மேலும் அறிய
Advertisement
News Headlines: அள்ளும் திமுக... கெத்து காட்டும் விஜய்... தோனியின் ப்ரீ சர்வீஸ்... குறையும் கொரோனா... இன்னும் பல!
Headlines Today, 13 Oct: இன்றைய தினத்தின் காலையில் அறிய வேண்டிய பல்வேறு முக்கியச் செய்திகளை கீழே காணலாம்.
இன்றைய தினத்தின் காலையில் அறிய வேண்டிய பல்வேறு முக்கியச் செய்திகளை கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அநேக இடங்களில் திமுக உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இரண்டு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின்போது பதிவான வாக்குகள் 73 மையங்களில் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித்தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
- இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட பல உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
- 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் கிடையாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார். 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நேரடியாக பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும், அடுத்த மாதம் 1 ஆம் தேதி திட்டமிட்டபடி ஒன்று முதல் எட்டு வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
என்னுடைய அருமை நண்பர் திரு ஸ்ரீகாந்த் அவர்கள் மறைவு எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்.
— Rajinikanth (@rajinikanth) October 12, 2021
- பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் வயது முதிர்ச்சி காரணமாக நேற்று காலமானார். தங்கப்பதக்கம், பைரவி உள்ளிட்ட படங்களில் நடித்த பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த்.
- வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழையும், ஈரோடு, தேனி, திண்டுக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்தியா:
- பிரதமரின் ஆலோசகராக ஓய்வுபெற்ற ஐ ஏ எஸ் அதிகாரி அமித் கரே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவைக்குழு இதற்கு ஒப்புதல் அளித்தது. - எந்தவொரு மாநிலமும், மத்திய அரசால் வழங்கப்பட்ட ulallocated மின்சாரத்தை மின்சார பரிமாற்றத்தில் விற்கவோ அல்லது ஒதுக்கீடு செய்தி இருந்தால் அந்த மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட மின்சாரம் தற்காலிகமாக குறைக்கப்படும் அல்லது திரும்பப் பெறப்படும். இந்த மின்சாரம் தேவைப்படும் மாநிலங்களுக்கு மறு ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் 28வது நிறுவக தின நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி,மனித உரிமைகள் என்பதைப் பயன்படுத்தி நாட்டின் செல்வாக்கை சிலர் குறைத்து வருவதாக எச்சரிக்கை செய்தார்.
- கடந்த 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் 14,313 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது; 224 நாட்களில் இதுவே மிகவும் குறைந்த அளவாகும். 26,579 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில், தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2,14,900 ஆக குறைந்துள்ளது.
உலகம்:
- இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகள் பங்கேற்கும் மலபார் கூட்டு கடற்படை போர் பயிற்சியின் இரண்டாவது கட்டம் வங்கக்கடல் பகுதியில் இன்று தொடங்கியது. வரும் 15-ஆம்தேதிவரை இந்த போர் பயிற்சி நடைபெறவுள்ளது.
- G-20 அமைப்பு நாடுகள் பங்கேற்ற ஆப்கானிஸ்தான் விவகாரங்கள் மீதான அசாதாரண உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொளி வாயிலாக கலந்து கொண்டார். மனித நேய சூழ்நிலைகள், பயங்கிரவாதம் தொடர்பான கவலைகள் மற்றும் ஆப்கானிஸ்தானில் மனித உரிமைகள் உள்ளிட்ட விஷயங்கள் இந்த மாநாட்டில் பரிசீலிக்கப்பட்டன.
-
விளையாட்டு:
- ஐ பி எல் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறவுள்ள இறுதிப்போட்டிக்கான இரண்டாவது தகுதி சுற்று ஆட்டத்தில் கொல்கத்தா - தில்லி அணியை எதிர்கொள்கிறது. ஷார்ஜா-வில் நடைபெறவுள்ள இப்போட்டி சரியாக இரவு மணி 7-30-க்கு தொடங்கும். இதில் வெற்றிபெறும் அணி வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் சென்னை அணியை எதிர்கொள்ளும்.
- இந்திய டி20 அணியில் புதிய பொறுப்பேற்கும் முன்னாள் கேப்டன் தோனி, அதற்காக எந்த ஊதியமும் பெறவில்லை.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
உலகம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion