மேலும் அறிய

Sabarimalai : சபரிமலையில் சேரும் பிளாஸ்டிக் கழிவுகள்.. விழிப்புணர்வு ஏற்படுத்தியும் எந்த பலனுமில்லை!

சபரிமலையில் தினமும் சுமார் 15,400 கிலோ பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகள் எரியூட்டி  எரிக்கப்பட்டும் எந்த பலனும் இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சபரிமலையை பிளாஸ்டிக் இல்லாத இடமாக மாற்ற கேரள அரசும், தேவசம்போர்டும் மேற்கொண்ட முயற்சிகள் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என கோயில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசுத்திசேனா அமைப்பினர் மற்றும்  தன்னார்வலர்களால் தினமும் சன்னிதானம் வளாகத்தில் இருந்து சுமார் 35 லோடு குப்பைகள் அகற்றப்படுகிறது என்றும், இதில் பாதிக்கு மேல் பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பது அதிர்ச்சியளிப்பதாக கூறப்படுகிறது.

எரியூட்டப்படும் 15,400 பிளாஸ்டிக் கழிவுகள்: 

பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்பு சபரிமலை வளாகத்தில் உள்ள தேவசம்போர்டு  மையத்தில் தினமும் கண்காணிக்கப்படுகிறது. இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில் இங்கு தினமும் சுமார் 15,400 கிலோ பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகள் எரியூட்டி  எரிக்கப்படுகிறது. மீதமுள்ள கழிவுகளிலிருந்து பிளாஸ்டிக் பிரிக்கப்படாததால், அதன் சரியான அளவு தெளிவாகத் தெரியவில்லை.

இதையும் படிங்க : EVKS Elangovan Passed Away: காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார் - காங்கிரஸ் தொண்டர்கள் சோகம்

Sabarimalai : சபரிமலையில் சேரும் பிளாஸ்டிக் கழிவுகள்.. விழிப்புணர்வு ஏற்படுத்தியும் எந்த பலனுமில்லை!

இருப்பினும், இந்த தினசரி கழிவுகளில்  பாதி பிளாஸ்டிக் கழிவுகள் என்று அதிகாரிகள் மதிப்பிடுகின்றனர். பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்க மையத்தில் உள்ள மூன்று எரியூட்டி இயந்திரங்களைக்கொண்டு பயன்படுத்தப்படுகிறது. , ஒவ்வொன்றும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 700 கிலோ கழிவுகளை எரிக்கிறர்து, ஒரு நாளைக்கு 22 மணி நேரம் இயங்குகிறது. இரண்டு மாத புனித யாத்திரை காலத்தில், 9.24 லட்சம் கிலோகிராம் கழிவுகள் இந்த மையத்தில் செயலாக்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தினமும் குறைந்தது 3,500 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கப்படுவதால், சுற்றியுள்ள வனச் சூழலில் புகை வெளியேறுகிறது. 

இதையும் படிங்க : EVKS Elangovan: காவு வாங்கும் ஈரோடு கிழக்கு தொகுதி? அப்பா, மகன் இருவருமே அடுத்தடுத்த ஆண்டில் மரணம்!

Sabarimalai : சபரிமலையில் சேரும் பிளாஸ்டிக் கழிவுகள்.. விழிப்புணர்வு ஏற்படுத்தியும் எந்த பலனுமில்லை!

இருப்பினும், காற்று மாசுபாட்டின் தாக்கத்தை குறைக்கின்றன என்று உறுதியளிக்கப்படுகிறது. சுத்திகரிப்புக்குப் பிறகு வெளியிடப்படும் புகை காற்றின் தரத்திற்கு குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்தாது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகின்ன்றனர். இது குறித்து குப்பை செயலாக்க மையத்தின் அதிகாரிகள் கூறுகையில், பன்னீர், கற்பூரம், வெர்மிலியன் கவர்கள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் அதிகளவில் வந்து சேருவது அதிகரித்து வருகிறது. பக்தர்கள் வருகையின் போது பிளாஸ்டிக் மற்றும் இதர கழிவுகளை குறைப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறுகின்றனர். திருவனந்தபுரம் தேவசம் போர்டு முன்பு 'இருமுடிகெட்டு'வில் பிளாஸ்டிக்கைத் தவிர்ப்பது போன்ற பிரச்சனைகளைத் தீர்க்க பிரபலங்களை உள்ளடக்கிய விளம்பரப் பிரச்சாரத்தைத் தொடங்க முயற்சிக்கப்பட்டுள்ளது.

Pongal Gift Pack 2025 : “ரேஷன் கார்டுகளுக்கு ஆயிரம் ரூபாய்” சிறப்பு பொங்கல் தொகுப்புகள் – எப்போது கிடைக்கும்?

Sabarimalai : சபரிமலையில் சேரும் பிளாஸ்டிக் கழிவுகள்.. விழிப்புணர்வு ஏற்படுத்தியும் எந்த பலனுமில்லை!

