மேலும் அறிய

Pegasus | பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம்: வல்லுநர் குழுவை அமைக்க முன்வந்த உச்சநீதிமன்றம் ..

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் உண்மைத்தன்மையைக் கண்டறிய சுயாதீன வல்லுநர் குழுவை அமைக்கும் உத்தரவை இந்த வாரமே வழங்கியிருந்தோம்

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாராத்தில் சுயாதீன வல்லுநர்  குழுவை அமைக்கும் உத்தரவை அடுத்த வாரம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெகாசஸ் விவகாரத்தை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா, "பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாராத்தில் உண்மை தன்மையைக் கண்டறிய சுயாதீன வல்லுநர் குழுவை அமைக்கும் உத்தரவை இந்த வாரமே வழங்கயிருந்தோம். இருந்தாலும், குழு உறுப்பினர்கள் சிலர் தனிப்பட்ட காரணங்களால் இணைந்துக் கொள்ளமுடியாது சூழ்நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன், குழு உறுப்பினர்களை விரைவில் இறுதி செய்தி உத்தரவுகளை அளிப்போம்" என்று தெரிவித்தார். 

முன்னதாக, கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, பெகாசஸ் போன்ற உளவு மென்போருளை அரசாங்கம் பயன்படுத்துகிறதா? இல்லையா? போன்ற தகவல்களை உறுதி மொழி பத்திரத்தில் தெரிவிக்க முடியாது என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, பெகாசஸ் வழக்கின் இடைக்கால தீர்ப்பை ஒத்திவைப்பதாக அறிவித்தது. 

Pegasus Spyware | பெகசஸ் விவகாரத்தில் சுயாதீன விசாரணை கோரும் மனு, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை..!

பெகாசஸ் வழக்கு ஒட்டுக்கேட்பு: இந்தியாவில்,  எதிர்க்கட்சித் தலைவர்கள், முன்னாள் தேர்தல் ஆணையர், புகழ்பெற்ற வழக்கறிஞர்கள், மத்திய அமைச்சர்கள், ஊடகங்களில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் என 300-க்கும் மேற்பட்ட தொலைபேசி எண்கள் பெகசஸ் உளவுச் செயலியால் உளவு பார்க்கப்பட்டிருக்லாம் என 'pegasus Project" தெரிவித்தது.    

ஒட்டுக்கேட்கவே இல்லை: பெகாசஸ் சர்ச்சையில் மத்திய அரசு பதில் மனு தாக்கல்..!

இதையொட்டி, பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாராத்தில் சுயாதீன விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளார் ராம் மற்றும் சிலர் (N Ram & Ors v. Union of India) உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். 

மத்திய அரசு வாதம்:   கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் இரண்டு பக்க பதில் மனுவை தாக்கல் செய்தார். அதில், பெகசஸ் உளவு மென்பொருள் மூலம் போன் ஒட்டு கேட்பு புகாருக்கு ஆதாரம் இல்லை. பெகசஸ் ஸ்பைவேரை பயன்படுத்தி சில நபர்களின் தொலைபேசிகள் வேவு பார்க்கப்படுவதாக வெளியான செய்திகளில் உண்மைத்தன்மை இல்லை.

Pegasus | பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம்: வல்லுநர் குழுவை அமைக்க முன்வந்த உச்சநீதிமன்றம் ..

பெகாசஸ் போன்ற உளவு மென்பொருட்களை அரசாங்கம் பயன்படுத்துகிறதா? இல்லையா? போன்ற தகவல்களை பொதுவெளியில் வெளியிடுவது தேசிய பாதுகாப்பு, குறிப்பாக பொது அவசரம் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை சமரசம் செய்வதாக அமைந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டது. 

விசாரணைக் குழு அமைக்க தயாராக இருக்கிறோம்:  ஒரு பொறுப்பான அரசாங்கம் என்ற முறையில்  தகுதி வாய்ந்த நடுநிலை நிபுணர்கள் அடங்கிய  குழுவை அமைப்போம் என்று உச்சநீதிமன்றத்தில் துஷார் மேத்தா தெரிவித்தார். அதன் அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம். தகவல்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்பது எங்களது நிலைப்பாடு அல்ல. ஆனால், அதை நிபுணர்கள் குழுவிடம் சமர்பிக்கவே விரும்புகிறோம். பொது வெளியில் அல்ல. எனவே, நிபுணர் குழுவை உருவாக்க அனுமதி கோருகிறோம் என்று துஷார் மேத்தா தாக்கல் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டது. 

இந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு, பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் தனி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் குறித்து மத்திய அரசு பதில் அளிக்கக் கோரி உச்சநீதிமன்றம் நோட்டீஸ் (Pre admission Notice) அனுப்பியது.

Pegasus | பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம்: வல்லுநர் குழுவை அமைக்க முன்வந்த உச்சநீதிமன்றம் ..

இருப்பினும், தேசப் பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்ள நாங்கள் விரும்பவில்லை. ஆனால், பொது வாழ்கையில் ஒப்புயர்வற்ற நிலையில் இருக்கும் சிலர் தங்கள் தொலைபேசி எண்கள் பெகசஸ் உளவுச் செயலியால் உளவு பார்க்கப்பட்டிருக்லாம் என்று புகாரளித்துள்ளனர் என்று தெளிவுபடுத்தியது. இதனையடுத்து, கடந்த 13ம் தேதி இந்த வழக்கு விசாரணையின் போது, விரிவான உறுதி மொழி பத்திரத்தை மத்திய அரசு சமர்பிக்கவில்லை.     

தலைப்பு செய்திகள்

D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget