Abu Saifullah Nizamani: ஆர்எஸ்எஸ் தலைமையகம் மீது அட்டாக் - சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி அபு சைஃபுல்லா - 3 சம்பவங்கள்
Abu Saifullah Nizamani: இந்தியாவில் நடந்த 3 முக்கிய தாக்குதல்களில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்ட, அபு சைஃபுல்லா பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Abu Saifullah Nizamani: ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகம் மீது தாக்குதல் உட்பட 3 சம்பவங்களில், அபு சைஃபுல்லாவிற்கு தொடர்பு இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.
முக்கிய தீவிரவாதி சுட்டுக்கொலை:
லஷ்கர் - இ - தொய்பா தீவிரவாத அமைப்பின் துணை தளபதியான ரசுல்லா நிஜாமணி அல்லது அபு சைஃபுல்லா என்ற தீவிரவாதி, பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் கடந்த 2006ம் ஆண்டு அர்எஸ்எஸ் தலைமை அலுவகலத்தின் மீது நடைபெற்ற தாக்குதல் உள்ளிட்ட, இந்தியாவில் அரங்கேறிஅ மூன்று முக்கிய தாக்குதல்களில் பங்காற்றியுள்ளதாக மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. வெளியாகியுள்ள தகவல்களின்படி, மாட்லி பால்காரா சௌக் அருகே நிஜாமணி சுட்டுக் கொல்லப்பட்டார். ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாத நடவடிக்கைகளில் பங்களிப்பு காரணமாக 'அபு சைஃபுல்லா' என்ற புனைப்பெயரால் அவர் லஷ்கர்-இ-தொய்பா வட்டாரங்களில் அறியப்பட்டார்.
லஷ்கர் - இ- தொய்பாவில் முக்கிய பங்களிப்பு:
சைஃபுல்லா, முகமது சலீம் எனும் ரஜுல்லா நிஜாமணி நேபாளம் பகுதியில் லஷ்கர் - இ - தொய்பா அமைப்பை நிர்வகித்து வந்தார். இந்த அமைப்பின் தீவிரவாத நடவடிக்கைக்களுக்கு தேவையான பண வசதியுடன் ஆட்களையும் சேர்த்து கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளார். நேபாள் வழியாக இந்தியாவில் நுழைந்து லஷ்கர் - இ - தொய்பா அமைப்பினர் அரங்கேற்றும் தாக்குதலுக்கு, இவரே காரணம் என கூறப்படுகிறது. நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில் கடந்த 2006ம் ஆண்டு நடந்த தாக்குதல், 2001ம் ஆண்டு ராம்பூரில் சிஆர்பிஎஃப் முகாம் மீது நடைபெற்ற தாக்குதல் மற்றும் 2005ம் ஆண்டு பெங்களூருவில் IISC அலுவலகத்தில் நடத்திய தாக்குதலில் சைஃபுல்லாவிற்கு தொடர்பு இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.
எச்சரிக்கையை மீறி செயல்பட்ட சைஃபுல்லா:
வெளியாகியுள்ள தகவல்களின்படி, சைஃபுல்லாவிற்கு கொலை அச்சுறுத்தல் இருந்ததால், நடவடிகக்கைகளை குறைத்து வீட்டிக்குள்ளேயே இருக்க அவரது அமைப்பு வலியுறுத்தியுள்ளது. அதோடு, கூடுதல் பாதுகாப்பும் வழங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தான் கட்டுப்பாடுகளை மீறி வீட்டை விட்டு வெளியே வந்த சைஃபுல்லா சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பல்வேறு மோசமான அடையாளத்தில் நேபாளத்தில் வசித்து வந்த அவர், அதே ஊரைச் சேர்ந்த நக்மா பானு என்பவரை திருமணம் செய்து இருந்தார். அண்மையில் தான் அவர் மீண்டும் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்துள்ளார். அங்கு இருந்தபடியே லஷ்கர் - இ - தொய்பா அமைப்புக்கான ஆட்சேர்ப்பு மற்றும் நிதி திரட்டல் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்.
தொடரும் கொலைகள்:
பாகிஸ்தானில் தலைமறைவாக உள்ள தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்படுவது தொடர்கதையாகி வருகிறது. உதாரணமாக,
- ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மௌலானா மசூத் அசாரின் நெருங்கிய உதவியாளராகவும், லஷ்கர்-இ-ஜப்பாரின் நிறுவனராகவும் பாகிஸ்தான் ஊடகங்களில் அடையாளம் காணப்பட்ட தாவூத் மாலிக், வடக்கு வசிரிஸ்தானில் அடையாளம் தெரியாத நபர்களால் கடந்த 2023ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.
-
கடந்த ஆண்டு அக்டோபர் 11 ஆம் தேதி, 2016 பதான்கோட் பயங்கரவாதத் தாக்குதலில் முக்கிய சதிகாரரும், இந்தியாவின் மிகவும் தேடப்படும் குற்றவாளியுமான ஷாஹித் லத்தீப் பாகிஸ்தானின் சியால்கோட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
-
கடந்த ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி, முன்னாள் லஷ்கர்-இ-தொய்பா உறுப்பினரும் 26/11 மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் கூட்டாளியுமான முஃப்தி கைசர் ஃபரூக்கும் கொல்லப்பட்டார்.
இந்தச் சம்பவங்கள், லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பிலிருந்த மதகுரு மௌலானா ஜியாவுர் ரஹ்மானின் கொலையைப் பிரதிபலிக்கின்றன.





















