தோல்வியை சந்திக்கும் போது பா.ஜ.க. கடைபிடிக்கும் வழிமுறை ஐ.டி. சோதனை - ராகுல்காந்தி கண்டனம்
தேர்தலில் தோல்வியை சந்திக்க நேரிடும்போது பா.ஜ.க. எதிர்க்கட்சிகள் மீது கடைபிடிக்கும் வழிமுறையே வருமான வரி சோதனை என்று ராகுல்காந்தி கண்டனத்தை கூறியுள்ளார்.
தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் ஒரே கட்டமாக வரும் 6-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக, அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை வீட்டில் காலை முதல் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும், அண்ணாநகர் தி.மு.க. வேட்பாளர் மோகன் மற்றும் அவரது மகன், அரவக்குறிச்சி தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி ஆகியோரது வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தேர்தல் நேரத்தில் வருமானவரித்துறையினர் நடத்தும் இந்த சோதனைக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது.
<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Raiding the opposition is BJP’s coping mechanism when facing electoral defeat.</p>— Rahul Gandhi (@RahulGandhi) <a href="https://twitter.com/RahulGandhi/status/1377932075680997376?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>April 2, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வருமான வரித்துறை சோதனைகளுக்கு கண்டனத்தை பதிவு செய்துள்ளார். ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், “ தேர்தலில் தோல்வியை எதிர்கொள்ளும்போது எதிர்க்கட்சிகள் மீது பா.ஜ.க. கடைபிடிக்கும் வழிமுறையே வருமான வரி சோதனை” என்று பதிவிட்டுள்ளார். கடந்த சில வாரங்களாக புதுவை, கேரளம், தமிழகம் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க.வை எதிர்த்து போட்டியிடும் கட்சி வேட்பாளர்களின் அலுவலங்கள் மற்றும் இல்லங்களில் வருமான வரி சோதனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.