திருமண வாழ்க்கையில் அக்காவுக்கு 'ஷேர்' கொடுத்த தங்கை - சட்டச் சிக்கலில் மாட்டிய மணமகன்!

கர்நாடகாவில் மாற்றுத்திறனாளியான அக்காவுக்கு, அவரது தங்கை திருமண வாழ்க்கையில் பங்கு கொடுத்துள்ளார். ஆனால் திருமணம் செய்துகொண்ட மாப்பிள்ளை தற்போது சட்டசிக்கலில் மாட்டியுள்ளார்.

FOLLOW US: 

அந்தக்காலங்களில் ஒரு ஆண் இரு பெண்களை திருமணம் செய்வது அவ்வளவு ஆச்சரியமில்லாத ஒன்று. அப்படியான முதியவர்களை கிராமப்புறங்களில்  இன்றும் காணலாம். ஆனால் இன்றைய நாட்களில் அப்படியான சம்பவங்கள் இல்லை. இந்நிலையில் கர்நாடகாவில் மாற்றுத்திறனாளியான அக்காவுக்கு, அவரது தங்கை திருமண வாழ்க்கையில் பங்கு கொடுத்துள்ளார். அதாவது தனக்கு நிச்சயிக்கப்பட்ட இளைஞரிடமே தன் அக்காவையும் திருமணம் செய்ய சம்மதிக்க வைத்துள்ளார்.திருமண வாழ்க்கையில் அக்காவுக்கு 'ஷேர்' கொடுத்த தங்கை - சட்டச் சிக்கலில் மாட்டிய மணமகன்!

கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தின் வேகமடுவே கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரியா. இவரது தங்கை லலிதா. சுப்ரியா வயதில் மூத்தவர் என்றாலும் அவரால் வாய்பேச முடியாது. மாற்றுத்திறனாளி என்பதால் அவரை திருமணம் செய்ய யாரும் முன்வரவில்லை. சுப்ரியாவில் திருமணம் தடைபட்டுக்கொண்டே இருந்துள்ளது.இதற்கிடையே லலிதாவுக்கு வரன் பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. உபாபதி என்ற இளைஞருக்கும், லலிதாவுக்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் தன்னுடைய அக்காவுக்கும் திருமண வாழ்க்கையில் பங்கு கொடுப்பது என லலிதா ஒரு முடிவை எடுத்துள்ளார். திருமண வாழ்க்கையில் அக்காவுக்கு 'ஷேர்' கொடுத்த தங்கை - சட்டச் சிக்கலில் மாட்டிய மணமகன்!

இது குறித்து உமாபதியிடம் பேசிய லலிதா, தனது அக்காவையும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என கூறியுள்ளார். லலிதாவின் கோரிக்கையை உமாபதி மறுத்துள்ளார். ஆனால் அக்காவை திருமணம் செய்தால்மட்டுமே தானும் திருமணம் செய்துகொள்வேன் என லலிதா விடாப்பிடியாக இருந்துள்ளார். பின்னர் உமாபதி தலையசைக்கவே இரு வீட்டாரும் பேசி முடிவெடுத்து திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று ஒரே மேடையில் அக்கா சுப்ரியா, தங்கை  லலிதா இருவரையும் உமாபதி திருமணம் செய்துகொண்டார்.

திருமண வாழ்க்கையில் பங்கு கொடுத்த லலிதாவின் கதை, கோலார் பகுதியில் மட்டுமின்றி இணையத்திலும் வைரலானது. லலிதாவின் திருமண முடிவு குறித்து பலரும் பலதரப்பட்ட கருத்துகளை பதிவிட்டனர். இந்த திருமணம் போலீசார் காதுகளுக்கும் செல்ல தற்போது உமாபதி சிக்கலில் சிக்கியுள்ளார். உமாபதி திருமணம் செய்துகொண்ட லலிதா மைனர் என்பதால் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மைனரை திருமணம் செய்த காரணத்தினால் மாப்பிள்ளை உபாபதி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த திருமண விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இரு வீட்டாரும் தற்போது தவித்து வருகிறார்கள். 

Tags: karnataka marriage marriage karnataka sisters marriage minor marriage

தொடர்புடைய செய்திகள்

புதுச்சேரி : அரசு விழாக்களில் அரசியல் சாயம் பூசுகிறது பாஜக - முன்னாள் முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி : அரசு விழாக்களில் அரசியல் சாயம் பூசுகிறது பாஜக - முன்னாள் முதல்வர் நாராயணசாமி

கரூர் : குறைகிறதா கொரோனா தொற்று? மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?

கரூர் : குறைகிறதா கொரோனா தொற்று? மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?

25 நிமிட சந்திப்பு.. 25 கோரிக்கை.. முதல்வர் பிரதமர் சந்திப்பில் நடந்தது என்ன?

25 நிமிட சந்திப்பு.. 25 கோரிக்கை.. முதல்வர் பிரதமர் சந்திப்பில் நடந்தது என்ன?

'உன்ன பாக்கணுமா, கேமராவை பார்க்கணுமா'- பும்ரா-சஞ்சனா ஐசிசி இண்டர்வியூ வைரல்..!

'உன்ன பாக்கணுமா, கேமராவை பார்க்கணுமா'- பும்ரா-சஞ்சனா ஐசிசி இண்டர்வியூ வைரல்..!

Google Maps | கூகுள் மேப் காட்டும் மேஜிக்! கொச்சியில் கடலுக்கு அடியில் புதிய தீவா?

Google Maps | கூகுள் மேப் காட்டும் மேஜிக்! கொச்சியில் கடலுக்கு அடியில் புதிய தீவா?

டாப் நியூஸ்

பிரதமர் மோடியைச் சந்தித்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

பிரதமர் மோடியைச் சந்தித்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

CBSE Class 12 Results Date: சி.பி.எஸ்.இ +2 மதிப்பெண் எப்படி கணக்கிடப்படும் தெரியுமா?

CBSE Class 12 Results Date: சி.பி.எஸ்.இ +2 மதிப்பெண் எப்படி கணக்கிடப்படும் தெரியுமா?

காவியுடை படத்தால் சர்ச்சை : எதிர்ப்புகளால் வெள்ளை உடைக்கு மாற்றப்பட்ட திருவள்ளுவர்..!

காவியுடை படத்தால் சர்ச்சை : எதிர்ப்புகளால் வெள்ளை உடைக்கு மாற்றப்பட்ட திருவள்ளுவர்..!

‛தீவு பரிசு... நோ டாட்டூ... சில்வர் ஷூ ரிட்டன்’ ப்ப்ப்பா.... என்ன மனிதரப்பா இந்த ‛ரொனால்டோ’ !

‛தீவு பரிசு... நோ டாட்டூ... சில்வர் ஷூ ரிட்டன்’ ப்ப்ப்பா.... என்ன மனிதரப்பா இந்த ‛ரொனால்டோ’ !