1993-ஆம் ஆண்டில் இருந்து இதுவரை, மனிதக் கழிவுகளை அகற்றும் துப்புரவு பணியில் 941 பேர் உயிரிழப்பு- மத்திய அரசு
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 213 பேர் செப்டிக் டேங்குகள் மற்றும் பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்யும் போது உயிரிழந்துள்ளனர்.
![1993-ஆம் ஆண்டில் இருந்து இதுவரை, மனிதக் கழிவுகளை அகற்றும் துப்புரவு பணியில் 941 பேர் உயிரிழப்பு- மத்திய அரசு Tamil Nadu register highest number of septic tank related deaths Centre informs parliament 1993-ஆம் ஆண்டில் இருந்து இதுவரை, மனிதக் கழிவுகளை அகற்றும் துப்புரவு பணியில் 941 பேர் உயிரிழப்பு- மத்திய அரசு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/04/2597beaeec4f77c6d31c716bcfb0173e_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மனிதக்கழிவகற்றும் பணியின் காரணமாக (Manual scavenging) காரணமாக இந்தியாவில் உயிரிழப்புகள் பதிவாகவில்லை என்று சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்ததுள்ளது.
இருப்பினும், கடந்த 1993ம் ஆண்டு முதல் செப்டிக் டேங்குகள் மற்றும் பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்யும் போது இறந்தவர்களின் எண்ணிக்கை 941 எனத் தெரிவித்தார். இதில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 213 பேர் உயிரிழந்துள்ளனர். அதனைத்தொடர்ந்து, உத்தர பிரதேசம், குஜராத்,டெல்லி ஆகிய மானிலங்களில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
மேலும், துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் மனிதக் கழிவுகளை அகற்றும் துப்புரவு தொழிலாளர்கள் ஆகியோர்களின் நலனுக்காக தேசிய துப்புரவு தொழிலாளர்கள் ஆணைய பணிபுரிந்துவருகிறது. உயிரிழந்தவர்களில் 650 இழப்பீடும்,142 பேருக்கு மாநில அரசுகளால் ஓரளவு இழப்பீடும் வழங்கப்பட்டதை தேசிய துப்புரவு தொழிலாளர்கள் ஆணையம் உறுதி செய்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், 2014 தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்ட காலத்தில் ஊரகப் பகுதிகளில் துப்புரவு நிலை 38.7 சதவீதமாக இருந்தது. இந்த இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்து 10 கோடிக்கும் அதிகமான கழிப்பறைகள் கட்டப்பட்டன. இதன் பயனாக 2019 அக்டோபர் 2-ஆம் தேதி அனைத்து மாநிலங்களும் ஊரகப்பகுதிகளைத் திறந்தவெளி கழிப்பிடம் அற்றவையாக அறிவித்தன. இந்த திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில் 10.78 கோடியும், நகர்ப்புறங்களில் 0.63 கோடியும் சுகாதார கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
S.No. மாநிலம்
Andhra Pradesh |
மனித கழிவை அகற்றும் மனிதர்களின் எண்ணிக்கை
1793 |
|
2 |
Assam |
3921 |
3 |
Bihar |
131 |
4 |
Chhattisgarh |
3 |
5 |
Gujarat |
105 |
6 |
Jharkhand |
192 |
7 |
Karnataka |
2927 |
8 |
Kerala |
518 |
9 |
Madhya Pradesh |
510 |
10 |
Maharashtra |
6325 |
11 |
Odisha |
230 |
12 |
Punjab |
231 2673 |
13 |
Rajasthan |
|
14 |
Tamilnadu |
398 |
15 |
Uttar Pradesh |
32473 |
16 |
Uttarakhand |
4988 |
17 |
West Bengal |
680 |
Total |
58098 |
தூய்மை இந்தியா திட்டத்தின் பயனாக, பாதுகாப்பான, சுகாதாரமான கழிப்பறை வசதிகளைப் பெற்றுள்ளனர். இதன் காரணமாக, மனித கழிவுகளை அகற்றும் துப்புரவு தொழிலாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்துள்ளது என்றும் தெரிவித்தார்.
மனிதக் கழிவுகளை மனிதர்களே சுமப்பவர்களின் மறுவாழ்வுக்காக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் மத்திய அரசின் திட்டமான சுய வேலை வாய்ப்புத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன் கீழ் அடையாளம் காணப்பட்ட 58,098 மனிதக்கழிவுகளை அகற்றும் நபர்கள் மற்றும் அவர்களை சார்ந்திருப்போருக்கு கீழ்க்காணும் மறுவாழ்வு பயன்கள் அளிக்கப்படுகிறது:
ஒரே சமயத்தில் ரூ. 40,000 நிதி உதவி, சலுகை வட்டி விகிதத்தில் ரூ. 15.00 லட்சம் வரை கடன், ரூ. 3,25,000 வரை பின்புற மூலதன மானியத்துடன் இணைக்கப்பட்ட கடன்.
மாதம் ரூ. 3000 ஊக்கத்தொகையுடன் இரண்டு ஆண்டுகள் வரை திறன் மேம்பாட்டு பயிற்சி. மெட்ரிக்கிற்கு முந்தைய கல்வி ஊக்கத்தொகை திட்டம் என்ற தலைப்பிலான திட்டம் ஒன்றை அமைச்சகம் தூய்மை பணி மற்றும் ஆரோக்கிய ஆபத்துக்களை ஏற்படுத்தும் பணிகளின் ஈடுபட்டுள்ளவர்களின் குழந்தைகளுக்காக நடைமுறைப்படுத்தி வருகிறது. மனிதக் கழிவுகளை அகற்றும் மனிதர்களின் குழந்தைகளும் இந்த கல்வி ஊக்கத்தொகை பெற தகுதியுடையவர் என்றும் தெரிவித்தார்.
2013 எம் எஸ் சட்டம்:
நேரடியாக இறங்கி துப்புரவு செய்ய ஆட்களை அமர்த்துவதற்குத் தடைவிதிப்பது மற்றும் அவர்களது மறுவாழ்வு ஆகியவற்றுக்கான சட்டம் 2013 (சுருக்கமாக 2013ஆம் ஆண்டில் எம் எஸ் சட்டம்) 2013 செப்டெம்பரில் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு 2014 டிசம்பரில் நடைமுறைக்கு வந்தது. பல்வேறு வகையான துப்புரவுப் பணிகளிலும் ஆட்களை நேரடியாக இறங்க அனுமதிப்பதை முழுமையாக அகற்றுவதையும், இத்தகைய நடவடிக்கைகளில் செயல்பட்டுவருவதாக அடையாளம் காணப்பட்டுள்ளவர்களுக்கு முழுமையான மறுவாழ்வு அளிப்பதையும் இச்சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)