மேலும் அறிய

Advisory against Ed-tech Companies | டிஜிட்டல் கல்வி நிறுவனங்கள் விஷயத்தில் பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் - மத்திய அரசு

கல்வி நிறுவனங்கள் வழங்கும் பாடத்திட்டங்களை எதிர்கொள்வதற்கு நமது பிள்ளைகளை தயார் நிலையில் இருக்கிறார்களா? - மத்திய அரசு

இந்தியாவில் ஆன்லைன் இணையவழி கல்வி நிறுவனங்கள்  தொடர்புடைய முக்கிய ஆலோசனைகளை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 

கொரோனா தொற்று பொதுமுடக்க காலத்தில் இணைய கல்வி தளம் முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. பல்வேறு இணைய கல்வி தளங்கள் மூலம் மாணவர்கள் கற்றலை தொடர்ந்து வருகின்றனர். இருந்தாலும், சில டிஜிட்டல் கல்வி நிறுவனங்கள், சில குறிப்பிட்ட கல்வி சேவையை இலவசம் என முதலில் அறிவித்துவிட்டு, பின்பு கட்டணம் செலுத்துமாறு நிர்பந்திப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே, இத்தகைய கல்வி நிறுவனங்கள் பற்றி எச்சரிக்கையுடன் இருக்கமாறு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆலோசனைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.  

செய்யக்கூடியது என்ன?

வங்கி கணக்கில் இருந்து ஆட்டோ- டெபிட் மூலம் பங்களிப்பு செய்யும்  வசதியை சந்தாதாரர்கள் தவிர்க்க வேண்டும். சில கல்வி நிறுவனங்கள் முதலில் சில சேவைகளை இலவசமாக அளிப்பது போல் தெரியலாம், ஆனால் தொடர்ந்து படிக்கும்போது, மாணவர்கள் கட்டணம் செலுத்தும் முறைக்கும் செல்ல வேண்டியிருக்கும். தானியங்கி முறையில் பணம் எடுக்கும் முறைக்கு தேர்வு செய்திருந்தால், குழந்தைகள் தங்களை அறியாமலேயே கட்டண பாடங்களுக்குள் சென்று, வங்கி கணக்கில் இருந்து  பணத்தை இழக்க வேண்டியிருக்கும் 

சேவைகள் பெறுவதற்கு முன்பாக, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைத் தெளிவாக படிக்கவும். நீங்கள் சேர விரும்பும் டிஜிட்டல் கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களின் பின்னணியை சரிபார்க்கவும். நிறுவனங்கள் வழங்கும் பாடத்திட்டங்களின் தரத்தை சரிபார்த்து, அது உங்கள் நோக்கத்துடன் ஒத்துப்போகிறது என்பதையும், அவற்றை எதிர்கொள்வதற்கு பிள்ளைகளை தயார் நிலையில் இருக்கிறார்களா?  என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். 

கல்விக்கான செயலிகள், பாடங்கள் அடங்கிய பென் டிரைவ் மற்றும் இதர சாதனங்கள் வாங்கும் போது, அதற்கான வரி ரசீதை கேட்டு பெற வேண்டும். கல்வி தொழில்நுட்ப நிறவனங்களை தேர்வு செய்யும் முன் அதன் பின்னணியை சரிபார்க்க வேண்டும்.

டிஜிட்டல் கல்வி தளத்தில் முதலீடு செய்வதற்கு முன், கட்டணம் மற்றும் பாடத்திட்டங்கள் தொடர்பான உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும். கல்வி -தொழில்நுட்ப தளங்களை பயன்படுத்தும் முன், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து, மத்திய கல்வி அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களை கீழ்கண்ட இணைப்பில் பார்க்கலாம். (https://www.education.gov.in/sites/upload_files/mhrd/files/pragyata-guidelines_0.pdf)

Advisory against Ed-tech Companies | டிஜிட்டல் கல்வி நிறுவனங்கள் விஷயத்தில் பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் - மத்திய அரசு

செய்யக் கூடாதவை:

கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களின் விளம்பரங்களை கண்மூடித்தனமாக நம்ப கூடாது.

