NFHS Survey: 15 முதல் 24 வயது.. 50 சதவிகிதம் பெண்கள் இன்னும் பயன்படுத்துவது துணிதான்.. ஆய்வு கொடுக்கும் பகீர்
15-24 வயதுடைய பெண்களில் சுமார் 50 சதவீதம் பேர் இன்னும் மாதவிடாய் காலங்களில் துணிகளை பயன்படுத்துவதாக சமீபத்திய தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு அறிக்கை தெரிவிக்கிறது.
மாதவிடாய் காலங்களில் 50 சதவீதம் பெண்கள் துணிகளை பயன்படுத்துகின்றனர்- தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு ஆய்வு அறிக்கை
மாதவிடாய் காலங்களில் 15-24 வயதுடைய பெண்களில் சுமார் 50 சதவீதம் பேர் துணிகளை பயன்படுத்துவதாக சமீபத்திய தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு அறிக்கை தெரிவிக்கிறது.
அறிக்கை:
மாதவிடாய் காலங்களில் 15 முதல் 24 வயது வரையிலான பெண்கள் எந்த விதமான பாதுகாப்பு முறைகளை பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்து 2019 முதல் 2021 வரை தேசிய சுகாதார கணக்கெடுப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வானது 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் 707 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 7 லட்சம் பெண்களிடமும் 1 லட்சம் ஆண்களிடமும் நடத்தப்பட்டது. இந்த ஆய்வானது சமீபத்தில் வெளியானது. அந்த ஆய்வில் 15 முதல் 24 வயதுடைய பெண்களில் சுமார் 50 சதவீதம் பேர் மாதவிடாய் காலங்களில் நாப்கினுக்கு பதில் துணிகளை பயன்படுத்துவதாக தெரிவிக்கிறது.
படித்தவர்களே அதிகம்:
மேலும் 12 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பள்ளிப்படிப்பை கொண்ட பெண்கள், பள்ளிப்படிப்பு இல்லாத பெண்களை விட சுகாதாரமான முறையைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு இரு மடங்கு அதிகமாக உள்ளதாக தெரிவிக்கிறது.மிக உயர்ந்த செல்வச் செழிப்பில் உள்ள பெண்கள், மிகக் குறைந்த செல்வத்தில் உள்ள பெண்களை விட சுகாதாரமான முறையைப் பயன்படுத்துவதற்கு கிட்டத்தட்ட இரு மடங்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கிறது. கிராமப்புற பெண்களை விட நகர்ப்புற பெண்கள் பாதுகாப்பான சுகாதாரமான முறையைப் பயன்படுத்துவதாக அறிக்கை தெரிவிக்கிறது.
கடைசி இடத்தில் பீகார்:
மாநிலங்களை ஒப்பிடுகையில் மாதவிடாய் காலங்களில் பீகார் மாநிலங்களில் உள்ள பெண்கள் 59 சதவீதம் பேர் மட்டுமே பாதுகாப்பான முறையை பின்பற்றுவதாக தெரிவிக்கிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மருத்துவர்கள் சுத்தமற்ற மற்றும் துணிகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் போது நோய் தொற்று ஏற்படும் என் தெரிவித்தார். பாதுகாப்பற்ற முறைகளை தொடர்ந்து நீண்ட காலத்திற்கு பயன்படுத்தும்போது கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்
Also Read: மாதவிடாய் முதல் ரத்த அழுத்தம் வரை..! கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க நீர் மோர் குடிங்க!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )