மேலும் அறிய

Supreme Court: உச்சநீதிமன்றம் அதிரடி - ”சிறார் ஆபாச படங்கள் அல்ல சிறார் பாலியல் துஷ்பிரயோகம்” போக்சோவில் திருத்தம்

Supreme Court: போக்சோ சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நாடாளுமன்றத்திற்கு, உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

Supreme Court: சிறார் ஆபாச படங்கள் என்பதை இனி,  'சிறார் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் பொருள்' என்று குறிப்பிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் உத்தரவு:

சிறார் ஆபாசப் படங்கள் என்ற வரையறையை சிறார் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் பொருள் என்று குறிப்பிடும் வகையில், போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு நாடாளுமன்றத்திற்கு பரிந்துரைத்துள்ளது. திருத்தத்தை ஒரு அவசரச் சட்டம் மூலம் கொண்டு வரலாம். எனவும், சிறார் ஆபாசப் படங்கள் என்ற வார்த்தை எந்த நீதித்துறை உத்தரவிலும் பயன்படுத்தப்படாது என்பதை நாங்கள் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தனர்.

மேலும், சிறார் ஆபாசப் படங்கள்" என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டாம் என்றும், அதற்குப் பதிலாக இதுதொடர்பான வழக்குகளைக் கையாளும் போது சிறார் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் என குறிப்பிடவும் உச்ச நீதிமன்றம் அனைத்து நீதிமன்றங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: Anura Kumara Dissanayake: இலங்கை அதிபரானார் அனுரா குமார திசநாயகே - அதானிக்கு எதிர்ப்பு, இந்தியா உடனான உறவு எப்படி?

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு ரத்து

சென்னையை சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவர், ஆபாச படங்களை பார்த்ததாக கடந்த ஜனவரி மாதம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கு திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடபெற்று வந்தது. அதேநேரம், வழக்கை ரத்து செய்யக்கோரி அந்த இளைஞர் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார். 

வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சிறார் ஆபாச விடியோவை பதிவிறக்கம் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமில்லை என்றும், மற்றவர்களுக்கு அனுப்பினால் மட்டுமே குற்றம் எனவும் கூறி காவல்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் அந்த உத்தரவை எதிர்த்து குழந்தைகள் நல அமைப்பு உச்சநீதிமன்றத்தை நாடியது. அதுதொடர்பான விசாரணையின் முடிவில், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் சொல்வது என்ன?

வழக்கின் தீர்ப்பில் சிறார்களை உள்ளடக்கிய ஆபாச உள்ளடக்கத்தை சேமித்து வைப்பதும் மற்றும் பார்ப்பதும் கூட,  POCSO (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்) மற்றும் தகவல் தொழில்நுட்ப (IT) சட்டங்களின் கீழ் குற்றமாகும் என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. இது ஒரு முக்கியத் தீர்ப்பு என்றும், சிறார் பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகம் தொடர்பான சட்டம் நீதித்துறையால் இவ்வளவு விரிவாகக் கையாளப்படும் உலகின் முதல் நிகழ்வு இதுவே என்றும் தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மீது காட்டம்:

