Kerala CM Letter: முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் திறக்கக்கோரி, தமிழக அரசுக்கு பினராயி விஜயன் கடிதம்!
Kerala CM Letter: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருவதையெடுத்து, நீர் திறக்க கோரி முதலைச்சர் பினராயி விஜயன் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கனமழையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருவதால், அணையிலிருந்து தண்ணீர் தீறந்துவிட கோரி கேரள முதலமைச்சர் பினராயின் விஜயன் தமிழநாடு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்பு மற்றும் நிர்வாகம் உள்ளிட்டவைகள் தமிழ்நாடு அரசிடமே இருக்கிறது. இந்நிலையில், கேரள மாநிலத்தில் பருவமழை தொடங்கி கனமழை பெய்து வருகிறது. இதனால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்வருவதால் அங்கு வசிக்கும் மக்களின் பாதுக்காப்பை உறுதி செய்யும் பொருட்டு, அதிலிருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
Kerala CM Pinarayi Vijayan writes to Tamil Nadu CM MK Stalin, calling his attention to the current situation at the Mullaperiyar dam catchment area, amid heavy rainfall. He also seeks CM Stalin's intervention in regulating the water discharge. pic.twitter.com/zkMdkyex4G
— ANI (@ANI) August 5, 2022
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கக் கோரி முதலமைச்சர் பினராயி விஜயன் எழுதிய கடித விவரம்:
கேரளாமாநிலத்தில், கடந்த சில நாட்களாக பெரு மழை பெய்து வருவதை நீங்கள் நன்கு அறிவீர்கள். மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இதில் இடுக்கி மாவட்டமும் அடங்கும். இடுக்கியில் பெய்துவரும் கன மழையில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை நெருங்கி வருகிறது. கன மழை நீடிக்கும்பட்சத்தில் அணையின் தண்ணீர் அளவும் வேகமாக அதிகரிக்கும்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வரும் சூழலை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். நீங்கள், இதை கவனித்து உடனடியாக அணையிலிருந்து தண்ணீரை வெளியேற்ற முடிவெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீரை திறப்பதனால் மக்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும்.
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீரை திறந்து விட அது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீரைவிட அதிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகமாக இருப்பதை உறுதி செய்யமாறும் கேட்டு கொள்கிறேன்.
என்று மு.க.ஸ்டாலினை அவர் வலியுறுத்தி உள்ளார்.
மேலும், கேரள அரசும் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க்ப்படுவதற்கு 24 மணி நேரம் முன்பாக, அதுகுறித்து முன்னெச்சரிக்கை அறிவிப்பினை வெளியிட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பது உள்ளிட்ட பாதுக்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அவர் அரசை வலியுறுத்தியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

