காளான் பசளிக்கீரை ஆம்லெட் செய்முறை

Published by: ABP NADU

முட்டை அதிகம் விரும்புபவர்களாக இருந்தீர்கள் என்றால் உங்களுக்கு இந்த ரெசிபி பிடித்தமானதாக இருக்கும். டயட் இருப்பவர்களுக்கும் எளிதான உணவாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

2 முட்டை, 4-6 பசளிக்கீரை, 4 காளான், கொத்தமல்லி, 1/2 வெங்காயம், 1 பச்சை மிளகாய், 2 tbsp பால், உப்பு, 1/4 tbsp மிளகு தூள்.

வெங்காயம், மிளகாய், காளான், பசளிக்கீரை இவை நான்கையும் நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து நன்றாக அடித்துக்கொள்ளவும்.

அதில் காய்களை சேர்க்கவும். பின் பால் சேர்த்து ஒருமுறை நன்றாக அடித்துக்கொள்ளவும்.

உப்பு மற்றும் மிளகு தூள் சேர்க்க மறந்துவிடாதீர்கள்.

சூடான பாத்திரத்தில் ஊற்றி நன்றாக வேகவையுங்கள். எண்ணெய் சேர்த்து இரண்டு பக்கங்களையும் வேகவைக்கவும்.

காளான் பசளிக்கீரை ஆம்லெட்டில் அதிகளவு இரும்புச்சத்தும் புரதமும் உள்ளது.

காலை உணவாக சேர்த்துக்கொள்வது உங்கள் டயட்டிற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.