Watch Video: ஆடல் பாடலுடன் பிறந்ததாள் கொண்டாட்டம்.. துப்பாக்கியால் சுட்ட பெண்.. கடுப்பான காவல்துறை.. வைரலாகும் வீடியோ
தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது பெண் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது.
சமீப காலங்களாக பிறந்தநாள் கொண்டாடும் நபர்கள் சிலர் வித்தியாசமான முறையை கையாண்டு வருகின்றனர். ஒரு சிலர் தங்களுடைய பிறந்தநாளின் போது கேகை பட்டா கத்தி ஆகியவற்றை வைத்து கேக் வெட்டுகின்றனர். அப்படி செய்யும் நபர்கள் மீது அந்தந்த பகுதி காவல்துறையினர் கடும் எச்சரிக்கை விடுப்பதுடன் சில நேரங்களில் வழக்குப்பதிவும் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது அதுபோன்று மேலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் முஸாஃபர் நகர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அது தொடர்பான வீடியோ ஒன்றை ஒருவர் ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,அந்தப் பெண் தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது துப்பாக்கியை எடுத்து மேலே ஆகாயத்தை பார்த்து சுடுகிறார். இந்த வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#मुज़फ्फरनगर
— I stand with innocent always, (@MKandhalvi) December 23, 2021
*नगर कोतवाली क्षेत्र के राम लीला टिल्ला निवासी युवक आकाश डाहरिया व उसकी बहन का फaयरिंग का वीडियो हो रहा वायरल।*@muzafarnagarpol @Uppolice @dgpup @WasimAkramTyagi @zoo_bear @sakshijoshii @Samriddhi0809 @IsmatAraa pic.twitter.com/lcUHzHF3BZ
இந்த வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட நபர் முஸாஃபர் நகர் காவல்துறையையும் சேர்ந்து பகிர்ந்து டேக் செய்துள்ளார். அதை பார்த்த முஸாஃபர் நகர் காவல்துறையினர் இதற்கு பதில் பதிவு செய்துள்ளனர். அதில், “இந்த பெண் மற்றும் அவருடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை சார்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இதுபோன்ற செயல்களில் இனிமேல் ஈடுபடுவோர் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
டிஜிட்டல் கல்வி நிறுவனங்கள் விஷயத்தில் பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் - மத்திய அரசு