மேலும் அறிய

Sudarshan Setu Bridge: கேபிள்களால் தாங்கப்படும் மிக நீளமான பாலம்: இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி! சுவாரஸ்ய தகவல்கள்

Sudarshan Setu Bridge: குஜராத்தில் கட்டப்பட்டுள்ள சுதர்சன் சேது பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.

Sudarshan Setu Bridge: குஜராத்தில் கட்டப்பட்டுள்ள சுதர்சன் சேது பாலம் 2.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைந்துள்ளது.

சுதர்சன் சேது பாலம்:

ஓகா நிலப்பரப்பையும், குஜராத்தில் உள்ள பெய்ட் துவாரகா தீவையும் இணைக்கும் இந்தியாவின் மிக நீளமான கேபிள்களால் தாங்கப்படும் பாலமான சுதர்சன் சேதுவை பிரதமர்  மோடி இன்று திறந்து வைக்க உள்ளார். ஓகா- பெய்ட் துவாரகா சிக்னேச்சர் பாலம் என்றும் அழைக்கப்படும் சுதர்சன் சேது, சுமார் 980 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.2.5 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலம்,  புகழ்பெற்ற துவாரகதீஷ் கோயிலுக்கு வருகை தரும் மக்கள் மற்றும் யாத்ரீகர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது பார்க்கபப்டுகிறது.

பிரதமர் மோடி பெருமிதம்:

பாலம் தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “குஜராத்தின் வளர்ச்சிப் பாதைக்கு இது ஒரு சிறப்பான நாள். ஓகா நிலப்பரப்பையும் பெய்ட் துவாரகாவையும் இணைக்கும் பல திட்டங்களில் சுதர்சன் சேதுவும் உள்ளது. இது ஒரு அற்புதமான திட்டமாகும், இது இணைப்பை மேம்படுத்தும்” என பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சுதர்சன் சேது பாலம் தொடர்பான சுவாரஸ்ய தகவல்கள்:

  • ஓகா நிலப்பகுதியை பெய்ட் துவாரகா தீவுடன் இணைக்கும் சுதர்சன் சேது, பிராந்திய இணைப்பை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • சுதர்சன் சேது என்பது இந்தியாவின் மிக நீளமான கேபிள்களால் தங்கப்படும் பாலமாகும்.
  • நான்கு வழி பாலத்தில் இருபுறமும் 2.50 மீட்டர் அகல நடைபாதைகள் உள்ளன.
  • நடைபாதையின் மேல் பகுதியில் சோலார் பேனல்கள் நிறுவப்பட்டு ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
  • 2017 அக்டோபரில் பிரதமர் நரேந்திர மோடி பாலத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
  • 978 கோடி செலவில் சுதர்சன் சேது பாலம் கட்டப்பட்டது.
  • சுதர்சன் சேது பாலத்தின் இருபுறங்களிலும் பகவத் கீதையின் வாசகங்கள் மற்றும் கிருஷ்ணரின் படங்கள் இடம்பெற்றுள்ளன.
  • துவாரகாவின் பெய்ட்டில் உள்ள துவாரகாதீஷ் கோயிலுக்கு யாத்ரீகர்கள் படகில் மட்டுமே செல்ல வேண்டியிருந்த நிலையில் தற்போது இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது 
  • Okha-Beyt துவாரகா சிக்னேச்சர் பாலம் சுற்றுலா பயணிகளையும் கவரும்.

குஜராத் எய்ம்ஸ் மருத்துவமனை:

சுதர்சன் சேது பாலத்தை திறப்பது மட்டுமின்றி, குஜராத்தின் முதல் எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி ராஜ்கோட்டில் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கிறார். ராஜ்கோட்டில் இருந்து பிரதமரால் திறந்து வைக்கப்படும் ஐந்து எய்ம்ஸ் மருத்துவமனைகளில் இதுவும் ஒன்றாகும். NHAI, இரயில்வே, எரிசக்தி மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ், சாலைகள் மற்றும் கட்டிடங்கள் போன்ற பல்வேறு மாநில மற்றும் மத்திய துறைகளின் 48 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார் . 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

சபரிமலை: கனமழைக்கு மத்தியிலும் ஆவணி, ஓணம் பூஜைகளுக்கு முன்பதிவு துவக்கம்!
சபரிமலை: கனமழைக்கு மத்தியிலும் ஆவணி, ஓணம் பூஜைகளுக்கு முன்பதிவு துவக்கம்!
விலை உயர்வு காலத்தில் 5 கிலோ குட்டி சிலிண்டர்: எளிதான சமையல் தீர்வு!
விலை உயர்வு காலத்தில் 5 கிலோ குட்டி சிலிண்டர்: எளிதான சமையல் தீர்வு!
டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!
டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!
சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் ரூட்டில் வரப்போகும் மிகப்பெரிய மாற்றம்! ரூ.2.37 லட்சம் கோடி மெகா கணக்கு... 
சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் ரூட்டில் வரப்போகும் மாற்றம்! ரூ.2.37 லட்சம் கோடி கணக்கு... 

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Embed widget