பற்றவைத்த இடஒதுக்கீடு விவகாரம்...கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா வீட்டில் வெளியே வெடித்த கலவரம்.. நடந்தது என்ன?
கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் சொந்த மாவட்டமான சிவமோகாவில் உள்ள அவரது வீட்டின் வெளியே பெரும் போராட்டத்தை முன்னெடுக்கப்பட்டது.
![பற்றவைத்த இடஒதுக்கீடு விவகாரம்...கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா வீட்டில் வெளியே வெடித்த கலவரம்.. நடந்தது என்ன? Massive Protest Outside BS Yediyurappa Home Over Reservation know more details பற்றவைத்த இடஒதுக்கீடு விவகாரம்...கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா வீட்டில் வெளியே வெடித்த கலவரம்.. நடந்தது என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/27/05d5ec83b9c14f4054545a009709834b1679918904281224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கர்நாடகாவில் வரும் மே மாதத்திற்குள் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆட்சியை தக்க வைக்க பாஜகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு, கல்வி மற்றும் வேலைகளில் பட்டியல் சாதியினருக்கு வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டுக்கு புதிய வகைப்படுத்தலை அறிமுகம் செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
அதன்படி, பட்டியல் சாதியினருக்கான 17 சதவீத இடஒதுக்கீட்டில், 6 சதவீதம் பட்டியல் சாதியினருக்கும் (இடது), 5.5 சதவீதம் பட்டியல் சாதியினருக்கும் (வலதுபுறம்), 4.5 சதவீதம் தீண்டத்தகுந்தவருக்கும் 1 சதவீதம் பட்டியல் சாதி பிரிவில் உள்ள மற்றவர்களுக்கும் வழங்க பரிந்துரை செய்யப்பட்டது.
பற்ற வைத்த இடஒதுக்கீடு விவகாரம்:
கடந்த 2005ஆம் ஆண்டு, காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட ஏ.ஜே. சதாசிவா கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கர்நாடகாவில் பட்டியல் சாதி இடஒதுக்கீட்டை உள் வகைப்படுத்தி அதை பிரித்து வழங்குவதற்கான அவசியம் குறித்து சதாசிவா கமிஷன் ஆய்வு செய்தது.
இந்த முடிவுக்கு தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பட்டியல் சாதி பிரிவில் இடம்பெற்றுள்ள பஞ்சாரா சமூகத்தின் சில தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இடஒதுக்கீடு தொடர்பான மாநில அரசின் முடிவால் தாங்கள் நஷ்டம் அடைவதாகவும், மத்திய அரசுக்கு அளித்த பரிந்துரையை மாநில அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் சொந்த மாவட்டமான சிவமோகாவில் உள்ள அவரது வீட்டின் வெளியே பெரும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் பஞ்சாரா சமூக தலைவர்கள். போராட்டத்தில் வன்முறை வெடித்து கல்வீச்சு சம்பவங்களும் அரங்கேறியுள்ளது.
எடியூரப்பா வீட்டில் வெளியே வெடித்த கலவரம்:
போராட்டக்காரர்களை தடியடி நடத்தி காவல்துறையினர் கலைத்தனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் மொத்த மக்கள் தொகையில் பட்டியல் சாதி மற்றும் பழங்குடியின மக்கள் மட்டும் 24 சதவிகித்தனர் உள்ளனர்.
அதேபோல, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பிரிவின் கீழ் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவிகித இடஒதுக்கீட்டையும் பாஜக அரசு ரத்து செய்தது. இந்த விவகாரமும் பெரும் பிரச்னையாக மாறியுள்ளது. இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது குறித்து விளக்கம் அளித்தார். "மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை. சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு அரசியல் சட்டப்படி வழங்கப்படவில்லை" என்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)