மேலும் அறிய
Advertisement
கொரோனா அதிகரிப்பதால் அனைத்து முதல்வர்களுடன் ஏப்.8 ல் பிரதமர் ஆலோசனை
நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஏப்ரல் 8ஆம் தேதி முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்தியாவில் குறைந்து வந்த கொரோனா தொற்று பாதிப்பு, கடந்த மார்ச் மாதம் முதல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், டெல்லி ஆகிய மாநிலங்களில் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதில், மகாராஷ்டிராவில் இன்று முதல் இரவு நேர முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. மேலும், இந்தியாவில் முதல்முறையாக தினசரி கொரோனா தொற்று பாதிப்பு இன்று ஒரு லட்சத்தை கடந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஏப்ரல் 8ஆம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளர். இந்த ஆலோசனை காணொலி மூலம் நடைபெறுகிறது. கொரோனா தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்துவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்புள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion