மேலும் அறிய

சபரிமலை ரயில் திட்டம்: கேரள அரசின் அதிரடி முடிவு! பயணிகளின் கனவு நனவாகுமா?விபரம் இதோ!

அங்கமாலி - எருமேலி சபரிமலை ரயில் பாதை திட்டத்துக்கு, பச்சைக் கொடி காட்டிய கேரள அரசு, 50 சதவீதம் நிதி வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளது.

சபரிமலை ரயில் திட்டத்திற்கு நிலங்கள் கையகப்படுத்தும் பணிகளில் கேரள அரசு  இறங்கி உள்ளது. இந்த திட்டத்தின் சிறப்புகள் மற்றும் திட்டம் செயல் படுத்துவதற்கான சிக்கல்கள் என்னென்ன என்று பார்த்தால், சபரிமலைக்கு செல்லும் ரயில் திட்டமான அங்கமாலி–சபரிமலை வழித்தடத்துக்கான பணிகள் மீண்டும் வேகம் பெறுகின்றன. திட்டத்தை செயல்படுத்த, மொத்த செலவில் 50 சதவீதம் பங்களிக்க வேண்டியுள்ள கேரள அரசு, நிலங்களை உடனடியாக கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தியுள்ளார். இத்திட்டம் முதன்முதலில் 1997-98ஆம் ஆண்டில் முன்மொழியப்பட்டது.


சபரிமலை ரயில் திட்டம்: கேரள அரசின் அதிரடி முடிவு! பயணிகளின் கனவு நனவாகுமா?விபரம் இதோ!

சபரிமலை செல்வோருக்கு வசதியாக, கேரள மாநிலம் அங்கமாலி - எருமேலி இடையே, 110 கி.மீ., துாரம் சபரிமலை ரயில் பாதை அமைக்கும் திட்டம், கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டது. ரூ.3,800 கோடி அங்கமாலியில் இருந்து பெரும்பாவூர், மூவாட்டுப்புழா, தொடுபுழா மற்றும் பாலா போன்ற நகரங்களுக்கு, இந்த திட்டம் எளிதான இணைப்பை வழங்கும். முதல் கட்டத்தில், 8 கி.மீ., துாரத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்துள்ளன. மீதமுள்ள பகுதிகளுக்கு நிலம் கையகப்படுத்தும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு இருந்தாலும், அவை காலாவதியாகி விட்டன.

நிலம் கையகப்படுத்துவது, நிதி ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், இந்த திட்டம் முடங்கியது. பல ஆண்டுகள் தாமதம் ஏற்பட்டதால், இந்த திட்டத்தின் மொத்த செலவு, 3,800 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், 'இந்த ரயில் பாதை திட்டத்துக்கு மொத்த செலவில், 50 சதவீதம் பங்களிக்க வேண்டியுள்ள கேரள அரசு, நிலங்களை உடனடியாக கையகப்படுத்த வேண்டும்' என, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார்.


சபரிமலை ரயில் திட்டம்: கேரள அரசின் அதிரடி முடிவு! பயணிகளின் கனவு நனவாகுமா?விபரம் இதோ!

அதையடுத்து, சபரிமலை ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த, கேரள அரசு பச்சைக் கொடி காட்டியதோடு, திட்ட செலவில், 50 சதவீத தொகையான, 1,905 கோடி ரூபாயை, ஏற்பதாகவும் தெரிவித்துள்ளது. உயிர் நாடி கேரள மக்களின் நீண்ட நாள் கனவான சபரி ரயில் திட்டத்தை நனவாக்க, அம்மாநில அரசு முன்வந்துள்ளது. புனலுார் மற்றும் நெடுமங்காடு வழியாக, இந்த ரயில் பாதையை நீட்டித்து, விழிஞ்ஞம் சர்வதேசத் துறைமுகத்துடன் இணைப்பதற்கான திட்டமும் உள்ளது.

இது, கேரள மாநில மலைப் பகுதிகளுக்கு ஒரு உயிர் நாடியாகவும், கேரள பொருளாதாரத்துக்கு பெரிய உந்துதலாகவும் அமையும் என, அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது, தெற்கு ரயில்வேயில், அதிக வருவாய் தரும் மாநிலங்களில் கேரளாவும் ஒன்று. 2024ம் ஆண்டில் மட்டும், கேரளாவில் உள்ள ஒன்பது முக்கிய ரயில் நிலையங்களில், டிக்கெட் விற்பனை வாயிலாக, 1,471 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. சபரிமலை புதிய ரயில் பாதை திட்டம், அம்மாநில பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். கேரள அரசின் ஒப்புதல் தற்போது கிடைத்துள்ளதால், சபரிமலை திட்டம் புத்துயிர் பெறுவதோடு, பணிகள் வேகமெடுக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தலைப்பு செய்திகள்

சபரிமலை: கனமழைக்கு மத்தியிலும் ஆவணி, ஓணம் பூஜைகளுக்கு முன்பதிவு துவக்கம்!
சபரிமலை: கனமழைக்கு மத்தியிலும் ஆவணி, ஓணம் பூஜைகளுக்கு முன்பதிவு துவக்கம்!
விலை உயர்வு காலத்தில் 5 கிலோ குட்டி சிலிண்டர்: எளிதான சமையல் தீர்வு!
விலை உயர்வு காலத்தில் 5 கிலோ குட்டி சிலிண்டர்: எளிதான சமையல் தீர்வு!
டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!
டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!
சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் ரூட்டில் வரப்போகும் மிகப்பெரிய மாற்றம்! ரூ.2.37 லட்சம் கோடி மெகா கணக்கு... 
சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் ரூட்டில் வரப்போகும் மாற்றம்! ரூ.2.37 லட்சம் கோடி கணக்கு... 

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget