மேலும் அறிய

"கட்டாய மதமாற்றம் ஒரு சீரியசான விஷயம்... அரசியலமைப்புக்கு எதிரானது" - உச்ச நீதின்றம் அதிரடி கருத்து..!

மிரட்டியும், அச்சுறுத்தியும், பரிசு கொடுத்தும், பணம் கொடுத்தும் ஏமாற்றி மேற்கொள்ளப்படும் மோசடியான மதமாற்றத்திற்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது.

சமீப காலமாகவே, மதமாற்றம் விவகாரம் பேசுபொருளாக மாறியுள்ளது. இதற்கு எதிராக, பாஜக ஆளும் பல்வேறு மாநிலங்களில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதில், கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், மதமாற்றம் என்பது சட்டப்படி செல்லும். ஆனால், கட்டாய மதமாற்றம் மட்டுமே சட்ட விரோதமான செயலாக கருதப்படுகிறது.

இச்சூழலில், மிரட்டியும், அச்சுறுத்தியும், பரிசு கொடுத்தும், பணம் கொடுத்தும் ஏமாற்றி மேற்கொள்ளப்படும் மோசடியான மதமாற்றத்திற்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கை, மூத்த நீதிபதிகள் எம்.ஆர். ஷா மற்றும் சி.டி. ரவிகுமார் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. நேற்று நடைபெற்ற விசாரணையில், கட்டாய மதமாற்றம் ஒரு தீவிரமான விவகாரம் என்றும் அது அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

இதையடுத்து, மிரட்டியும், அச்சுறுத்தியும், பரிசு கொடுத்தும், பணம் கொடுத்தும் ஏமாற்றி மேற்கொள்ளப்படும் மோசடியான மதமாற்றம் குறித்த தகவல்களை மாநிலங்களிடம் இருந்து சேகரித்து வருவதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக மேலும் தகவல்களை சேகரிக்க நேரம் கேட்டுள்ளார். உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா. அவரின் கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம், மத்திய அரசுக்கு ஒரு வார காலம் காலக்கெடு வழங்கியுள்ளது. 

அப்போது, கட்டாய மதமாற்றம் தொடர்பான மனுவை தாக்கல் செய்ய மனுதாரருக்கு உரிமை இல்லை என வழக்கறிஞர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த உச்ச நீதிமன்றம், "அவ்வளவு நுட்பமாக செல்ல வேண்டாம். தீர்வு காண நாங்கள் இங்கு வந்துள்ளோம். நாங்கள் ஒரு காரணத்திற்காக இங்கே இருக்கிறோம். 

 

விஷயங்களைச் சரிசெய்ய நாங்கள் இங்கு வந்துள்ளோம். அறத்தின் நோக்கம் நல்லதாக இருந்தால் அது வரவேற்கத்தக்கது. ஆனால், நோக்கத்தை கருத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது. இதை விரோதமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இது மிகவும் தீவிரமான பிரச்சினை. குறிப்பாக, இது நமது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. 

ஒவ்வொருவரும் இந்தியாவில் இருக்கும் போது, ​​இந்திய கலாச்சாரத்திற்கு ஏற்ப செயல்பட வேண்டும். கட்டாய மத மாற்றம் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். குடிமக்களின் மத சுதந்திரத்தை பாதிக்கலாம். இந்த மிக தீவிரமான சிக்கலைச் சமாளிக்க மத்திய அரசு தலையிட்டு நேர்மையான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ஏமாற்றி, மயக்கி, மிரட்டல் விடுத்து மேற்கொள்ளப்படும் மதமாற்றம் நிறுத்தப்படாவிட்டால் மிகவும் ஆபத்தான சூழ்நிலை உருவாகும்" என தெரிவித்தது.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Top 10 Headlines: அதிமுக நிர்வாகி விபரீத முடிவு.. மமதா பானர்ஜிக்கு பின்னடைவு.. 11 மணி செய்திகள் இதோ!
Top 10 Headlines: அதிமுக நிர்வாகி விபரீத முடிவு.. மமதா பானர்ஜிக்கு பின்னடைவு.. 11 மணி செய்திகள் இதோ!
Mamata Banerjee: ஆப்சென்டான 60 எம்.எல்.ஏக்கள், அதிர்ந்து போன மம்தா பானர்ஜி..! பாஜக வேலையை காட்டியதா?
ஆப்சென்டான 60 எம்.எல்.ஏக்கள், அதிர்ந்து போன மம்தா பானர்ஜி..! பாஜக வேலையை காட்டியதா?
Petrol Diesel Price: பெட்ரோல், டீசல், சிலிண்டர்.. எல்லா விலையையும் உயர்த்திய எண்ணெய் நிறுவனங்கள் - எவ்வளவு தெரியுமா?
பெட்ரோல், டீசல், சிலிண்டர்.. எல்லா விலையையும் உயர்த்திய எண்ணெய் நிறுவனங்கள் - எவ்வளவு தெரியுமா?
PM Modi:
PM Modi: "வெளியே போறீங்களா? அப்போ இதையெல்லாம் கட்டாயம் செய்யுங்க" - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support
Vijay warns Ministers |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: கொத்தடிமைகள்.. உபி... கொத்துஸ்! இளைஞர்களிடம் இப்படியா கட்சியை கொண்டு போவீங்க? கொதிக்கும் திமுக உடன்பிறப்புகள்
DMK: கொத்தடிமைகள்.. உபி... கொத்துஸ்! இளைஞர்களிடம் இப்படியா கட்சியை கொண்டு போவீங்க? கொதிக்கும் திமுக உடன்பிறப்புகள்
TNEA 2026: பொறியியல் படிக்கணுமா? மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
TNEA 2026: பொறியியல் படிக்கணுமா? மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
Annamalai: உண்மையான B டீமை இறக்கும் பாஜக..! அண்ணாமலையின் புதிய கட்சி - ஆப்ரேஷன் “கிறிஸ்துவ மிஷினரி”
உண்மையான B டீமை இறக்கும் பாஜக..! அண்ணாமலையின் புதிய கட்சி - ஆப்ரேஷன் “கிறிஸ்துவ மிஷினரி”
JEE Advanced 2026 Results: ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு: மார்க்‌ஷீட் பெறுவது எப்படி? கட் ஆஃப் எவ்ளோ?
JEE Advanced 2026 Results: ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு: மார்க்‌ஷீட் பெறுவது எப்படி? கட் ஆஃப் எவ்ளோ?
ஷிவராஜ்குமார் நடிக்கும் படத்தில் மீண்டும் ஹீரோவாக அபிஷன் ஜீவிந்த்..புதிய பட ப்ரோமோ
ஷிவராஜ்குமார் நடிக்கும் படத்தில் மீண்டும் ஹீரோவாக அபிஷன் ஜீவிந்த்..புதிய பட ப்ரோமோ
CV Shanmugam Next Plan : சி.வி.சண்முகத்தின் ராஜினாமா முடிவை மாற்றிய அந்த ஒரு போன் கால்.! திடீர் ட்விஸ்ட்- நடந்தது என்ன.?
சி.வி.சண்முகத்தின் ராஜினாமா முடிவை மாற்றிய அந்த ஒரு போன் கால்.! திடீர் ட்விஸ்ட்- நடந்தது என்ன.?
Mamata Banerjee: ஆப்சென்டான 60 எம்.எல்.ஏக்கள், அதிர்ந்து போன மம்தா பானர்ஜி..! பாஜக வேலையை காட்டியதா?
ஆப்சென்டான 60 எம்.எல்.ஏக்கள், அதிர்ந்து போன மம்தா பானர்ஜி..! பாஜக வேலையை காட்டியதா?
CM Vijay: திருச்சி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை கெடுக்க திமுக சதி? - விஜயை விளாசும் நெட்டிசன்கள்!
CM Vijay: திருச்சி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை கெடுக்க திமுக சதி? - விஜயை விளாசும் நெட்டிசன்கள்!
Embed widget