போர்ஷே நிறுவனம் தங்களின் புதிய மாடல் ஸ்போர்ட்ஸ் காரை வெளியிட்டுள்ளது.
2025 போர்ஷே 911 கரீரா எஸ், புதுவிதமான சிறப்பாம்சங்களுடன் இருக்கிறது.
முந்தைய ஜென்-911 டர்போ மாடலை தழுவி வடிவமைக்கப்பட்ட கார் என்று போர்ஷே நிறுவனம் கூறியுள்ளது.
473bph ஆற்றலை வெளிப்படுத்தும் 3-லிட்டர் டிவின் டர்போ பாக்சர் இன்ஜினை கொண்டது.
இதன் வேகம் மணிக்கு 308 கி.மீ. 3.3 விநாடிக்கு 0-விலிருந்து 100kmph.
இந்த காரின் மைலேஜ் லிட்டருக்கு 11.2 கி.மீ.
2025 போர்ஷே 911 கரீரா எஸ் உலகமெங்கும் வெளியிடப்பட்டது. இந்தியாவில் கூடிய விரைவில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.
போர்ஷே 911 கரீரா எஸ்-ன் இந்திய மதிப்பு ரூ.2.01 கோடி.