மேலும் அறிய

Poll Of Polls: எதிர்பார்ப்பை கிளப்பிய ஐந்து மாநில தேர்தல்.. பாஜகவா? காங்கிரஸா? பிரம்மாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?

பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சியும் ராஜஸ்தானில் பாஜகவும் ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில், ஐந்து மாநில தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதற்கான முடிவுகள் வரும் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 3ஆம் தேதி) அறிவிக்கப்படவிருக்கிறது. அதற்கு முன்னதாக, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சியும் ராஜஸ்தானில் பாஜகவும் ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் பல்வேறு நிறுவனங்கள், வேறு வேறு விதமான கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

சத்தீஸ்கர்:

90 தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கரில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. பிரதான எதிர்க்கட்சியாக பாஜக உள்ளது. 

ஏபிபி செய்தி நிறுவனம் சி வோட்டருடன் இணைந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளில், மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 45 முதல் 51 தொகுதிகள் வரையில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பிரதான எதிர்க்கட்சியான பாஜக, 39 முதல் 45 தொகுதிகளில் வெற்றிபெறும் என கணிக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள், 2 இடங்களில் வெற்றிபெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

இந்தியா டிவி நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளில், 46 முதல் 56 தொகுதிகள் வரையில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பிரதான எதிர்க்கட்சியான பாஜக, 30 முதல் 40 தொகுதிகளில் வெற்றிபெறும் என கணிக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள், 3 முதல் 5 இடங்களில் வெற்றிபெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

இந்தியா டுடே நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளில், 40 முதல் 50 தொகுதிகள் வரையில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பிரதான எதிர்க்கட்சியான பாஜக, 36 முதல் 46 தொகுதிகளில் வெற்றிபெறும் என கணிக்கப்பட்டுள்ளது. 

ஜன் கி பாத் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளில், 42 முதல் 53 தொகுதிகள் வரையில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பிரதான எதிர்க்கட்சியான பாஜக, 35 முதல் 45 தொகுதிகளில் வெற்றிபெறும் என கணிக்கப்பட்டுள்ளது. 

ராஜஸ்தான்:

ராஜஸ்தானில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. பிரதான எதிர்க்கட்சியாக பாஜக உள்ளது. 

ஏபிபி செய்தி நிறுவனம் சி வோட்டருடன் இணைந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளில், தேர்தல் நடந்த 199 தொகுதிகளில் 127 முதல் 137 தொகுதிகள் வரையில் பாஜக வெற்றிபெறும் என கூறப்பட்டுள்ளது. தற்போது ஆளுங்கட்சியாக உள்ள காங்கிரஸ், 59 முதல் 69 தொகுதிகளில் வெற்றிபெறும் என கணிக்கப்பட்டுள்ளது.  

ஜன் கி பாத் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளில், 62 முதல் 85 தொகுதிகள் வரையில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பிரதான எதிர்க்கட்சியான பாஜக, 100 முதல் 122 தொகுதிகளில் வெற்றிபெறும் என கணிக்கப்பட்டுள்ளது. 
மற்றவர்கள், 14 முதல் 15 இடங்களில் வெற்றிபெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

போல்ஸ்டர் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளில், 90 முதல் 100 தொகுதிகள் வரையில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பிரதான எதிர்க்கட்சியான பாஜக, 100 முதல் 110 தொகுதிகளில் வெற்றிபெறும் என கணிக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள், 5 முதல் 15 இடங்களில் வெற்றிபெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசம்:

பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் ஏபிபி செய்தி நிறுவனம் சி வோட்டருடன் இணைந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. 230 தொகுதிகளில் 113 முதல் 125 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறும் என கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஆளுங்கட்சியான பாஜக, 104 முதல் 116 தொகுதிகளில் வெற்றிபெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஜன் கி பாத் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளில், 102 முதல் 125 தொகுதிகள் வரையில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பாஜக, 100 முதல் 123 தொகுதிகளில் வெற்றிபெறும் என கணிக்கப்பட்டுள்ளது. 

ரிபப்ளிக் டிவி நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளில், 97 முதல் 107 தொகுதிகள் வரையில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பாஜக, 118 முதல் 130 தொகுதிகளில் வெற்றிபெறும் என கணிக்கப்பட்டுள்ளது. மற்ற கட்சிகள், 2 தொகுதிகளில் வெற்றிபெறலாம் என கூறப்பட்டுள்ளது.

