மேலும் அறிய

மாதவிடாய் முதல் ரத்த அழுத்தம் வரை..! கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க நீர் மோர் குடிங்க!

வீட்டிலேயே சுலபமாக கிடைக்கும் மோருக்கு பயன்கள் ஏராளம். பல நல்ல குணங்களை உடைய மோரினை மறக்காமல் தினசரி நம் பயன்பாட்டிற்கு கொண்டு வருவோம்.

கோடையில் அடிக்கும் வெயிலில் பலருக்கும் அடிக்கடி தாகம் எடுக்கும். ஆகவே பலரும் தங்களுடன் ஒரு பாட்டில் தண்ணீரை வைத்திருப்பார்கள். ஆனால் சிலருக்கு தண்ணீர் குடித்து அலுத்துப் போயிருக்கும். அத்தகையவர்கள் மோர் கொண்டு போக நினைப்பார்கள். ஆனால், மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்...ஏராளம்... மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போமா!

*வயிற்றை குளிர்ச்சியடையச் செய்ய*
 
நன்கு காரசாரமான உணவை உட்கொண்ட பின்னர் வயிறு எரிய ஆரம்பமாகும். அப்படி வயிறு எரியும் போது, ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், வயிறு குளிர்ச்சியடையும்
 
*கொழுப்பைக் கரைக்கும்* 
 
மதியம் நன்கு வயிறு நிறைய சாப்பிட்டுள்ளீர்களா? அசௌகரியமாக உணர்கிறீர்களா அப்படியெனில் ஒரு டம்ளர் மோர் குடியுங்கள். இது வயிற்றை சுற்றி எண்ணெய் மற்றும் நெய்யினால் ஏற்பட்ட படலத்தை நீக்குவதோடு, கொழுப்பையும் கரைக்கும். இதனால் தான் மோர் குடித்த பின்னர், வயிறு இலேசானது போல் உணர்கிறீர்கள்.
 
*செரிமானத்தை அதிகரிக்கும்*
 
மோருடன் இஞ்சி, மிளகு மற்றும் சீரகம் போன்றவற்றை சேர்த்து குடித்து வந்தால், செரிமானம் நன்கு நடைபெறும். அதிலும் உங்கள் வயிறு உப்புசமாக, ஒருவித அசௌகரியமாக உணரும் போது, இதைக் குடித்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.
 
*உடல் வறட்சியைத் தடுக்கும்*
 
மோரானது உப்பு, தண்ணீர், தயிர் மற்றும் சில மசாலா பொருட்களை சேர்த்து செய்யப்படுவதாகும். இதில் எலக்ட்ரோலைட்ஸ் மற்றும் தண்ணீர் அதிகமாக இருப்பதால், இதனை கோடையில் குடித்து வந்தால் உடல் வறட்சி அடைவதைத் தடுக்கலாம்.
 
*லாக்டோஸ் ஒவ்வாமை*
 
சிலருக்கு லாக்டோஸ் ஒவ்வாமை இருக்கும். அத்தகையவர்களால் பால் பொருட்கள் எதையும் சாப்பிட முடியாது. ஆகவே அத்தகையவர்கள் கால்சியம் சத்தை பால் பொருட்களைத் தவிர மற்ற உணவுப் பொருட்களில் இருந்து பெற வேண்டும். ஆனால் லாக்டோஸ் ஒவ்வாமை உள்ளவர்கள் மோர் குடிக்கலாம். இதனால் அவர்களுக்கு எவ்வித பிரச்சனையும் ஏற்படாது. மேலும் இயற்கையான கால்சியத்தை மோரில் இருந்து பெறலாம்.
 
மாதவிடாய் முதல் ரத்த அழுத்தம் வரை..! கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க நீர் மோர் குடிங்க!
 
*இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்*
 
ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷன் வெளியிட்ட அறிக்கையின் படி, மோரில் இரத்த அழுத்ததைக் குறைக்கும் தனித்துவமான பயோஆக்டிவ் புரோட்டீன், ஆன்டி-வைரல், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-கேன்சர் பொருள் நிறைந்துள்ளதாக தெரிவிக்கிறது. மேலும் நிபுணர்களும் தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்கின்றனர்.
 
*பி காம்ப்ளக்ஸ் மற்றும் மற்ற வைட்டமின்கள்*
 
மோரில் வைட்டமின்களான வைட்டமின் பி காம்ப்ளர்ஸ், புரோட்டீன் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. அதில் வைட்டமின் பி, அதாவது ரிபோப்ளேவின் தான் உணவை எனர்ஜியாக மாற்றவும், செரிமானத்தை அதிகரிக்கவும், ஹார்மோனை சீராக சுரக்கவும் உதவி புரிகிறது. தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், வைட்டமின் குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கலாம்
 
*அசிடிட்டி*
 
மோரில் நிறைந்துள்ள நன்மைகளில் முக்கியமானது அசிடிட்டி பிரச்சனைக்கு நிவாரணம் தரும் என்பது தான். மோர் வயிற்றை குளிர்ச்சி அடையச் செய்து, அமில படலத்தால் ஏற்படும் வயிற்று எரிச்சலை குறைத்து உடனடி நிவாரணத்தைத் தரும்.
 
*முக அழகுக்கு*
 
உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் வெளியேறி விட்டாலே நம் முகத்திற்கு தனி பொலிவு ஏற்பட்டுவிடும். முகத்தை அழகுபடுத்தும் ரசாயனப் பொருட்கள் கலக்கப்பட்ட அழகு சாதனங்களை விட்டுவிட்டு மோர், தயிர் இவற்றை கொண்டு நம் முகத்தை மசாஜ் செய்து கொள்ளலாம். இது சருமத்திலுள்ள சுருக்கங்களை நீக்கும். சருமத்தை மென்மையாகவும் மாற்றும்.
 
