் இருந்து வாயு கசிந்ததால் தீ விபத்து ஏற்பட்டது" என்று தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
सोसायटी में खेल रहे बच्चों ने फटाके फोड़ने के लिए गटर के ऊपर जगह पसंद की।एक बच्चे ने जैसी ही माचिस जलाई गटर में गैस की मात्रा ने तुरंत आग पकड़ ली।सभी बच्चे बाल बाल बचे।#ViralVideo #SEVARFIRE #SURAT #GujaratGas #BreakingNews pic.twitter.com/Jgu0AdG19M
— Ajay Tomar 🇮🇳 (@ajay_tomar1) October 29, 2021
தீபாவளி பண்டிகை வருகிறது என்றாலே, சிறுவர்கள் குஷியாகி விடுவார்கள். அவர்களுக்கு பிடித்த பட்டாசுகளை வாங்கி கொடுத்தாலும், வெடித்து போன பட்டாசுகளை கொண்டும், பட்டாசுகளை வேறுவிதங்களில் வெடிப்பதை முயற்சிப்பார்கள். இதனால், சில ஆபத்துகளை சந்திக்க நேரிடும். இதுபோன்ற செயல்களில் குழந்தைகள், சிறுவர்கள் ஈடுபடுவதை பெற்றோர்கள் தடுக்க வேண்டும். அவர்கள் பட்டாசு வெடிக்கும் நேரங்களில் கூடே இருப்பது குழந்தைகளுக்கு பாதுகாப்பாக இருக்கும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்