Tanker Lorry Accident : கூட்டம் கூட்டமாக எரிபொருளை எடுத்துச்சென்ற மக்கள்.. வெடித்த டேங்கர் லாரி.. 2 பேர் உயிரிழப்பு.. 20 பேருக்கு காயம்..
மத்தியப் பிரதேசத்தின் கார்கோனில் புதன்கிழமை காலை எரிபொருள் ஏற்றி சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து இரண்டு பேர் பலி மேலும் 20 பேர் காயமடைந்தனர்.
மத்திய பிரதேசம் கார்கோனில் எரிபொருள் டேங்கர் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்ததில் 2 பேர் பலி, 20 பேர் காயம்.
இந்தூரில் இருந்து கார்கோன் நோக்கிச் சென்ற டேங்கர் லாரி, திருப்பத்தில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த சம்பவத்திற்கு முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இரங்கல் தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தின் கார்கோனில் புதன்கிழமை காலை எரிபொருள் ஏற்றி சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து இரண்டு பேர் பலி மேலும் 20 பேர் காயமடைந்தனர். பிஸ்டான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அஞ்சங்கோன் கிராமத்திற்கு அருகே காலை 6 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
MP: Fire breaks out in fuel tanker; 2 dead, over 20 injured
— ANI Digital (@ani_digital) October 26, 2022
Read @ANI Story | https://t.co/zu7mNjJass#Fire #MadhyaPradesh pic.twitter.com/WhvrO0V9eV
இந்தூரில் இருந்து கார்கோன் நோக்கி இந்த டேங்கர் சென்று கொண்டிருந்தது. இந்த டேங்கர் லாரி பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) நிறுவனத்திற்கு சொந்தமானது. டேங்கர் லாரி அஞ்சங்கோன் கிராமம் அருகே ஒரு திருப்புமுனையில் செல்லும் போது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது என அந்த ஊர் மக்கள் கூறினார்கள். டேங்கர் லாரி கவிழ்ந்ததை நேரில் காண ஊர் மக்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
கர்கோன் SDM ஓம் நாராயண் சிங் இதைப்பற்றி கூறும்போது, "கிராமத்தின் அருகே எரிபொருள் டேங்கர் கவிழ்ந்ததால், அதிலிருந்து எரிபொருளை சேகரிக்க அருகிலுள்ள கிராம மக்கள் அந்த இடத்தில் கூடினர். அவர்கள் எரிப்பொருள் எடுத்துச் செல்லும் போது டேங்கர்லாரி எதிர்பாராமல் வெடித்தது" என கூறினார். கார்கோன் எம்எல்ஏ ரவி ஜோஷி, பலத்த காயமடைந்த சுமார் 15 பேர் இந்தூரில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டதாகவும், காயமடைந்த 10 பேர் கர்கோன் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார். காயமடைந்தவர்களுக்கும், இறந்தவர்களின் குடும்பத்துக்கும் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து மத்திய பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌஹன் இரங்கல் தெரிவித்துள்ளார், அதேபோல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு விரைவில் குணம்பெற வேண்டும் என தெரிவித்தார்