தொடர்ந்து அதிகரிக்கும் சிறார் குற்றங்கள்...சிறார் நீதிச் சட்டம் குறித்து கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்..!
"பாலியல் வன்கொடுமையை கையாள்வோரின் பிரச்னை என்னவென்றால், அவர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வது எப்படி என்பதைப் பற்றி பெண்களுக்குக் கற்பிக்க முயல்கின்றனர்" என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சிறார்கள் ஈடுபடும் குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து உச்ச நீதிமன்றம் நேற்று கவலை தெரிவித்துள்ளது. இதில், உடனடி கவனம் செலுத்த வேண்டும் என்றும் கருணையுள்ள சிறார் நீதிச் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு, ஜம்மு காஷ்மீர் கத்துவாவில் எட்டு வயது பழங்குடியின சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த சம்பவம் நாட்டை உலுக்கி இருந்தது.
அந்த வழக்கில், முக்கிய குற்றம்சாட்டப்பட்டவராக ஷுபம் சங்கரா என்பவர் கருதப்படுகிறார். குற்றம் நிகழ்ந்தபோது, அவர் சிறார் அல்ல என்பதால் அவரை வயது வந்தவராக கருதி விசாரணை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் நேற்று கூறியுள்ளது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி மற்றும் ஜே பி பார்திவாலா அடங்கிய அமர்வு, அமெரிக்க இசையமைப்பாளர் கர்ட் கோபேன்வின் வாசகத்தை மேற்கோள்காட்டியது. அதில், "பாலியல் வன்கொடுமை என்பது பூமியின் மிகக் கொடூரமான குற்றங்களில் ஒன்றாகும். இது, ஒவ்வொரு நிமிடமும் அரங்கேறி வருகிறது.
A young suspect in the #Kathua rape and murder was not a juvenile when the child victim was brutalised in Jammu four years ago and can be tried afresh as an adult, the Supreme Court ruled. Read more here.#SupremeCourtOfIndia #JuvenileJustice https://t.co/tntdJkLC7s
— The Telegraph (@ttindia) November 17, 2022
பாலியல் வன்கொடுமையை கையாள்வோரின் பிரச்னை என்னவென்றால், அவர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வது எப்படி என்பதைப் பற்றி பெண்களுக்குக் கற்பிக்க முயல்கின்றனர்.
உண்மையில் செய்ய வேண்டியது என்னவென்றால், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட வேண்டாம் என்று ஆண்களுக்கு கற்பிப்பதுதான். பிரச்னையின் மூலத்திற்குச் சென்று அங்கு தொடங்கவும்.
இந்த விஷயத்தை முடிப்பதற்கு முன், இந்தியாவில் அதிகரித்து வரும் சிறார் குற்றங்களின் விகிதத்தை கவலைக்குரியதாக கருதிகிறோம். உடனடி கவனம் தேவை என்பதை நாங்கள் கவனிக்க விரும்புகிறோம்.
பாலியல் வன்கொடுமை, கூட்டுப் பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் கடத்தல் அல்லது கொலை எதுவாக இருந்தாலும், குற்றம் எவ்வளவு கொடூரமானதாக இருந்தாலும், குற்றம் சாட்டப்பட்டவர் இளம் வயதினராக இருந்தால், அவரை மனதில் வைத்து மட்டுமே கையாள வேண்டும் என்று உறுதியாக நம்பும் ஒரு சிந்தனைப் பள்ளி நம் நாட்டில் உள்ளது. அவரை சீர்திருத்துவதே நமது குறிக்கோள்.
சீர்திருத்துவதை குறிக்கோளாக வைப்பது நன்று. ஆனால், சிறார் நீதிச் சட்டம் அதன் நோக்கத்தை நிறைவேற்றி உள்ளதா? சிறார்களால் நடத்தப்படும் கொடூரமான குற்றங்கள் தொடர்ந்து வருவது. சிறார் சட்டம் அதன் நோக்கத்தை நிறைவேற்றியதா என்று நம்மை ஆச்சரியப்படுத்துகிறது" என தெரிவித்துள்ளது.