உங்களுக்கு தெரியாத எந்த கடன் ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட வேண்டாம்.

கல்வி- தொழில்நுட்ப தளங்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்காமல், அவற்றின் செயலிகளை வைத்துக்கொள்ள வேண்டாம்.

செயலிகள் மூலம் கட்டணம் செலுத்த, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு எண்களை பதிவு செய்வதை தவிர்க்கவும்.

பொய் வாக்குறுதிகள் காரணமாக, சரிபார்க்காத பாடப்பிரிவுகளில் சேர வேண்டாம்.

கல்வி தொழில் நுட்ப நிறுவனங்களின் வெற்றி பற்றிய தகவல்களை, முறையாக சரிபார்க்காமல் நம்பவேண்டாம்.

பெற்றோர் சம்மதம் இல்லாமல்,மாணவர்கள் எதையும் வாங்க, அனுமதிக்க வேண்டாம். ரிசர்வ் வங்கி விதிமுறைகள்படி ஒரு முறை கடவுச் சொல்(ஒடிபி) அடிப்படையிலான பணம் செலுத்தும் முறையை எப்போதும் பின்பற்ற வேண்டும். 

வங்கி கணக்கு விவரங்கள், ஒடிபி எண் ஆகியவற்றை விற்பனை பிரதிநிதிகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம். ஆன்லைன் மூலம் மோசடியில் ஈடுபடுபவர்கள் பற்றி எச்சரிக்கையாக இருங்கள்.

மின்னணு பாடங்களை இலவசமாக பெற மத்திய கல்வி

அமைச்சகத்தின் கீழ்கண்ட இணையதளங்களை பார்க்கவும்:

https://diksha.gov.in/

http://www.olabs.edu.in/

https://swayam.gov.in/

https://www.nios.ac.in/

SWAYAM PRABHA TV Channels for class 1 to 12-

https://www.swayamprabha.gov.in/index.php/schooledu

Official Learning portals/apps of the States/UTs

மோசடிகள் குறித்து புகார் அளிக்க கீழ்கண்ட தளங்களை பார்க்கவும்:

https://ascionline.in/

https://consumerhelpline.gov.in/

https://pgportal.gov.in/

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ENG Semi Final LIVE Score: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கும் இந்தியா.. கடைசி நேரத்தில் கலக்கும் இங்கிலாந்து!
IND vs ENG Semi Final LIVE Score: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கும் இந்தியா.. கடைசி நேரத்தில் கலக்கும் இங்கிலாந்து!
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Jio New 5g Plans: செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. ஜூலை 3 முதல் அமல்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ENG Semi Final LIVE Score: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கும் இந்தியா.. கடைசி நேரத்தில் கலக்கும் இங்கிலாந்து!
IND vs ENG Semi Final LIVE Score: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கும் இந்தியா.. கடைசி நேரத்தில் கலக்கும் இங்கிலாந்து!
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Jio New 5g Plans: செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. ஜூலை 3 முதல் அமல்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
Vengal Rao: நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிக்கரம் நீட்டும் நட்சத்திரங்கள்.. ஐஸ்வர்யா ராஜேஷ் நிதியுதவி!
Vengal Rao: நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிக்கரம் நீட்டும் நட்சத்திரங்கள்.. ஐஸ்வர்யா ராஜேஷ் நிதியுதவி!
"தமிழ் கலாசாரத்தை வெறுக்கும் INDIA கூட்டணி" செங்கோல் விவகாரத்தில் யோகி ஆதித்யநாத் பரபர குற்றச்சாட்டு!
OTT - Uppu Puli Karam: டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வரவேற்பைப் பெறும் உப்பு புளி காரம் தொடர்!
OTT - Uppu Puli Karam: டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வரவேற்பைப் பெறும் உப்பு புளி காரம் தொடர்!
Embed widget