Lonavla forest: 600-க்கும் மேற்பட்டோர் காணாமல்போன லோனாவாலா மலைக்காடுகள்.. என்னதான் நடக்குது அங்க?
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மலைக்காடுகளில், கடந்த 2005-ஆம் ஆண்டிலிருந்து, தற்போதுவரை 600 க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக கூறப்படுகிறது.
லோனாவாலா மலைக்காடுகள்:
லோனாவாலா மலைக்காடுகள் மும்பைக்கும், புனேவுக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. மிகுந்த இயற்கை அழகு மிகுந்த பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இங்குள்ள டியூக்ஸ் மூக்கு முனை, டைகர் பாயிண்ட், லோஹத் கோட்டை மிகவும் பிரபலமான இடங்களாகும். இங்கு ஏராளமான சுற்றுபயணிகள் தனியாகவும் ,குழுக்களாகவும் மலையேற்றம் செல்கின்றனர்.
மாயமாகும் மனிதர்கள்:
லோனா மலைக்காடுகள் மிகவும் அடர்த்தியாக இருப்பதால், இங்கு மலையேற்றம் செல்பவர்கள் அடிக்கடி, தங்களது பாதையை மறந்து காணாமல் போய் விடுகின்றன. கடந்த 2015 முதல் 600-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக கூறுப்படுகிறது. இது போன்ற தகவல்கள் அதிகாரப்பூர்வமாக காவல்நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. ஏனென்றால் காணாமல் போனவர்கள் சில நேரங்கள் கழித்து கண்டு பிடிக்கப்படுகிறார்கள்.
மீண்டும் ஒருவர்:
இந்நிலையில் மீண்டும் ஒருவர் லோனாவ்லவில் காணாமல் போயுள்ளது, லோனாவ்ளா காடுகளின் கோர முகம் மீண்டும் தெரிய தொடங்கியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியைச் சேர்ந்த 24 வயது பொறியாளரான இர்பான் ஷா காணாமல் போயுள்ளார்.
எச்சரிக்கை:
இர்பான் ஷா காணாமல்போனது, மலையேற்றம் செய்பவர்களுக்கு மீண்டும் எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மலைக்காடுகள் பற்றிய சரியான தெளிவு இல்லாமல் இருப்பதே காணாமல் போவதற்கு காரணம் என மலையேற்ற நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
600க்கும் மேற்பட்டோர் மீட்பு:
புனே காவல்துறை மற்றும் ஷிவ்துர்க் பிரதிஸ்தான் போன்ற சமூகக் குழுக்களிடமிருந்து சேகரிக்கப்படும் தரவுகள் அடிப்படையில் , லோனாவ்ளா காடுகளில் காணாமல் போன சுமார் 600 மலையேற்றக்காரர்களை மீட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பலர் பாதிப்பு:
மலையேற்றங்களின் போதும் பலர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் பாதை மாறின் சென்றுள்ளதாகவும், பின்னர் அவர்கள் மீட்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், பலர் மலை உச்சியிலிருந்து தற்கொலை செய்து கொள்வதாகவும், சிலர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டடுஉள்ளதாகவும் கூறப்படுகிறது.பலர் அங்குள்ள தேனீக்களால் விரட்டப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அறிவுறுத்தல்:
லோனாவாலா காடுகளில் மலையேற்றம் செல்வோர் மிகுந்த முன்னெச்சரிக்கையுடனும், மலையேற்ற நிபுணர்களின் உதவியுடனும் செல்லுமாறு மலையேற்ற நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்