Sunita Williams: விண்வெளி நிலையத்திலிருந்து விண்வெளியில் நடக்கப் போகும் சுனிதா வில்லியம்ஸ்: இந்த சவால் எதற்கு ?
Sunita Willaims Space Walk - ISS: சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ், அதைவிட்டு வெளியே வந்து விண்வெளியில் நடைபயணம் மேற்கொள்ளும் சிக்கலான பணியை மேற்கொள்ளவுள்ளார்.
சர்வதேச விண்வெளி நிலையம்:
பூமியில் இருந்து, சுமார் 400 கி,மீ உயரத்தில், சர்வதேச விண்வெளி நிலையமானது, பூமியைச் சுற்றி வலம் வந்து கொண்டிருக்கிறது. இது, சுமார் 90 நிமிடத்தில் பூமியை முழுவதுமாக சுற்றி வந்து விடும். அதாவது, ஒரு நாளில் சராசரியாக 16 முறை பூமியைச் சுற்றி வரும். இந்த விண்வெளி நிலையத்தில், விண்வெளி வீரர்கள் தங்கி , விண்வெளி தொடர்பான பல்வேறு ஆய்வுகளை செய்து வருகின்றனர்.கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஏவப்பட்ட ஸ்டார்லைனர் விண்கலமானது, விண்வெளி பயணங்களை சோதனை செய்யும் வகையில் இரண்டு விண்வெளி வீரர்களான இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ் மற்றொரு வீரர் புட்ச் வில்மோர் ஆகியோரை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கொண்டு சென்றது.
விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ்:
முதலில் சுமார் எட்டு நாட்கள் பயணம் என்று திட்டமிடப்பட்ட நிலையில், விண்கலத்தின் என்ஜினில் உள்ள பல்வேறு சிக்கல்கள் காரணமாக, பூமி திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, சிக்கல்களை சரிசெய்ய போயிங் மற்றும் நாசா தீவிரமாக முயற்சித்தும் பலனளிக்கவில்லை. இந்த சிக்கல்களால் ஸ்டார்லைனரின் விண்கலத்தில் பயணித்த மூத்த நாசா விண்வெளி வீரர்களான புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் உடனடியாக திரும்ப அழைத்து வருவதில் சிக்கல் எழுந்தது.
இதன் விளைவாக, அவர்களை பூமிக்கு கொண்டு வர எலன் மஸ்க்கிஸ்ர்க்குச் சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ டிராகன் விண்கலமானது, சில வாரங்களுக்கு முன்பு விண்வெளிக்குச் சென்றது. இதன் மூலம் வில்மோர் மற்றும் வில்லியம்ஸுடன் பூமிக்குத் திரும்ப திட்டமிட்டுள்ளதாக நாசா தெரிவித்தது. இவர்கள் 2 பேரும் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் பூமி திரும்புவார்கள் எனவும் நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
விண்வெளியில் நடைபயணம்:
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ், விண்வெளி நிலையத்தில் இருந்து வெளியே வந்து, விண்வெளியில் நடந்து சோதனை மேற்கொள்ள போகிறார். இது 12 ஆண்டுகளுக்கு பிறகு விண்வெளியில் நடக்கும் பயணத்தை மேற்கொள்ள போகிறார்.
அவ்வாறு நடந்து, (NICER) என்கிற எக்ஸ்ரே தொலைநோக்கியின் முக்கியமான சிக்கலை தீர்ப்பதற்கு சுனிதா வில்லியம்ஸ் மற்றும் சக விண்வெளி வீரர் நிக் ஹேக் ஆகியோர் மேற்கொள்வார் என்று நாசா தெரிவித்துள்ளது.
இந்த NICER தொலைநோக்கி கருந்துளைகள் மற்றும் நியூட்ரான் நட்சத்திரங்கள் உட்பட பல்வேறு அண்ட நிகழ்வுகளை ஆய்வு செய்யும் பணியை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Two @NASA_Astronauts will venture out of the @Space_Station on Jan. 16 and Jan. 23 to complete station upgrades. Get more details about the upcoming spacewalks from @NASA_Johnson experts in a news conference at 2pm ET (1900 UTC) on Friday, Jan. 10: https://t.co/QKYyrkaIAt pic.twitter.com/CrIBoh6ztv
— NASA (@NASA) January 7, 2025
சில ஆண்டுகளுக்கு முன்பு , சூரியக் கதிர்கள், தொலைநோக்கியை சேதப்படுத்திவிட்டது. ஆகையால், தற்போது அந்த பழுது பார்க்கும் பணியை வரும் ஜனவரி 16 ஆம் தேதி விண்வெளியில் நடந்து செல்லக்கூடிய சவாலான பணியை மேற்கொள்ள உள்ளனர்.
ஏற்கனவே, நிர்ணயிக்கப்பட்ட கால அளவை தாண்டி, சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி நிலையத்தில் இருந்து வருகிறார். இந்நிலையில், மீண்டும் ஒரு சவாலான பணியை சுனிதா வில்லியம்ஸ் மேற்கொள்ளவுள்ளார்.