Fact Check: ”28 நாட்களுக்கு ரூ.239க்கு இலவசமாக ரீசார்ஜ் செய்வதாக மத்திய அரசு உறுதியா?..” : உண்மையா இது?
Free Reacharge: இந்தியர்களுக்கு மத்திய அரசு இலவசமாக ரூ. 239க்கு மொபைல் ரீசார்ஜ் செய்யப்போவதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.
மத்திய அரசு, 28 நாட்களுக்கு ரூ. 239க்கு இலவசமாக மொபைல் ரீசார்ஜ் செய்ய உள்ளது என்ற செய்தி வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வந்தது. மேலும், அதற்கு குறிப்பிட்ட லிங்க்கை கிளிக் செய்யுமாறு என தெரிவிக்கப்பட்டிருந்தது.
போலி செய்தி:
இந்நிலையில், இந்த செய்தி குறித்து மத்திய அரசின் செய்தி ஒளிபரப்பு நிறுவனமான பிஐபி உண்மை அறியும் குழு ஆய்வு செய்தது. அதனடிப்படையில், இந்த செய்தி போலியானது என்றும் யாரும் இதை நம்ப வேண்டாம் எனவும் தெரிவித்தது.
இலவச மொபைல் ரீசார்ஜ் திட்டத்தின் கீழ் ரூ.239 செல்போன் ரீசார்ஜ் கோரும் போலி வாட்ஸ்-அப் செய்திகளை நம்ப வேண்டாம் என்று மத்திய அரசின் உண்மை கண்டறியும் குழு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
#FraudAlert
— PIB Fact Check (@PIBFactCheck) March 26, 2023
A #WhatsApp message claims that the central government is offering all users a recharge of ₹239 for 28 days under the 'Free Mobile Recharge Scheme' #PIBFactCheck:
✔️This claim is #fake
✔️No such announcement has been made by the Government Of India pic.twitter.com/AICm63ga8W
மேலும் தெரிவித்துள்ளதாவது, மக்களை ஏமாற்றுவதற்காக சமூக ஊடகங்களில் பல தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன. "இலவச மொபைல் ரீசார்ஜ் திட்டத்தின் கீழ் மத்திய அரசு அனைத்து பயனர்களுக்கும் 28 நாட்களுக்கு ரூ .239 ரீசார்ஜ் வழங்குவதாக ஒரு #WhatsApp செய்தி கூறுகிறது" என்று பிஐபி தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், பத்திரிகை தகவல் பணியகத்தின் உண்மை சரிபார்ப்பின் அடிப்படையில், அரசாங்கத்தால் அத்தகைய அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை
இந்நிலையில், இந்த லிங்க்கை கிளிக் செய்தால், இலவசமாக் ரீசார்ஜ் செய்யப்படும் என்ற லிங்க் வந்தால் யாரும் அதை கிளிக் செய்ய வேண்டாம். இதுகுறித்தான போலி செய்தியை யாரும் பரப்ப வேண்டாம். இந்த செய்தியை பலருக்கும் அனுப்பி முன்னெச்சரிக்கை செய்யுங்கள்.
Also Read: Ramzan: விண்வெளியில் ரம்ஜான் கொண்டாட்டம்.. நெகிழ வைத்த ஐக்கிய அரபு அமீரக வீரர்..!
Also Read: Whatsapp Update: இனி அட்மின் கையில் அதிகாரம்..! வாட்ஸ்-அப்பில் வருகிறது புதிய அப்டேட்..!