Rahul Gandhi : பிரதமர் மோடியை தொடர்ந்து ப்ரொஃபைல் பிக்சரை மாற்றிய ராகுல் காந்தி.. எந்த புகைப்படம் தெரியுமா?
'ஹர் கர் திரங்கா' கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி, ட்விட்டர் கணக்கின் ப்ரொபைல் பிக்சரை மாற்றியிருந்த நிலையில், தற்போது ராகுல் காந்தியும் தனது ப்ரொபைல் பிக்சரை மாற்றியுள்ளார்.
இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்று வரும் 'ஹர் கர் திரங்கா' கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி, ட்விட்டர் கணக்கின் ப்ரொபைல் பிக்சரை மாற்றியிருந்த நிலையில், தற்போது ராகுல் காந்தியும் தனது ப்ரொபைல் பிக்சரை மாற்றியுள்ளார்.
देश की शान है, हमारा तिरंगा
— Rahul Gandhi (@RahulGandhi) August 3, 2022
हर हिंदुस्तानी के दिल में है, हमारा तिरंगा pic.twitter.com/lhm0MWd3kM
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தேசியக் கொடியை ஏந்தியிருக்கும் படத்தை புதிய ட்விட்டர் சுயவிவரப் புகைப்படமாக ராகுல் காந்தி வைத்துள்ளார். அந்த புகைப்படத்தில், முன்னாள் பிரதமர் நேரு கருப்பு மற்றும் வெள்ளை நிறத்திலும், தேசிய கொடி மூவர்ண வண்ணத்திலும் உள்ளது.
"மூவர்ணக் கொடி நாட்டின் பெருமை. அது ஒவ்வொரு குடிமகனின் இதயத்திலும் உள்ளது" என ராகுல் காந்தி இந்தியில் ட்வீட் செய்துள்ளார். ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தியும், தனது ட்விட்டர் ப்ரொபைல் பிக்சரை மாற்றியுள்ளார். அதே நேருவின் புகைப்படத்தைதான் அவரும் ப்ரொபைல் பிக்சராக வைத்துள்ளார்.
“विजयी विश्व तिरंगा प्यारा,
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) August 3, 2022
झंडा ऊँचा रहे हमारा” pic.twitter.com/KiWa7EP5qM
"ஹர் கர் திரங்கா" கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஆகஸ்ட் 2 முதல் 15 வரை, தங்கள் சமூக ஊடக கணக்குகளில் தேசியக் கொடியை தங்கள் சுயவிவரப் புகைப்படமாகப் பயன்படுத்துமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில், "இன்று, சிறப்பு வாய்ந்த ஆகஸ்ட் 2ஆம் தேதியாகும். ஆசாதி கா அம்ரித் மஹோத்சவை (75ஆவது சுதந்திர தின விழா) கொண்டாடும் நேரத்தில், நமது மூவர்ணக் கொடியைக் கொண்டாடும் ஒரு கூட்டு இயக்கமான 'ஹர் கர் திரங்கா'வுக்கு நம் தேசம் தயாராகி வருகிறது.
சமூக ஊடகப் பக்கங்களில், நான் எனது டிபியை (காட்சிப் படம்) மாற்றியுள்ளேன். நீங்கள் அனைவரும் இதைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என பிரதமர் மோடி நேற்று ட்வீட் செய்துள்ளார். தேசியக் கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கய்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.
சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று டெல்லி செங்கோட்டையில் இருந்து தொடங்கப்பட்ட பைக் பேரணியில் எம்பிக்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக செங்கோட்டையில் இருந்து தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் பைக்கில் சென்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்