இந்த  மண்டல பூஜை  கால தொடக்கத்தில் உருவாக்கப்பட்ட செயல் திட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள் முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது. பக்தர்கள் பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தும் பேனர்கள் மற்றும் பலகைகள் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு, பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு மாற்றாக ஸ்டீல் பாட்டில்கள் வழங்கப்பட்டன.

இருப்பினும், இந்த முயற்சிகளைத் தவிர, சபரிமலைக்கு வரும் அதிக அளவிலான பிளாஸ்டிக் கழிவுகளை திறம்பட குறைக்க குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. ஒவ்வொரு மண்டல யாத்திரைக் காலத்தின் முடிவிலும், எந்தவொரு உறுதியான அல்லது நீடித்த தீர்வுகள் நடைமுறைப்படுத்தப்படாமலேயே, இந்தப் பிரச்சினை பற்றிய விவாதங்களும் முடிவுக்கு வருகின்றன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Premalatha Vijayakanth:
Premalatha Vijayakanth: "விஜய் முதலில் தன்னை நிரூபிக்கட்டும்” ”வாய்சவடால் மட்டும் இருக்கக்கூடாது” -பிரேமலதா விஜயகாந்த்.
Travis Head:
Travis Head: "இந்தியானாலே அடிப்பேன்" எப்படி போட்டாலும் அடிக்கும் டிராவிஸ் ஹெட் புது ரெக்கார்ட்!
Car Launch 2024: விதவிதமா, ரகரகமா..! 2024ல் இந்தியாவில் அறிமுகமான கார்கள் - எஸ்யுவி தொடங்கி  ஈவி வரை, இவ்வளவா?
Car Launch 2024: விதவிதமா, ரகரகமா..! 2024ல் இந்தியாவில் அறிமுகமான கார்கள் - எஸ்யுவி தொடங்கி ஈவி வரை, இவ்வளவா?
TAHDCO Loan Scheme: பெண்களுக்கான ஜாக்பாட் - ரூ.4.5 லட்சம் வரை கடன், 5.5% மட்டுமே வட்டி - யாருக்கு கிடைக்கும்?
TAHDCO Loan Scheme: பெண்களுக்கான ஜாக்பாட் - ரூ.4.5 லட்சம் வரை கடன், 5.5% மட்டுமே வட்டி - யாருக்கு கிடைக்கும்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Premalatha Vijayakanth:
Premalatha Vijayakanth: "விஜய் முதலில் தன்னை நிரூபிக்கட்டும்” ”வாய்சவடால் மட்டும் இருக்கக்கூடாது” -பிரேமலதா விஜயகாந்த்.
Travis Head:
Travis Head: "இந்தியானாலே அடிப்பேன்" எப்படி போட்டாலும் அடிக்கும் டிராவிஸ் ஹெட் புது ரெக்கார்ட்!
Car Launch 2024: விதவிதமா, ரகரகமா..! 2024ல் இந்தியாவில் அறிமுகமான கார்கள் - எஸ்யுவி தொடங்கி  ஈவி வரை, இவ்வளவா?
Car Launch 2024: விதவிதமா, ரகரகமா..! 2024ல் இந்தியாவில் அறிமுகமான கார்கள் - எஸ்யுவி தொடங்கி ஈவி வரை, இவ்வளவா?
TAHDCO Loan Scheme: பெண்களுக்கான ஜாக்பாட் - ரூ.4.5 லட்சம் வரை கடன், 5.5% மட்டுமே வட்டி - யாருக்கு கிடைக்கும்?
TAHDCO Loan Scheme: பெண்களுக்கான ஜாக்பாட் - ரூ.4.5 லட்சம் வரை கடன், 5.5% மட்டுமே வட்டி - யாருக்கு கிடைக்கும்?
ADMK Meeting: சட்டை கிழியாமல்? பாட்டில் பறக்காமல்? இன்று கூடுகிறது அதிமுக பொதுக்குழு - அடக்குவாரா ஈபிஎஸ்?
ADMK Meeting: சட்டை கிழியாமல்? பாட்டில் பறக்காமல்? இன்று கூடுகிறது அதிமுக பொதுக்குழு - அடக்குவாரா ஈபிஎஸ்?
General Knowledge: இதெல்லாம் உண்மையா? இந்தியாவிற்கு இப்படி ஒரு பெருமையா? கூகுளின் வேகம் என்ன? எத்தனை ட்வீட்கள்?
General Knowledge: இதெல்லாம் உண்மையா? இந்தியாவிற்கு இப்படி ஒரு பெருமையா? கூகுளின் வேகம் என்ன? எத்தனை ட்வீட்கள்?
Breaking News LIVE: அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இரங்கல்
Breaking News LIVE: அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இரங்கல்
TN Rain Update: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, எங்கெல்லாம் கனமழை கொட்டும்? வானிலை அறிக்கை
TN Rain Update: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, எங்கெல்லாம் கனமழை கொட்டும்? வானிலை அறிக்கை
Embed widget