2022ல் வாயை விட்ட ராகுல்காந்தி! – சம்மன் அனுப்பிய லக்னோ நீதிமன்றம்! என்ன விஷயம்?
இந்திய ராணுவத்திற்கு எதிரான கருத்துகளுக்காக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு லக்னோ நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

இந்திய ராணுவத்திற்கு எதிரான கருத்துகளுக்காக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு லக்னோ நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
நாடு தழுவிய 'பாரத் ஜோடோ யாத்திரை'யின் போது இந்திய ராணுவத்திற்கு எதிராக பேசியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு லக்னோ நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல்காந்தி மார்ச் மாதம் லக்னோ எம்பி, எம்எல்ஏ நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
ராணுவம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்திக்கு கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் அலோக் வர்மா சம்மன் அனுப்பியுள்ளார்.
மார்ச் 24 ஆம் தேதி திட்டமிடப்பட்ட அடுத்த விசாரணையில் தனது தரப்பை முன்வைக்குமாறு அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லை சாலை அமைப்பின் (BRO) முன்னாள் இயக்குநர் உதய் சங்கர் ஸ்ரீவஸ்தவா, காந்தி மீது புகார் அளித்ததன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகார்தாரரின் வழக்கறிஞர் விவேக் திவாரி, டிசம்பர் 16, 2022 அன்று பாரத் ஜோடோ யாத்திரையின் போது, ராகுல் காந்தி ஊடகங்கள் முன் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதற்கு ராணுவம் விமர்சனம் செய்தது. ராகுல் காந்தியின் தவறான பேச்சு மக்கள் ராணுவ அதிகாரிகளைக் கேள்வி கேட்கவும் கேலி செய்யவும் வழிவகுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசம் தவாங் மாவட்டம் யாங்சி எல்லை பகுதியில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி புகுந்தனர். அவர்களை இந்திய ராணுவ வீரர்கள் விரட்டியடித்தனர்.
அப்போது பேசிய ராகுல்காந்தி “இந்தியாவின் 2000 சதுர கிலோ மீட்டர் பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு கல்வான் பகுதியில் 20 இந்திய ராணுவ வீரர்களை சீன ராணுவம் கொலை செய்திருக்கிறது.
சீனா போருக்கு தயாராகி கொண்டிருக்கிறது. இந்தியா தூங்கிக் கொண்டிருக்கிறது” எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி வாராங்கல் நிகழ்ச்சியை முடித்துவிட்டு இன்று ரயில் மூலம் சென்னை வருகிறார். அங்கிருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக, நேற்று பிற்பகல் 2.45 மணிக்கு, விமானம் மூலம் டெல்லியில் இருந்து புறப்பட்டு, மாலை 5 மணிக்கு ஹைதராபாத் விமான நிலையம் சென்றார். அங்கிருந்து மாலை 5.15 மணிக்கு, ஹெலிகாப்டரில் மாலை 6 மணிக்கு வாரங்கல் சென்றடைந்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