மாதவிடாய் முதல் ரத்த அழுத்தம் வரை..! கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க நீர் மோர் குடிங்க!
 
*மூலநோய், வயிற்றுப்போக்கு*
 
மூல நோய்க்கு ஒரு சிறந்த மருந்தாக மோர் பயன்படுத்தப்படுகிறது. எந்தவித மசாலாக்களும் சேர்க்கப்படாமல் மோரில் சிறிது உப்பு மட்டும் கலந்து குடித்து வர மூலநோய் குணமாகும். குழந்தைகளுக்கு ஏற்படும் சாதாரண வயிற்றுப் போக்கினை மோர் கொடுத்து சரி செய்யலாம். சளி பிடிக்கும் என்று நினைப்பவர்கள் லேசாக சூடுபடுத்தி சிறிது மஞ்சள் தூள் கலந்து கொடுத்தால் சளி பிரச்சனை வராது.
 
*மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு*
 
மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வயிற்று வலி, இரத்தப்போக்கிற்கு ஒரு டம்ளர் மோருடன் வெந்தயம் சேர்த்து குடித்தால் போதுமானது. வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் நீங்கும்.
 
இப்படி நம் வீட்டிலேயே சுலபமாக கிடைக்கும் மோருக்கு பயன்கள் ஏராளம். பல நல்ல குணங்களை உடைய மோரினை மறக்காமல் தினசரி நம் பயன்பாட்டிற்கு கொண்டு வருவோம். அதுலயும் இந்த கோடை காலத்துல இது நிச்சயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PMK ADMK alliance: அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அரசு உதவிப் பேராசிரியர் தேர்வு.. ஜன.13 கடைசி! செக் வைத்த டிஆர்பி- தவறுகளை சரிசெய்யலாம்!
அரசு உதவிப் பேராசிரியர் தேர்வு.. ஜன.13 கடைசி! செக் வைத்த டிஆர்பி- தவறுகளை சரிசெய்யலாம்!
’DMK FILES’ - முக்கிய ஆதாரத்தோடு டெல்லிக்கு புறப்படும் எடப்பாடி பழனிசாமி - அதிமுகவின் செம பிளான்
’DMK FILES’ - முக்கிய ஆதாரத்தோடு டெல்லிக்கு புறப்படும் எடப்பாடி பழனிசாமி - அதிமுகவின் செம பிளான்
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
ABP Premium

வீடியோ

வெனிசுலாவில் நிலவும் நெருக்கடிமோசமான சிறையில் மதுரோ போரை தொடங்குகிறாரா ட்ரம்ப்? | America Trump Vs Venezuela
America Vs Venezuela
2026-ல் CM ஆவாரா விஜய்? பிரபல ஜோதிடரே சொல்லிட்டாரு இவர் கணிச்சா தப்பாது! | Astrologer Prashanth Kini On Vijay
தங்கத்தை ஓரம் கட்டிய வெள்ளி இனிமே லட்சத்தில் லாபம் பின்னணியில் CHINA, ENGLAND | Silver Price Hike Reason
Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK ADMK alliance: அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அரசு உதவிப் பேராசிரியர் தேர்வு.. ஜன.13 கடைசி! செக் வைத்த டிஆர்பி- தவறுகளை சரிசெய்யலாம்!
அரசு உதவிப் பேராசிரியர் தேர்வு.. ஜன.13 கடைசி! செக் வைத்த டிஆர்பி- தவறுகளை சரிசெய்யலாம்!
’DMK FILES’ - முக்கிய ஆதாரத்தோடு டெல்லிக்கு புறப்படும் எடப்பாடி பழனிசாமி - அதிமுகவின் செம பிளான்
’DMK FILES’ - முக்கிய ஆதாரத்தோடு டெல்லிக்கு புறப்படும் எடப்பாடி பழனிசாமி - அதிமுகவின் செம பிளான்
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
Top Brands Budget Cars: டாப் 5 ப்ராண்ட்களின்.. கம்மி விலை கார்கள்.. பட்ஜெட் மாடல்கள், மைலேஜில் எப்படி? - முழு விவரம்
Top Brands Budget Cars: டாப் 5 ப்ராண்ட்களின்.. கம்மி விலை கார்கள்.. பட்ஜெட் மாடல்கள், மைலேஜில் எப்படி? - முழு விவரம்
’’அரசு ஊழியர்களே முழிச்சுக்கோங்க; 3ஆம் நாளிலேயே பல்லிளித்த தமிழ்நாடு ஓய்வூதியத் திட்டம்’’- அன்புமணி எச்சரிக்கை
’’அரசு ஊழியர்களே முழிச்சுக்கோங்க; 3ஆம் நாளிலேயே பல்லிளித்த தமிழ்நாடு ஓய்வூதியத் திட்டம்’’- அன்புமணி எச்சரிக்கை
Top 10 News Headlines: திண்டுக்கல்லில் ஸ்டாலின், நில்லாமல் ஏறும் தங்கம் விலை, மீண்டும் ISL- 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: திண்டுக்கல்லில் ஸ்டாலின், நில்லாமல் ஏறும் தங்கம் விலை, மீண்டும் ISL- 11 மணி வரை இன்று
ICC BCB: ”இந்தியாவில் விளையாடுங்க, இல்லைன்னா கிளம்புங்க” - வங்கதேசத்திற்கு ஷாக் தந்த ஐசிசி - ரிப்போர்ட்
ICC BCB: ”இந்தியாவில் விளையாடுங்க, இல்லைன்னா கிளம்புங்க” - வங்கதேசத்திற்கு ஷாக் தந்த ஐசிசி - ரிப்போர்ட்
Embed widget