Madhya Pradesh: 'நீ முஸ்லீம் தானே'.. மனநிலை பாதிக்கப்பட்ட முதியவரை தாக்கிய கொடூரன்... சடலமாக மீட்ட போலீஸ்!
பவர்லால் ஜெயினிடம், 'உன் பெயர் என்ன? முகமது தானே. உன்னுடைய ஆதார் அட்டையை காட்டு,' என்று கூறி முதியவரை கன்னத்தில் திரும்ப திரும்ப அடிக்கும் வீடியோ காட் சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது.
![Madhya Pradesh: 'நீ முஸ்லீம் தானே'.. மனநிலை பாதிக்கப்பட்ட முதியவரை தாக்கிய கொடூரன்... சடலமாக மீட்ட போலீஸ்! Madhya Pradesh: Accused Arrested For Allegedly Killing Differently-abled Man Madhya Pradesh: 'நீ முஸ்லீம் தானே'.. மனநிலை பாதிக்கப்பட்ட முதியவரை தாக்கிய கொடூரன்... சடலமாக மீட்ட போலீஸ்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/22/637b99e84ab469e7f489adad780a845a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மத்தியப் பிரதேச மாநிலத்தில் கொடூரமாகத் தாக்கப்பட்டு இறந்து கிடந்த மாற்றுத் திறனாளியின் மரணம் தொடர்பாக காவல்துறையினர் தினேஷ் குஷ்வாஹாவைக் கைது செய்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம், நீமுச் மாவட்டம், சார்சி கிராமத்தை சேர்ந்தவர் பவர்லால் ஜெயின். இவர் மனநிலை பாதித்தவர். கடந்த 15ம் தேதி ராஜஸ்தானில் உள்ள சித்தோர்கார் என்ற இடத்தில் நடந்த கோயில் திருவிழாவுக்கு சென்ற பவர்லால் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் ராம்புரா ரோடு பகுதியில் பவர்லால் ஜெயினின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது குடும்பத்தினர் இறுதி சடங்குகளை செய்த பின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இதன் பின்னர்தான் ஒருவர் பவர்லால் ஜெயினிடம், 'உன் பெயர் என்ன? முகமது தானே. உன்னுடைய ஆதார் அட்டையை காட்டு,' என்று கூறி முதியவரை கன்னத்தில் திரும்ப திரும்ப அடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பவர்லாலின் குடும்பத்தினர் உடனே காவல்துறையில் புகார் அளித்தனர்.
இந்த வீடியோ காட்சிகள் பரபரப்பானதையடுத்து மானசா காவல்துறையினர் (ஐபிசி) பிரிவு 302 (கொலை) கீழ் வழக்கு பதிவு செய்து முதியவரை அடித்த நபரை குறித்து விசாரித்தனர். விசாரணையில் அந்த நபர் மானசாவை சேர்ந்த தினேஷ் குஷ்வாஹா என்பது தெரியவந்தது.
இது குறித்து நீமுச் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சூரஜ்குமார்செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,, குஷ்வாஹாவை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வன்முறை வீடியோவில் காணப்படுவது தாம் தான் என்று குஷ்வாஹா ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இதற்கிடையே, இந்த சம்பவத்தில் தொடர்புடையவர் பாஜவை சேர்ந்தவர் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்று மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கண்டனம் தெரிவித்துள்ளார். (நேற்று) சனிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், உயிரிழந்தவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள முடியாமல் தொலைந்து போன முதியவர் எனவும் தெரிவித்தார். "அவர் மனநிலை சரியில்லாதவர் என்று அவரது குடும்பத்தினர் எங்களிடம் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் ஐபிசியின் 302 மற்றும் 304 பிரிவுகளின் கீழ் அடையாளம் காணப்பட்டு பதிவு செய்யப்பட்டார். நாங்கள் குடும்பத்தினருடன் தொடர்பைப் பேணி வருகிறோம், அவர்கள் திருப்தி அடைந்துள்ளனர்" என்று கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)