டிவி 9 நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளில், 111 முதல் 121 தொகுதிகள் வரையில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பாஜக, 106 முதல் 116 தொகுதிகளில் வெற்றிபெறும் என கணிக்கப்பட்டுள்ளது. மற்ற கட்சிகள், 2 தொகுதிகளில் வெற்றிபெறலாம் என கூறப்பட்டுள்ளது.

தெலங்கானா:

புது மாநிலமாக உருவான தெலங்கானாவில் கடந்த ஒன்பதரை ஆண்டுகளாக பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. 
அங்கு, ஏபிபி செய்தி நிறுவனம் சி வோட்டருடன் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, மொத்தமுள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளில் ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி கட்சி, 49 முதல் 61 இடங்களில் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் கட்சி, 43 முதல் 55 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, தெலங்கானாவில் 5 முதல் 11 இடங்களில் வெற்றிபெறும் என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. மற்ற கட்சிகள், 4 முதல் 10 இடங்களில் வெற்றி பெறும் கணிக்கப்பட்டுள்ளது.

ஜன் கி பாத் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளில், ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி கட்சி, 40 முதல் 45 இடங்களில் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் கட்சி, 48 முதல் 64 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, தெலங்கானாவில் 7 முதல் 13 இடங்களில் வெற்றிபெறும் என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. மற்ற கட்சிகள், 4 முதல் 7 இடங்களில் வெற்றி பெறும் கணிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்ஜி நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளில், ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி கட்சி, 53 முதல் 58 இடங்களில் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் கட்சி, 49 முதல் 54 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, தெலங்கானாவில் 4 முதல் 6 இடங்களில் வெற்றிபெறும் என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. மற்ற கட்சிகள், 6 முதல் 7 இடங்களில் வெற்றி பெறும் கணிக்கப்பட்டுள்ளது.

மிசோரம்:

மிசோ தேசிய முன்னணி ஆளும் மிசோரத்தில் ஏபிபி செய்தி நிறுவனம், சி வோட்டருடன் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பின்படி, மொத்தமுள்ள 40 தொகுதிகளில் ஆளும் மிசோ தேசிய முன்னணி, 15 முதல் 21 இடங்களில் வென்று ஆட்சியை தக்க வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சோரம் மக்கள் இயக்கம், 12 முதல் 18 தொகுதிகளையும் காங்கிரஸ், 2 முதல் 8 தொகுதிகளையும் கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. 

ஜன் கி பாத் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளில், ஆளும் மிசோ தேசிய முன்னணி, 10 முதல் 14 இடங்களில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சோரம் மக்கள் இயக்கம், 15 முதல் 25 தொகுதிகளில் வெல்லும் என கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ், 5 முதல் 9 தொகுதிகளை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. 

பி மார்க் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளில், ஆளும் மிசோ தேசிய முன்னணி, 14 முதல் 20 இடங்களில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சோரம் மக்கள் இயக்கம், 9 முதல் 15 தொகுதிகளில் வெல்லும் என கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ், 7 முதல் 3 தொகுதிகளையும் கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மாணவி பாலியல் வன்கொடுமைக்கு தி.மு.க.தான் காரணம்" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு!
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மாணவி பாலியல் வன்கொடுமைக்கு தி.மு.க.தான் காரணம்" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு!
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
TN Rains: மழை நகராக மாறிய தலைநகர்! இன்னைக்கு எந்த மாவட்டத்துல எல்லாம் மழை? இதுதான் லிஸ்ட்
TN Rains: மழை நகராக மாறிய தலைநகர்! இன்னைக்கு எந்த மாவட்டத்துல எல்லாம் மழை? இதுதான் லிஸ்ட்
Watch Video: அண்ணன் இங்கயே ஆரம்பிச்சுட்டாரு! சாம் கோன்ஸ்டாசை இடித்து தள்ளிய விராட் கோலி!
Watch Video: அண்ணன் இங்கயே ஆரம்பிச்சுட்டாரு! சாம் கோன்ஸ்டாசை இடித்து தள்ளிய விராட் கோலி!
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 10,000 வேளாண் கூட்டுறவு சங்கம் தொடங்கியாச்சு!
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 10,000 வேளாண் கூட்டுறவு சங்கம் தொடங்கியாச்சு!
Rasipalan December 26: மேஷத்திற்கு கடன் பிரச்னை குறையும்; ரிஷபத்திற்கு பணவரவு - உங்க ராசி பலன்?
Rasipalan December 26: மேஷத்திற்கு கடன் பிரச்னை குறையும்; ரிஷபத்திற்கு பணவரவு - உங்க ராசி பலன்?
Embed widget