மேலும் அறிய

சமூக ஆர்வலர் டீஸ்தா செடல்வாட்டுக்கு பிணை கிடைக்குமா? கிடைக்காதா ? நீதிபதிகள் வழங்கிய இரு வேறு தீர்ப்பால் சர்ச்சை

குஜராத் கலவரம் தொடர்பாக பொய்யான ஆவணங்களை தயாரித்த வழக்கில் பிணை கேட்டு டீஸ்டா செடல்வாட் தாக்கல் செய்த மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நடந்த மதக் கலவரத்தை நிகழ்த்திய மதவாதச் சக்திகளுக்கு எதிராக அதிகமாகப் போராடியவை மனித உரிமை அமைப்புகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும்தான். அப்படி, குஜராத்தில் போராடி வருபவர்களுள் நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் (Citizen for Justice and Peace) அமைப்பின் சார்பில் செயல்படுபவர் டீஸ்டா செடல்வாட்.

குஜராத் கலவர வழக்கில் பொய்யான ஆவணங்கள் தயார் செய்யப்பட்டதா?

பத்திரிகையாளராக வாழ்க்கையைத் தொடங்கிய டீஸ்டா செடல்வாட், இந்தியாவின் முதல் அட்டர்னி ஜெனரலான எம்.சி. செடல்வாடின் பேத்தி. வழக்கறிஞர் அதுல் செடல்வாட், சீதா செடல்வாடின் மகள். மும்பையில் தி டெய்லி, தி இந்தியன் எக்ஸ்பிரஸ், பிசினஸ் இந்தியா ஆகியவற்றில் பணிபுரிந்தார். 1993 மும்பை மதக் கலவரத்திற்கு பிறகு முழுநேர மனித உரிமை செயற்பாட்டாளராக மாறினார் டீஸ்டா செடல்வாட். 

குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி மீதான வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. குஜராத் கலவரம் தொடர்பான வழக்குகளில், போலியான ஆவணங்களைத் தயாரித்ததாகக் கூறி, முன்னாள் டிஜிபி ஆர்.பி.ஸ்ரீகுமார், சமூக ஆர்வலர் டீஸ்தா செடல்வாட், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

வழக்கில் சிக்கிய டீஸ்டா செடல்வாட்:

அவர்களை அகமதாபாத் குற்றப்பிரிவு போலீஸார், கடந்தாண்டு ஜூன் 25ஆம் தேதி கைது செய்தனர். இதனிடையே, டீஸ்டா செடல்வாட் கைது செய்யப்பட்டதற்கு ஐக்கிய நாடுகள் சபை அதிகாரி கண்டனம் தெரிவித்தது உலக அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியது. டிஜிபி ஆர்.பி.ஸ்ரீகுமார், சமூக ஆர்வலர் டீஸ்தா செடல்வாட் ஆகியோர் ஜாமீன் கோரி விண்ணப்பித்தனர். 

இதைத்தொடர்ந்து, அவர்களுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. குஜராத் கலவரம் தொடர்பாக நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது. 

நீதிபதிகள் வழங்கிய இரு வேறு தீர்ப்பால் பிணை கிடைப்பதில் சிக்கல்:

இந்த நிலையில், குஜராத் கலவரம் தொடர்பாக பொய்யான ஆவணங்களை தயாரித்த வழக்கில் பிணை கேட்டு டீஸ்டா செடல்வாட் தாக்கல் செய்த மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் நிராகரித்து, அவரை உடனடியாக சரண் அடைய நேற்று உத்தரவிட்டது. இதனால், உச்ச நீதிமன்றத்தில் பிணை கேட்டு அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

உடனடி வழக்காக விசாரிக்க வேண்டி அவர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்று கொண்டது. பின்னர், வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஓகா, பி.கே. மிஸ்ரா இருவேறு தீர்ப்பை வழங்கினர். எனவே, இந்திய தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் தலைமையிலான பெரிய அமர்வுக்கு, வழக்கு விசாரணையை மாற்ற பரிந்துரை செய்துள்ளது இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TPDK vs Seeman : ”சீமான் வீட்டு கார் கண்ணாடி  உடைப்பு” பெரியார் ஆதரவாளர்கள் ஆவேசம்!Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல்..  எதிர்க்கும் விசிக, காங். , CPM  தலைவலியில் திமுக தலைமை!Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
"நானா இருந்தா தோற்கடிச்சிருப்பேன்" டிரம்ப் வெற்றி குறித்து பைடன் ஒபன் டாக்!
Ajithkumar Accident: கார் ரேஸில் அஜித் உயிர் தப்பியது எப்படி? மருத்துவர் தந்த பரபரப்பு விளக்கம்
Ajithkumar Accident: கார் ரேஸில் அஜித் உயிர் தப்பியது எப்படி? மருத்துவர் தந்த பரபரப்பு விளக்கம்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
Embed widget