Sabarimala Temple : சபரிமலையில் திரளான பக்தர்கள் கூட்டம்.... நாளை ஆன்லைன் தரிசனம் இல்லை: காரணம் என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை (டிசம்பர் 19 ) ஆன்லைன் தரிசனம் இல்லை என தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
நாளுக்குநாள் அதிகரிக்கும் கூட்டம் :
தொடர்ந்து, சன்னிதானத்தில் அதிக நெரிசல் ஏற்பட்டால், பம்பா மற்றும் நிலக்கல்லில் இருந்து பக்தர்கள் ஒரு பக்கத்தில் இருந்து அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சாரம்குத்தி ஆலத்தில் உள்ள வரிசை வளாகங்களை திறக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மெய்நிகர் வரிசை வழியாக தினசரி முன்பதிவு செய்யக்கூடிய பக்தர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 90,000 ஆக நிர்ணயிக்கப்பட்டும் வருவதாக தேவசம்போர்டு தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், சன்னிதானத்தில் உள்ள 18-ஆம் படி வழியாக ஒரு நிமிடத்திற்கு 80 பக்தர்களை வேகமாக மேலே ஏற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்தில் 4,800 பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை ஆன்லைன் தரிசனம் இல்லை
இதனிடையே சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை (டிசம்பர் 19 ) ஆன்லைன் தரிசனம் இல்லை என தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிக அளவிலான பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளதால், அன்றைய நாளில் முன்பதிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அதேபோன்று, கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பக்தர்களின் வசதிக்காக தரிசன நேரத்தை நீடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி பகல் 1 மணிக்கு பதிலாக 1.30 மணிக்கும், இரவு 11 மணிக்கு பதிலாக 11.30 மணிக்கு நடை சாத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.