மேலும் அறிய

சபரிமலை ஐயப்பன் கோயில்: உண்டியல் பணம் திருடிய ஊழியர்கள் கைது! பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

மண்டல கால, மகரவிளக்கு பூஜைகள் வரும் 20-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. 19-ம் தேதி இரவு நடை அடைக்கும் வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தையொட்டி மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோயிலில் நடை திறக்கப்படும். மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்ப சாமி கோயிலில் 41 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஐயப்ப பக்தர்கள் விரதம் இருந்து, கருப்பு உடை அணிந்து இருமுடி கட்டி தலையில் சுமந்து பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய மணிக்கணக்கில் வரிசையில் நின்று சரண கோஷம் முழங்க 18 படி ஏறி ஐயப்பனை வழிபடுவர். 

சபரிமலை ஐயப்பன் கோயில்: உண்டியல் பணம் திருடிய ஊழியர்கள் கைது! பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

வரும் 18-ம் தேதி வரை பக்தர்கள் இருமுடியில் கொண்டுசெல்லும் நெய் சுவாமிக்கு அபிஷேகம் செய்யலாம். 19-ம் தேதி ஹரிவராசனம் பாடி ஐயப்ப சுவாமி கோயில் நடை அடைக்கப்பட்ட பிறகு, மாளிகப்புறம் சன்னதியில் வலிய குருதி பூஜை நடைபெறும். சபரிமலை ஐய்யப்ப சுவாமி கோயிலில் கடந்த 14-ம் தேதி மகரஜோதி தரிசனம் நடைபெற்றது. மண்டல கால, மகரவிளக்கு பூஜைகள் வரும் 20-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. 19-ம் தேதி இரவு நடை அடைக்கும் வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

பம்பா, நிலக்கல், எருமேலி, பந்தளம், வண்டிப்பெரியார் ஆகிய இடங்களில் புக்கிங் செய்யப்படுகிறது. வரும் 19-ம் தேதிவரை இந்த இடங்களில் ஸ்பாட் புக்கிங் செய்துகொள்ளலாம். 19-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம். வரும் 18-ம் தேதிவரை ஆன்லைன் புக்கிங் மூலம் 50,000 பக்தர்களும், ஸ்பாட் புக்கிங் மூலம் 5,000 பக்தர்களும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். வரும் 19-ம் தேதி ஆன்லைன் முன்பதிவு மூலம் 30,000 பக்தர்களும், ஸ்பாட் புக்கிங் மூலம் 5,000 பக்தர்களும் அனுமதிக்கப்படுகின்றனர். மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு கடந்த 14-ம் தேதி திருவாபரணம் சார்த்தி ஐயப்ப சுவாமிக்கு பூஜைகள் நடைபெற்றன. திருவாபரணம் சார்த்தப்பட்ட கோலத்தில் ஐயப்ப சுவாமியை நாளை (பிப்ரவரி 17) வரை பக்தர்கள் தரிசிக்கலாம்.

சபரிமலை ஐயப்பன் கோயில்: உண்டியல் பணம் திருடிய ஊழியர்கள் கைது! பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

வரும் 18-ம் தேதி வரை பக்தர்கள் இருமுடியில் கொண்டுசெல்லும் நெய் சுவாமிக்கு அபிஷேகம் செய்யலாம். 19-ம் தேதி ஹரிவராசனம் பாடி ஐயப்ப சுவாமி கோயில் நடை அடைக்கப்பட்ட பிறகு, மாளிகப்புறம் சன்னதியில் வலிய குருதி பூஜை நடைபெறும். 20-ம் தேதி பந்தள மன்னர் குடும்பத்தின் பிரதிநிதிகள் தரிசனம் செய்வதைத் தொடர்ந்து பூஜைகள் நிறைவுபெறும். பின்னர் திருவாபரணத்துடன் பாரம்பர்ய பாதை வழியாக மன்னர் பிரதிநிதி திரும்புவார். மாசி மாத பூஜைகளுக்காக பிப்ரவரி 12-ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும்.

இதற்கிடையே சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் உண்டியலில் இருந்து பணம் திருடிய தற்காலிக ஊழியர்கள் கோபகுமார், சுனில் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உண்டியல் பணம் எண்ணும் இடத்தில் இருந்து பணத்தை எடுத்துவந்த அவர்களை விஜிலென்ஸ் போலீசார் கைது செய்தது. அவர்களின் அறைகளில் பரிசோதனை நடத்தியதில் கோபகுமாரிடம் இருந்து 13,820 ரூபாயும், இரண்டு கிராம் தங்க லாக்கெட்டும் பறிமுதல் செய்யப்பட்டன. சுனிலிடம் இருந்து 17 வெளிநாட்டு கரன்சிகளும், 12,500 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரும்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தலைப்பு செய்திகள்

சபரிமலை: கனமழைக்கு மத்தியிலும் ஆவணி, ஓணம் பூஜைகளுக்கு முன்பதிவு துவக்கம்!
சபரிமலை: கனமழைக்கு மத்தியிலும் ஆவணி, ஓணம் பூஜைகளுக்கு முன்பதிவு துவக்கம்!
விலை உயர்வு காலத்தில் 5 கிலோ குட்டி சிலிண்டர்: எளிதான சமையல் தீர்வு!
விலை உயர்வு காலத்தில் 5 கிலோ குட்டி சிலிண்டர்: எளிதான சமையல் தீர்வு!
டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!
டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!
சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் ரூட்டில் வரப்போகும் மிகப்பெரிய மாற்றம்! ரூ.2.37 லட்சம் கோடி மெகா கணக்கு... 
சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் ரூட்டில் வரப்போகும் மாற்றம்! ரூ.2.37 லட்சம் கோடி கணக்கு... 

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Embed widget