மேலும் அறிய

Nirmala Sitharaman Hospitalised: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மருத்துவமனையில் அனுமதி...உடல் நிலை எப்படி உள்ளது..?

மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். மதியம் 12 மணி அளவில் மருத்துவமனையின் தனியார் வார்டில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது எந்த பிரச்னையும் இல்லை என்றும் அவர் நன்றாக இருக்கிறார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இன்று மதியமே, அவர் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் பிப்ரவரி 1ஆம் தேதி, மத்திய நிதிநிலை அறிக்கையை அவர் தாக்கல் செய்ய உள்ளார்.

கடந்த 1959ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி, மதுரையில் பிறந்த நிர்மலா சீதாராமன், திருச்சியில் உள்ள சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில் தனது பட்டப் படிப்பை முடித்தார். 1980ஆம் ஆண்டு, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். 

பின்னர், 1986ஆம் ஆண்டு பரகலா பிரபாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆந்திர பிரதேசத்தில் காங்கிரஸ் அமைச்சராக இருந்த பரகலா சேஷாவதரத்தின் மகன்தான் பிரபாகர். இவரின் தாயாரும் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினராக பதவி வகித்துள்ளார்.

திருமணத்திற்குப் பிறகு லண்டனில் வசித்து வந்த நிர்மலா, அவரது கணவருடன் 1991இல்  இந்தியாவுக்கு குடிபெயர்ந்தார். 1999 முதல் 2004 வரை வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின்போது, 2003 முதல் 2005ஆம் ஆண்டு காலகட்டத்தில், தேசிய பெண்கள் ஆணையத்தில் நிர்மலா சீதாராமன் பணியாற்றினார்.

அப்போது, மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூடன் அவருக்கு நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது. சுஷ்மா ஸ்வராஜின் பரிந்துரைக்குப் பிறகு 2006ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். 

பிறகு, 2010ஆம் ஆண்டில் கட்சியின் செய்தித்தொடர்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார். கட்சியின் செய்தித்தொடர்பாளராக பல்வேறு பகுதிகளிலும் பணியில் இருந்தாலும், மோடியின் குஜராத்தில்தான் மிக அதிகளவு கவனம் செலுத்தினார் நிர்மலா. 

2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் எல்.கே. அத்வானியா அல்லது நரேந்திர மோடியா என்று மூத்த தலைவர்களே குழம்பிக்கொண்டிருந்த நேரத்தில்கூட மிகத்தீவிரமாக மோடியை ஆதரித்தார் நிர்மலா. 

2014ஆம் ஆண்டு முதல் மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருகிறார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
Embed widget