மேலும் அறிய

NEET Retest: நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!

இன்று நடைபெற்ற நீட் மறுதேர்வில் 48 சதவிகித மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் (NEET-UG) மறுதேர்வு இன்று நடைபெற்ற நிலையில், அதை பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்: 2024ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே 5 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் சுமார் 24 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இதனிடையே ஜூன் 14ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான 4ஆம் தேதி இரவே தேர்வு முடிவுகளும் வெளியாகின. 

இதில் வழக்கத்துக்கு மாறாக 67 பேர் முதல் மதிப்பெண் பெற்றனர். சில மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது, ஆள் மாறாட்டம், வினாத்தாள் கசிவு என நீட் இளநிலைத் தேர்வில் ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்பின.

முதலில் நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததை தேசியத் தேர்வுகள் முகமை மறுத்தது. ஆனால் இதுதொடர்பான விசாரணையில் பலர் கைது செய்யப்பட்டனர். பிஹார், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் கைது நடந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நீட் தேர்வில் முறைகேடு நடந்ததை ஒப்புக்கொண்டார்.

பாதிக்கும் மேற்பட்டவர்கள் மறுதேர்வு எழுதாதற்கு காரணம் என்ன? இதற்கிடையே, நடந்து முடிந்த நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1,563 பேருக்கு, அதனை ரத்து செய்து மறுதேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்த நிலையில், நாடு முழுவதும் 1,563 பேருக்கும் மறுதேர்வு நாடு முழுவதும் 7 மையங்களில் நடைபெற்றது.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற மறுதேர்வில் 48 சதவிகித மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை என தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. மறுதேர்வில் 813 மாணவர்கள் கலந்து கொண்டதாகவும் 750 மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சண்டிகர், சத்தீஸ்கர், குஜராத், ஹரியானா, மேகாலயா ஆகிய மாநிலங்களில் உள்ள சில தேர்வு மையங்களில் கடந்த மே 5 ஆம் தேதி, நீட் தேர்வு காலதாமதமாக தொடங்கியது. காலதாமதம் காரணமாக சில மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது.

ஆனால், உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலை தொடர்ந்து வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்ணானது தேசிய தேர்வு முகமையால் ரத்து செய்யப்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Breaking News LIVE 28th Sep 2024:
"மாநில உரிமைகளை பெற அண்ணா வழியில், கலைஞர் வழியில், அயராது உழைப்போம்" : முதல்வர் ஸ்டாலின்
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan | TN Cabinet Shuffle | 2 சீனியர்கள் OUT.. ஜுனியர்கள் IN..! ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Breaking News LIVE 28th Sep 2024:
"மாநில உரிமைகளை பெற அண்ணா வழியில், கலைஞர் வழியில், அயராது உழைப்போம்" : முதல்வர் ஸ்டாலின்
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னாது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னாது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
"பெரு நிறுவனங்களுக்கு நாமதான் முகவரி" பெருமிதத்துடன் முதல்வர் ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை!
Salem Leopard: சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
Actor Sathyaraj:
"மதவாதிகளுக்கு நாங்க பிரச்னை இல்லை.! சேகர்பாபுதான் பிரச்னை ": நடிகர் சத்யராஜ் அதிரடி.!
Embed widget