Sabarimala Ayyan App : ஐயப்ப பக்தர்களுக்காக ’அய்யன்’ செயலி! பக்தர்கள் இதை டவுன்லோட் பண்ணிக்கோங்க...என்னென்ன வசதிகள்?
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களை வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன் 'அய்யன்' செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Sabarimala Temple: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களை வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன் 'அய்யன்' செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயில்:
கேரள மாநிலம் பத்தினம் திட்டாவில் அமைந்துள்ளது சபரிமலை. உலகப்புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். சபரிமலை ஐயப்பன் கோயில் வழக்கமான கோயில்கள்போல் இல்லாமல் ஒவ்வொரு மாதமும் அந்தந்த பூஜைக்காக திறக்கப்படும். நடை திறக்கும் போது மட்டும் பக்தர்கள் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்வர். மகர ஜோதி, கார்த்திகை மாத பூஜை மற்றும் விஷு பண்டிகையின் போது திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்நிலையில், நேற்று கார்த்திகை மாதம் பிறந்துள்ளது. இதனால் பல்வேறு கோயில்களில் ஐயப்பன் பக்தர்கள் மாலை அணிவித்து விரதத்தை கடைபிடிக்க தொடங்கிவிட்டனர். கார்த்திகை மாதத்தில் மட்டும முதல் நாள் தொடங்கி மண்டல பூஜை காலம் வரை 41 நாட்கள் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். அதன்படி, மண்ல பூஜைக்காக நேற்று கோயில் நடை திறக்கப்பட்டது. டிசம்பர் 27 ஆம் தேதி வரை அதாவது 41 நாட்கள் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டிருக்கும். 27 ஆம் தேதி மாலை நடை அடைக்கப்படும்.
மண்டல பூஜைக்காக தினமும் அதிகாலை 3.15 மணி முதல் 12 மணி வரை நெய்யபிஷேகம் நடக்கும். இரவு 11 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படும். சபரிமலையின் மண்டல பூஜை டிசம்பர் 27ஆம் தேதி நடைபெறுகிறது.
முன்பதிவு அவசியம்:
ஐயப்பனை தரிசனம் செய்ய இணையதம் மூலமாக பக்தர்கள் முன்பதிவு செய்ய வேண்டும். பக்தர்கள் என்ற இணையதளம் மூலம் தரிசனத்திற்கான முன்பதிவை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கும் வகையில், நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேவசம்போர்டு தரப்பின் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அய்யன் செயலி:
இந்த சமயத்தில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இதனால், பக்தர்களின் வசதிக்காக புதிய ஆன்லைன் செல்போன் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியை கொண்டு வனப்பகுதியில் விலங்குகள் நடமாட்டம் உள்ளதாக என்பதையும் தெரிந்து கொள்ளலாம். மேலும், மருத்துவ வசதிகள், குடிநீர் வசதிகள், தங்கும் வசதிகள் கிடைக்கும் இடங்களை இந்த செயலி மூலம் பக்தர்கள் எளிதாக அறிந்து கொள்ளலாம் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க