மேலும் அறிய

PM Modi Speech: எவ்வளவு சேற்றை வீசினாலும் தாமரை மலர்ந்தே தீரும் - பிரதமர் மோடி பேச்சு

நீங்கள் எங்கள் மீது சேற்றை வீசினாலும் தாமரை மலர்ந்தே தீரும் என்று பிரதமர் மோடி மாநிலங்களவையில் பேசினார்.

2023ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து கடந்த பிப்ரவரி 1-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெற்று வருகிறது. 

தாமரை மலரும்:

பிரதமர் மோடி மாநிலங்களவையில் இன்று உரையாற்றினார். அப்போது, அவர் பேசினார். அவர் பேசியதாவது, “எதிர்க்கட்சிகளின் மாநிலங்களவை உறுப்பினர்களின் செயல்பாடுகள் தேச நலனை பாதிக்கும். நீங்கள் எங்கள் மீது சேற்றை வீசினாலும் அதில் தாமரை மலர்ந்தே தீரும்.

நாடாளுமன்றத்தில் பலருடைய நடவடிக்கைகள், உரைகள் ஏமாற்றம் அளிக்கும் விதமாக உள்ளன. காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து தோல்விகளை சந்தித்தாலும் தங்களது குறைகளை உணரவில்லை. காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிக்காலத்தில் முன்னேற்றப்பாதை குண்டும், குழியுமாக இருந்தது.

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் பொன்னான நேரத்தை எதிர்க்கட்சிகள் வீணடித்தன. நாட்டின் பிரச்சினைகளுக்கு நாங்கள் தீர்வு காண்கிறோம். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு 11  கோடி இல்லங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. முந்தைய ஆட்சிக்காலத்தில் 3 கோடி மக்களுக்கு மட்டுமே குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டிருந்தன. 

சிலிண்டர் இணைப்புகள்:

கர்நாடக மாநிலத்தில் மட்டும் 1.7 கோடி ஜன்தன் வங்கிக்கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அரசு நலத்திட்டங்களின் பயன் ஜன்தன் வங்கிக்கணக்குகள் மூலம் மக்களுக்கு நேரடியாக சென்று சேர்கிறது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின் சமையல் எரிவாயு இணைப்புகள் 14 கோடியில் இருந்து 32 கோடியாக உயர்ந்துள்ளது.

விரக்தியடைந்த பலர் முழக்கங்களை எழுப்புகிறார்கள் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். அரசு திட்டங்களின் பலன் சாதி, மத பாகுபடின்றி அனைவருக்கும் கிடைக்கின்றன. அனைவருக்கும் அரசு திட்டங்கள் கிடைப்பதன் மூலம் சமூகநீதி நிலைநாட்டப்படுகிறது. அனைத்து பயனாளிகளையும் திட்டங்கள் சென்றடைவதால் உண்மையான மதச்சார்பின்மை நிலைநாட்டப்படுகிறது. நீண்ட நாட்களாக நாடு சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு என்பதே எங்கள் அரசின் நோக்கம். பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் வளர்ச்சிக்கான திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. சிறு, குறு தொழில் முனைவோர், விவசாயிகளுக்கான தீர்வுகளை காங்கிரஸ் ஆட்சி வழங்கவில்லை.”

இவ்வாறு அவர் பேசினார்.

எதிர்க்கட்சிகள் அமளி:

பிரதமர் மோடி மாநிலங்களவையில் பேசிக்கொண்டிருந்தபோது எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் அமளியில் ஈடுபட்டனர். நாட்டையே பரபரப்பாக்கிய அதானி குழுமம் பற்றிய விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோஷங்கள் எழுப்பினர். ஆனால், பிரதமர் மோடி அவர்களின் கோஷங்களுக்கு இடையிலும் தொடர்ந்து பேசினார்.

இந்தியாவின் நம்பர் 1 பணக்காரராகவும், உலகின் டாப் 2 பணக்காரராகவும் இருந்த அதானி பற்றியும், அவரது நிறுவனம் பற்றியும் ஹிண்டன்பெர்க் வெளியிட்ட அறிக்கையால் இந்திய பங்குச்சந்தையில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்தது. இதன் தாக்கத்தால் அதானி குழுமத்திற்கு லட்சக்கணக்கான கோடிகள் நஷ்டம் ஏற்பட்டது. உலக பணக்காரர்கள் பட்டியலில் 10வது இடத்திற்கு கீழே தள்ளப்பட்டார். இந்தியாவிலும் பணக்காரர்கள் பட்டியலில் தனது நம்பர் 1 இடத்தை அம்பானியிடம் இழந்தார். 

மேலும் படிக்க:Cow Hug Day: காதலர் தினத்தில் பசுவுடன் ரொமான்ஸா.... பசு அணைப்பு தினம் கோரிக்கையை ட்ரோல் செய்து தள்ளும் நெட்டிசன்கள்!

மேலும் படிக்க: Watch Video: பதைபதைக்க வைத்த காட்சிகள்.. நீதிமன்றத்திற்குள் புகுந்த சிறுத்தை.. கம்பெடுத்து தாக்கிய வழக்கறிஞர்கள்..! அடுத்து நடந்தது என்ன?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

G.O.A.T Release Issue | G.O.A.T ரிலீஸில் சிக்கல்! அப்செட்டில் விஜய் FANSKN Nehru Lalkudi MLA | ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
TN 12th Hall Ticket: பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
Sasikala:
Sasikala: "என்னுடைய என்ட்ரி ஆரம்பம்" பட்டிதொட்டியெங்கும் சென்று மக்களை சந்திப்பேன் - சசிகலா ஆவேசம்
Vikravandi Bypoll: அதிமுக வழியில் தேமுதிக.. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு!
அதிமுக வழியில் தேமுதிக.. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு!
ஆம்புலன்ஸ் கூட போக முடியாது: ரூ.7 லட்சம் செலவில் சாலையை விரிவாக்கம் செய்து கொண்ட பொதுமக்கள்
ஆம்புலன்ஸ் கூட போக முடியாது: ரூ.7 லட்சம் செலவில் சாலையை விரிவாக்கம் செய்து கொண்ட பொதுமக்கள்
Embed widget