மேலும் அறிய

Sabarimala Temple : சபரிமலை ஐயப்பன் கோயில் தரிசனத்திற்கு இன்று முதல் நேரம் மாற்றம்...முழு விவரம் இதோ...

பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால் சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று முதல் தரிசனம் செய்ய கூடுதலாக ஒரு மணி நேரம் அனுமதி அளிக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Sabarimala Temple : பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால் சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று முதல் தரிசனம் செய்ய கூடுதலாக ஒரு மணி நேரம் அனுமதி அளிக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக ஆண்டுதோறும் 60 நாட்கள் நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன்படி இன்று ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட இருக்கிறது. சபரிமலை மேல்சாந்தியாக நியமிக்கப்பட்ட ஜெயராமன் நம்பூதிரி மற்றிம் மாளிகபுரம் மேல்சாந்தியாக நியமிக்கப்பட்டுள்ள ஹரிஹரன் நம்பூதிரி ஆகியோருக்கு பதவியேற்பு மற்றும் அபிஷேகம் செய்யப்பட்டும். ஐயப்பனை தரிசிக்க  பக்தர்கள் மாலை அணிந்து கடுமையாக 41 நாட்கள் விரதம் இருந்து செல்வர்.

மண்டல பூஜை:

கேரள மட்டுமின்றி தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் சபரிமலை கோயிலுக்கு வருவது வழக்கம். சபரி மலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணமே உள்ளது. எனினும், கொரோனா பரவல் மற்றும கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பக்தர்கள் தரிசனத்தற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மாதாந்திர பூஜைக்காக அக்டோபர் 17-ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. இதனை அடுத்து சபரிமலை கோயிலில் மண்டல பூஜைக்காக பக்தர்கள் அக்டோபர் 17ஆம் தேதி முதல் அனுமதிக்கப்பட்டனர். சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யும் பக்தர்கள் அனைவருக்கு சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தரிசன நேரத்தில் மாற்றம்

லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனர். மழை, பணி என எதையும் பொருட்படுத்தாமல் நீண்டு வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அதன்படி, ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், 6 நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.

சன்னிதானம் அருகே 18 படி ஏறி வரும்போது பக்தர்களுக்கு மூச்சு திணறல் போன்ற திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க அவசர சிகிச்கை மையமும், கட்டுப்பாடு அறையும் திறக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் சிகிச்சை அளிக்க ஒரு மருத்துவர் மற்றும் ஒரு செவிலியர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பக்தர்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் தரிசன நேரத்தில் இன்று முதல் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால் இன்று முதல் சாமி தரிசனம் செய்ய கூடுதலாக ஒரு மணி நேரம் அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக மாலையில் 4 மணிக்கு நடை திறக்கப்படும் நிலையில், இன்று முதல் மாலை 3 மணிக்கே நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சீமான்  நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
சீமான் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
Embed widget