தீர்ப்பில், “தனிப்பட்ட முறையில் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பது குற்றமல்ல என்ற, தனது தீர்ப்பின் மூலம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மிக மோசமான தவறை செய்துள்ளதாக” உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதி பரிதிவாலா ஆகியோர் சாடியுள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Anura Kumara Dissanayake: இலங்கை அதிபரானார் அனுரா குமார திசநாயகே - அதானிக்கு எதிர்ப்பு, இந்தியா உடனான உறவு எப்படி?
Anura Kumara Dissanayake: இலங்கை அதிபரானார் அனுரா குமார திசநாயகே - அதானிக்கு எதிர்ப்பு, இந்தியா உடனான உறவு எப்படி?
Oscar: செம்ம! மகாராஜா முதல் வாழை வரை! ஆஸ்கருக்கு அனுப்பப்படும் 6 தமிழ் படங்கள் இதுதான்!
Oscar: செம்ம! மகாராஜா முதல் வாழை வரை! ஆஸ்கருக்கு அனுப்பப்படும் 6 தமிழ் படங்கள் இதுதான்!
Breaking News LIVE:
Breaking News LIVE: "சீசிங் ராஜாவுக்கும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குக்கும் தொடர்பு இல்லை” - சென்னை தெற்கு இணை ஆணையர்
RatioN Card KYC: நெருங்கும் டெட்லைன் - ரேஷன் அட்டை முடங்கும் அபாயம், இ-KYC ஆன்லைனில் அப்டேட் செய்வது எப்படி?
RatioN Card KYC: நெருங்கும் டெட்லைன் - ரேஷன் அட்டை முடங்கும் அபாயம், இ-KYC ஆன்லைனில் அப்டேட் செய்வது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rowdy Seizing Raja | ஆட்டம் காட்டிய சீசிங் ராஜா! ரவுடியை அடக்கிய அருண் IPS..அடுதடுத்த ENCOUNTER..DMK PMK clash at Dharmapuri | திமுக- பாமக மோதல்! கைகலப்பான நிகழ்ச்சி! திணறிய POLICEManimegalai reply to kuraishi |”சொம்புக்குலாம் மரியாதையா! அப்போ அந்த WHATSAPP மெசெஜ்”மணிமேகலை பதிலடிSchool Students reels | பேருந்து டாப்பில் ஏறி REELS.. பள்ளி மாணவர்கள் அட்ராசிட்டி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anura Kumara Dissanayake: இலங்கை அதிபரானார் அனுரா குமார திசநாயகே - அதானிக்கு எதிர்ப்பு, இந்தியா உடனான உறவு எப்படி?
Anura Kumara Dissanayake: இலங்கை அதிபரானார் அனுரா குமார திசநாயகே - அதானிக்கு எதிர்ப்பு, இந்தியா உடனான உறவு எப்படி?
Oscar: செம்ம! மகாராஜா முதல் வாழை வரை! ஆஸ்கருக்கு அனுப்பப்படும் 6 தமிழ் படங்கள் இதுதான்!
Oscar: செம்ம! மகாராஜா முதல் வாழை வரை! ஆஸ்கருக்கு அனுப்பப்படும் 6 தமிழ் படங்கள் இதுதான்!
Breaking News LIVE:
Breaking News LIVE: "சீசிங் ராஜாவுக்கும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குக்கும் தொடர்பு இல்லை” - சென்னை தெற்கு இணை ஆணையர்
RatioN Card KYC: நெருங்கும் டெட்லைன் - ரேஷன் அட்டை முடங்கும் அபாயம், இ-KYC ஆன்லைனில் அப்டேட் செய்வது எப்படி?
RatioN Card KYC: நெருங்கும் டெட்லைன் - ரேஷன் அட்டை முடங்கும் அபாயம், இ-KYC ஆன்லைனில் அப்டேட் செய்வது எப்படி?
Meiyazhagan Trailer:
Meiyazhagan Trailer: "என் அத்தான்" ரிலீசானது கார்த்திக்கின் மெய்யழகன் ட்ரெயிலர் - எப்படி இருக்குது?
புரட்டாசியால் இறைச்சி விலை வீழ்ச்சி.. மக்கள் வாங்க வராததால் வியாபரிகள் அதிர்ச்சி
புரட்டாசியால் இறைச்சி விலை வீழ்ச்சி.. மக்கள் வாங்க வராததால் வியாபரிகள் அதிர்ச்சி
Karthigai Deepam 2024 : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா : நடப்பட்ட பந்தக்கால்..
Karthigai Deepam 2024 : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா : நடப்பட்ட பந்தக்கால்..
Tirupati Laddu: பக்தர்களே! புகழ்பெற்ற திருப்பதி லட்டு எப்படி தயாரிக்கப்படுகிறது? இதுதான் வரலாறு!
Tirupati Laddu: பக்தர்களே! புகழ்பெற்ற திருப்பதி லட்டு எப்படி தயாரிக்கப்படுகிறது? இதுதான் வரலாறு!
Embed widget