Selective Interpretation: மனித உரிமைகளைப் பயன்படுத்தி நாட்டின் செல்வாக்கைக் குறைக்க முயற்சி- பிரதமர் குற்றச்சாட்டு!
சில சூழல்களில் மனித உரிமைகளை சிதைந்ததாக கூறும் அவர்கள், அதேபோன்ற மற்ற சூழலில் மௌனம் காக்கும் போக்கைக் காணமுடிகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்
மனித உரிமைகள் என்பதைப் பயன்படுத்தி நாட்டின் செல்வாக்கைக் குறைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் 28வது நிறுவக தின நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில் உரையாற்றிய பிரதமர் , "பல ஆண்டுகளாக முத்தலாக் முறைக்கு எதிரான சட்டத்தை முஸ்லீம் பெண்கள் கோரி வந்தனர். முத்தலாக் முறைக்கு எதிரான சட்டம் இயற்றப்பட்டதன் மூலம் முஸ்லீம் பெண்களுக்குப் புதிய உரிமைகள் வழங்கப்பட்டு இருக்கிறது. பெண்களுக்குப் பல துறைகளில் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன, இவை பாதுகாப்புடன் 24 மணி நேரமும் அவர்கள் பணி செய்ய முடியும் என்பதை உறுதிசெய்துள்ளன. கருவுற்ற பெண்களுக்கு 26 வார பேறுகால விடுப்பை இந்தியா உறுதிசெய்துள்ளது. வளர்ச்சியடைந்த நாடுகளால் கூட இந்த அரிய செயலை செய்யமுடியவில்லை"என்று தெரிவித்தார்.
இதேபோல் மாறிய பாலினர், குழந்தைகள், நாடோடிகள், கால நிலைக்கேற்ப இடம்பெயரும் நாடோடிகள் போன்றவர்களுக்கு அரசால் மேற்கொள்ளப்பட்ட செயல்கள் குறித்துப் பிரதமர் பட்டியலிட்டார்.
பல தருணங்களில் மனித உரிமைகள் குறித்த விஷயத்தில், உலகம் மயக்கத்தையும் குழப்பத்தையும் கொண்டிருந்த போதும், இந்தியா மனித உரிமையை பேணிக் காப்பதில் உறுதியாகவும் உணர்வுபூர்வமாகவும் இருந்தது. உதாரணமாக, முதலாம் உலகப்போரால் ஒட்டுமொத்த உலகமும் வன்முறையால் சூழப்பட்டிருந்தது. அப்போது ஒட்டுமொத்த உலகத்திற்கும் ‘உரிமைகள் மற்றும் அகிம்சை’ பாதையை இந்தியா காட்டியது. இந்தியா மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகமும் மகாத்மா காந்தியை மனித உரிமைகள் மற்றும் மனித மாண்புகளின் அடையாளமாகப் பார்த்தது என்று மகாத்மா காந்தியைப் பிரதமர் நினைவுகூர்ந்தார்.
மனித உரிமைகள் மாபெரும் மீறல்கள்: சிலபேர் தங்களின் சுயநலன்களுக்காக மனித உரிமைகள் குறித்து தற்போது விளக்கம் அளிக்கத் தொடங்கியுள்ளதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து, பேசுகையில், மனித உரிமைகள் பற்றி தங்கள் விருப்பம்போல் சிலர் விளக்கம் அளிக்கத் தொடங்கியுள்ளனர். நாட்டின் செல்வாக்கைக் குறைப்பதற்காக மனித உரிமைகள் என்பதைப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சில சூழல்களில் மனித உரிமைகளை சிதைந்ததாக கூறும் அவர்கள், அதேபோன்ற மற்ற சூழலில் மௌனம் காக்கும் போக்கைக் காணமுடிகிறது என்று தெரிவித்தார்.
மேலும், அரசியல் மற்றும் அரசியல் லாப நஷ்ட கண்ணாடி கொண்டு அவர்கள் பார்க்கும்போது தான் மனித உரிமைகள் மாபெரும் மீறல்களைக் காண்கிறது. இந்த போக்கு ஜனநாயகத்தை சிதைப்பதற்கு சமமானதாகும் என்றும் பிரதமர் எச்சரித்தார்.
Pegasus | பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம்: வல்லுநர் குழுவை அமைக்க முன்வந்த உச்சநீதிமன்றம் ..
உரிமைகள் மற்றும் கடமைகள்:
அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்து பேசிய பிரதமர் ,"மனித உரிமைகள் என்பது உரிமைகளோடு மட்டும் தொடர்புடையது அல்ல நமது கடமைகளோடும் தொடர்புடையவை என்பதைப் புரிந்துகொள்வது அவசியம் என்று தெரிவித்தார்.
மனித மேம்பாடு மற்றும் மனித கௌரவம் என்கிற பயணம், உரிமைகள், கடமைகள் என்ற இரண்டு தடங்களில் செல்கிறது, உரிமைகளுக்கு சமமாகக் கடமைகளும் முக்கியமானவை என்று அவர் வளியுறுத்தினார். ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதால் அவை தனியாக விவாதிக்கப்படக்கூடாதவை என்றும் கூறினார்.
மனிதக்கழிவகற்றும் பணியின் காரணமாக காரணமாக இந்தியாவில் உயிரிழப்புகள் பதிவாகவில்லை - மத்திய அரசு