Dravidacris Annamalaica : 'திராவிடாக்ரிஸ் அண்ணாமலைக்கா' : என்னன்னு குழம்புறீங்களா? தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட உயிரினத்துக்கு இதுதான் பெயர்
தமிழ்நாட்டில் ஒரு புதிய வகை வெடுக்கிளி கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு திராவிடாக்ரிஸ் அண்ணாமலைக்கா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஒரு புதிய வகை வெடுக்கிளி கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு "திராவிடாக்ரிஸ் அண்ணாமலைக்கா" என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது தமிழகத்தின் கிழக்கு கரையோரப் பகுதியில் மட்டுமே இருக்கிறது. தானீஷ் பாஸ்கர், எச்.சங்கரராமன், நிக்கோ கசாலோ ஆகியயோர் அடங்கிய குழு இந்த புதிய வகை வெட்டுக்கிளியை கண்டறிந்துள்ளனர். இவர்கள் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர்கள். 2020 டிசம்பரில் தான் இதனைக் கண்டறிந்துள்ளனர். இதன் ஜீனல் பெயர் Dravidacris Bhaskar et al திராவிடாக்ர்ஸ் பாஸ்கர் எட் அல். இதம் ஸ்பீசிஸ் பெயர் திராவிடாக்ரிஸ் அண்ணாமலைக்கா.
இது குறித்து ஜூடோக்ஸா என்ற பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாவது, திராவிட மொழிக் குடும்பத்தை கவுரவிக்கும் வகையில் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் தென் பகுதிகளில் வசிக்கும் மொழிக் குடும்பமே திராவிடர்கள் என்று அறியப்படுகிறது. இந்தப் பெயரில் ஆக்ரிஸ் என்ற பின் பெயர் கிரேக்க பெயர். அதற்கு அர்த்தம் வெட்டுக்கிளி.
அண்ணாமலைக்காஸ் என்பது சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை நகர் என்பதை குறிக்கிறது. திராவிடாக்ரிஸ் அண்ணாமலைக்கா என்பது இப்போது 500 வகையான வெட்டுக்கிளிகளில் இணைந்துள்ளது. திராவிடாக்ர்ஸ் பாஸ்கர் எட் அல் வெட்டுக்கிளி கொம்பு கொண்ட அரிய வகை வெட்டுக்கிளியாக அறியப்படுகிறது. இந்த வெட்டுக்கிளியில் என்ன சிறப்பு என்றால் இது சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மாதிரி தனது நிறத்தை மாற்றிக் கொள்ளும். டாக்டர் பாஸ்கர், International Union for Conservation of Nature (IUCN), Species Survival Commission, Grasshopper Specialist Group என்ற அமைப்பின் துணை தலைவராக இருக்கிறார். வெட்டுக்கிளிகள் உணவுச் சங்கிலியை பேணுவதற்கு மிகவும் முக்கியமான பக்களிப்பை தருகிறது. இந்திய சுற்றுச்சூழலில் அவற்றின் பங்களிப்பு இன்னும் போதுமான அளவு ஆராயப்படவில்லை என்று டாக்டர் பாஸ்கர் கூறியுள்ளார்.
ஐயுசிஎன் என்றால் என்ன?
ஐயுசிஎன் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (International Union for Conservation of Nature - IUCN), உலகிலுள்ள இயற்கை வளத்தை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட ஒரு பன்னாட்டு அமைப்பாகும்.
இயற்கை மூலவளங்களைப் பாதுகாக்கும் நோக்கோடு செயற்பட்டு வரும் இவ்வமைப்பின் நோக்கம் உலகத்தில் தற்போது உருவாகியிருக்கும் சூழலியல் பிரச்சனைகளுக்கான நடைமுறைத் தீர்வுகளை உலகம் அறிந்து கொள்ளவும், அதனால் ஏற்பட்டிருக்கும் அபிவிருத்திக்கான சவால்களை உலகம் எதிர்கொள்ளவும் உதவுவதேயாகும். இவ்வமைப்பே சூழலியல் பாதுகாப்பு, நிரந்தர அபிவிருத்தியை முன்னிறுத்தி தொழிற்படுவதில் முன்னணியில் இருக்கின்றது.
இச்சங்கம் 1948 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவே முதலாவதும், பெரியதுமான உலகளாவிய சூழலியல் வலை அமைப்பாகும். இதன் தலைமைச் செயலகம் சுவிட்சர்லாந்து நாட்டின் செனிவா நகருக்கு அண்மையாக உள்ள கிலான்டு பகுதியில் அமைந்துள்ளது. இவ்வமைப்பு 140 நாடுகளில் உள்ள 1000 க்கு மேற்பட்ட அமைப்புக்களை அங்கத்தவர்களாகக் கொண்டு இயங்கி வருகின்றது. இவ்வங்கத்தவர்களில், உலகெங்கும் 83 மாநிலங்கள், 108 அரசின் அமைப்புகள், 766 அரசு சாரா சங்கங்கள், 81 சர்வதேச அமைப்புகள் மற்றும் சுமார் 11, 000 துறை வல்லுநர்கள் அடங்குவர். இவ்வனைவரையும் ஒருங்கிணைத்து உலகின் இயற்கை வளத்தை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை இவ்வமைப்பு எடுத்துவருகிறது.