Farm Laws Repeal: விவசாய சட்டங்களை திரும்பபெற மத்திய அமைச்சரவை ஒப்புதல்
வரும் நாடாளுமன்ற அமர்வில் மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கியுள்ளது.
![Farm Laws Repeal: விவசாய சட்டங்களை திரும்பபெற மத்திய அமைச்சரவை ஒப்புதல் PM Narendra Modi chair cabinet meeting today repealing 3 Farm Laws cabinet order passed ahead winter session Farm Laws Repeal: விவசாய சட்டங்களை திரும்பபெற மத்திய அமைச்சரவை ஒப்புதல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/24/b0c5ee486e61505da0e1f89adb2956ef_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இம்மாதப் பிற்பகுதியில் தொடங்கவிருக்கும் நாடாளுமன்ற அமர்வில் மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கியுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை டெல்லியில் நடைபெற்றது.
Protest and Indian Democracy: போராட்டங்களே இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைக் கூறுகள்!
முன்னதாக, கடந்த 19ம் தேதி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, " மூன்று வேளான் சட்டங்களையும் திரும்பப்பெற நாங்கள் முடிவுசெய்திருக்கிறோம் என்பதை உங்களுக்கும் ஒட்டுமொத்த தேசத்திற்கும் கூறுவதற்கு இன்று நான் வந்திருக்கிறேன்.
புனித குருதேவின் பிறந்தநாள் உணர்வுகொண்ட இந்நாள் ஒருவரையும் குறைகூறுவதற்கான நாள் அல்ல என்று குறிப்பிட்ட பிரதமர் விவசாயிகளின் நலனுக்காக பாடுபடுவதற்கு தம்மைத்தாமே மறு அர்ப்பணிப்பு செய்துகொள்வதாக கூறினார்.
வேளாண் துறைக்கு முக்கியமான திட்டம் ஒன்றையும் அவர் அறிவித்தார். ஜீரோ பட்ஜெட் அடிப்படையில் வேளாண்மையை மேம்படுத்த, நாட்டின் மாறிவரும் தேவைகளுக்கேற்ப, சாகுபடி முறையில் மாற்றம் செய்ய, எம்எஸ்பி-யை அதிக பயனுள்ளதாகவும் வெளிப்படைத் தன்மை உள்ளதாகவும் மாற்ற குழு ஒன்று அமைப்பது பற்றி அவர் அறிவித்தார். இந்தக் குழு மத்திய அரசு, மாநில அரசுகள், விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகள், வேளாண் பொருளாதார நிபுணர்கள் ஆகியோரைப் பிரதிநிதிகளாகக் கொண்டிருக்கும்" என்று தெரிவித்தார்.
விவசாயிகளின் போராட்டாம் தொடரும்:
வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்ற பிரதமரின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட கிசான் மோர்சா அமைப்பு, மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.
11வது கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பிரதமர் மோடி தன்னிச்சையாக வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டவடிவம் கொடுப்பது, லக்கிம்பூர் வன்முறை சம்பவத்துக்கு காரணமான மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவிநீக்கம் செய்வது, வேளாண் போராட்டங்களில் கலந்து கொண்ட விவாசாயிகள் மீது போடப்பட்டிருந்த அத்தனை வழக்குகளையும் திரும்பப் பெறுவது, புதிய மின்சார வரைவு சட்டத்தை திரும்பப் பெறுவது, பெரு நிறுவனகளுக்கு சாதகமாக அமையும் விதைகள் மசோதா சட்டத்தை திரும்பப் பெறுவது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)