Miss Universe India: இந்திய பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றார் 18 வயதான ரியா சிங்கா.! யார் இவர்.?
Miss Universe India: 2024 ஆம் ஆண்டுக்கான இந்திய பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றார் குஜராத்தைச் சேர்ந்த 18 வயதான ரியா சிங்கா.
Miss Universe India 2024 : இந்த வெற்றியை அடைய கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் கொடுத்துள்ளதாக இந்திய மிஸ் யுனிவர்ஸ் 2024 ஆம் ஆண்டுக்கான பட்டத்தை வென்ற ரியா சிங்கா தெரிவித்துள்ளார்.
ரியா சிங்கா:
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 18 வயதான ரியா சிங்கா, 2024 ஆம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றார். இவர் கடைசியாக 51 போட்டியாளர்களில் வெற்றியாளராக உருவெடுத்துள்ளார்.
ரியா சிங் போட்டியாளர் என்பதைத் தாண்டி நடிகையாகவும் மற்றும் இளங்கலை பட்டதாரியாகவும் பல்துறைப் பின்னணி கொண்டவராகவும் அறியப்படுகிறார். இவர் ஒரு ஆடை வடிவமைப்பாளராகவும், அவரது படைப்புகளில் கலாச்சார மற்றும் நவீன கூறுகளை கலப்பதில் பெயர் பெற்றவராகவும் திகழ்கிறார். ஃபேஷன் மற்றும் கலைகள் மீதான அவரது ஆர்வம் அவரது பயணத்தில் ஒரு உந்து சக்தியாக இருந்து, அவரை இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்கு கொண்டு வந்துள்ளதாக தகவல் தெரிவிகின்றன.
#WATCH | Jaipur, Rajasthan: Rhea Singha crowned Miss Universe India 2024. pic.twitter.com/U76NE7yKlL
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) September 22, 2024
”கடின உழைப்பு”
பட்டத்தை வென்ற பிறகு, ரியா பேசியதாவது, “ இந்த நிலையை அடைய கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் கொடுத்தேன். இன்று நான் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 பட்டத்தை வென்றுள்ளேன். இந்த கிரீடத்திற்கு நான் தகுதியான நபர் என்று கருதக்கூடிய இந்த நிலைக்கு வருவதற்கு நான் நிறைய உழைப்பைக் கொடுத்துள்ளேன். முந்தைய வெற்றியாளர்களால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன்” என பேசினார்.
இதையடுத்து, 2024 ஆம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றதையடுத்து, மெக்சிகோவில் நடைபெறும் மிஸ் யுனிவர்ஸ் 2024 அழகுப் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான வாய்ப்பையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில், பலவரும் ரியாசிங்காற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram
View this post on Instagram