குஜராத் மோர்பி பால விபத்து : உயிரிழந்த பாஜக எம்பியின் உறவினர்கள்.. தொடரும் கைது நடவடிக்கை
ஏற்கனவே 132 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மோர்பி பாலம் இடிந்து விழுந்ததில் பாஜக எம்பி மோகன் குந்தாரியாவின் உறவினர்கள் 12 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மாச்சு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் 132 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் , அவர்களுள் 12 பேர் ராஜ்கோட் பகுதியின் பாகஜ எம்பி மோகன் குந்தாரியாவின் உறவினர்கள் என்பது தெரிய வந்துள்ளது. உயிரிழந்தவர்களுள் குழந்தைகள் உட்பட குந்தரியாவின் சகோதரி, அவரது மாமியார் குடும்ப உறுப்பினர்களும் இருந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே 132 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி இன்று காலை செய்தியாளர் சந்திப்பில், பால கட்டுமான ஏஜென்ஸிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மச்சு ஆற்றில் மீட்புப் பணி கடைசி கட்டத்தில் உள்ளது. அது விரைவில் முடிவடையும்” என தெரிவித்துள்ளார்.ஒரு அறிக்கையின்படி, NDRF இன் 5 குழுக்கள், SDRF இன் ஆறு படைப்பிரிவுகள், விமானப்படையின் ஒரு குழு, இராணுவத்தின் இரண்டு நெடுவரிசைகள் மற்றும் இந்திய கடற்படையின் 2 குழுக்கள் இது தவிர உள்ளூர் மீட்புக் குழுக்களும் தொடர்ந்து மீட்பு பணியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
CCTV footage of moment before #Morbi bridge collapse. Deeply painful! 👇 pic.twitter.com/vtzuPvQ4B8
— YSR (@ysathishreddy) October 31, 2022
குஜராத்தின் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் மீது ஒரு நூற்றாண்டு பழமையான தொங்கு பாலம் இருந்தது. இது க்டந்த ஐந்து நாட்களுக்கு முன்பு விரிவான பழுது மற்றும் புதுப்பித்தலுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டது, இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியளவில் யாரும் எதிர்பாராத வகையில் பாலம் இடிந்து விழுந்ததில் அதில் இருந்த பலர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
Not just extremely sad on bridge collapse in #Morbi but also very angry. Because it was a tragedy in waiting
— Gurdeep Singh Sappal (@gurdeepsappal) October 30, 2022
For some time now, bridge collapse, roads caving in, dams breaching is happening quite often
It’s corruption, nothing else.
Just see some news from past few months:
1/n pic.twitter.com/yT4QCZvvZn
பாலத்தில் இருந்த சிலர் வேண்டுமென்றே குதித்ததாகவும் , அங்கிருந்த கம்பிகளை இழுத்துப்பார்த்ததாகவும் நேரில் பார்த்த சிலர் கூறுகின்றனர்.பாலம் இடிந்து விழுந்ததில், 304 (கொலைக்கு சமமான குற்றமற்ற கொலை), 308 (இறப்பை ஏற்படுத்திய வேண்டுமென்றே செயல்) மற்றும் 114 (குற்றம் செய்யும்போது தூண்டியவர்) ஆகிய பிரிவுகளின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது மீட்பு நடவடிக்கைகளின் வேகத்தில், கைது நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.